Monday 13 July 2020

செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள் - பாகம் 6

செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள்

பாகம் 6

மனோகரன் கூறுகிறார்: டிராட்ஸ்கியின் கோஷ்டிவாதப் போக்கையும், எதிர்ப்புரட்சிகர போக்குகளையும் எதிர்த்துப் போராடுவது முதன்மையான கடமையே ஆகும். அத்தகையப் போராட்டமானது ஸ்டாலினுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகவும், சுய பரிசீலனை அடிப்படையிலும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாவோ கூறியது போல தோழர் ஸ்டாலின் 70 சதவீதம் புரட்சியாளராக இருந்தார். 30 சதவீதம் தவறிழைத்தார் என்ற நிலைபாட்டிலிருந்து படிப்பினைகளைத் தொகுத்து செயல்பட வேண்டும். அத்தகைய அணுகுமுறைதான் இன்று பல்வேறு சந்தர்ப்பவாதப் போக்குகளை முறியடித்து பாட்டாளிவர்க்க கட்சியைக் கட்டியமைக்க உதவும் என்பதே சரியான பாதையாகும். அதுவே எனது நிலைபாடாகும்.
டிராட்ஸ்கியை எதிர்த்துப் போராடுவதே ஸ்டாலினின் தவறுகளிலிருந்து பாடம் கற்பதாக இருக்க வேண்டும் என்கிறார் மனோகரன். அதாவது டிராட்ஸ்கியிசத்தை எதிர்ப்பதைவிட ஸ்டாலினின் தவறுகளிலிருந்து பாடம் கற்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு வழிவகுக்கும் என்கிறார். இது அப்பட்டமான டிராட்ஸ்கிய ஆதரவும் ஸ்டாலின் எதிர்ப்புமாகும். கலைப்புவாதத்தை முறியடிக்காமல் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டமுடியாது என்ற ஏ.எம்.கே நிலைபாட்டை மூடிமறைப்பதாகும்.
லெனினியத்தின் பெயரால் ஸ்டாலின் மீதும் மாவோ மீதும் ஏ.எம்.கே.வின் மீதும் மனோகரன் நடத்தும் தாக்குதல் மார்க்சிய லெனினியத்தின் மீதான தாக்குதலாகும்.
டிராட்ஸ்கியம் என்பது போலிப் புரட்சியின் சாரம்; தோல்வி மனப்பான்மையின் சாரம்; புரட்சிகர வாய்ச்சவடால்; திருத்தல்வாதம்; கலைப்புவாதம்; எதிர்ப்புரட்சிகரவாதம்; சிண்டிகலிச திரிபு; ஏகாதிபத்திய அடிமைத் தனம்; பாசிச ஆதரவு; கதம்பக் கோட்பாட்டு வாதம்; பாராளுமன்றவாதம்; சட்டவாதம்; இடது வலது சந்தர்ப்பவாதம்; எண்ணமுதல்வாதம்; தற்புகழ்ச்சி; கோழைத்தனம்; அராஜகவாதம்; துரோகத்தனம்; மார்க்சிய லெனினியத்தின் கொடிய விரோதி. இந்த மார்க்சிய விரோத குப்பைக்கூளங்களை சவக்குழிக்கு அனுப்ப வேண்டியது நமது முதன்மையான கடமையாகும்.
  ê ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுக்கும் டிராட்ஸ்கியத்தை சவக்குழிக்கு அனுப்புவோம்!
  ê மாபெரும் மார்க்சிய-லெனினிய ஆசான் ஸ்டாலின் சாதனைகளை உயர்த்திப் பிடிப்போம்!
  ê மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை ஏ.எம்.கே.போதனையை உயர்த்திப் பிடிப்போம்! அமைப்பை பாதுகாப்போம்!!
முற்றும்.
சமரன்,

மார்ச், 2020

No comments:

Post a Comment