Wednesday 15 July 2020

ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு பிறந்த கோவிட்-19: பின்புலத்தில் சர்வதேச மருத்துவ அரசியல்



ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு பிறந்த கோவிட்-19
பின்புலத்தில் சர்வதேச மருத்துவ அரசியல்


சீனாவின் வூஹான் நகரத்தில் டிசம்பர் மாத துவக்கத்தில் பரவத் துவங்கிய கொரோனா தொற்றுநோய் ஜனவரி மாத இறுதிக்குள் பெரும்பாலான உலக நாடுகளுக்கு பரவின. தென் கொரியா (8/1), தாய்லாந்து (13/1), அமெரிக்கா (15/1), ஜப்பான் (15/1), பிரிட்டன் (20/1), வட அமெரிக்கா (20/1), ஓசியான (20/1), தைவான் (20/1), ஹாங்காங் (23/1), பிரான்சு (24/1), ஜெர்மனி (27/1), இந்தியா (30/1), இத்தாலி (31/1), ஸ்பெயின் (31/1), ஆப்பிரிக்கா (14/2), ஈரான் (19/2), சிங்கப்பூர் (22/1), தென் அமெரிக்கா (26/2), பாகிஸ்தான் (26/2) போன்ற நாடுகளில் பெரும்பாலானவற்றில் ஜனவரி மாதத்திலேயே கொரோனா தொற்றுநோய் பரவிவிட்டன. ஆனால் உலக சுகாதார நிறுவனம் 30.01.2019 அன்று சர்வதேச அளவிலான பொது சுகாதார நெருக்கடிநிலைஎன்றும், 2020 மார்ச் 11 அன்று உலகளாவிய தொற்று நோய் (Pandemic) என்றும் அறிவித்தது.

ஜனவரி மாத இறுதியிலியே (30.01.2019) உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய தொற்றுநோய் (Pandemic) என்று அறிவிக்காமல், பொது சுகாதார நெருக்கடி நிலை என்று அறிவித்தது. ஏன்? 40 நாட்கள் கழித்தே மார்ச் 11 அன்றுதான் உலகளாவிய தொற்று நோய் என மிகவும் காலதாமதமாகவே அறிவித்தது. அதற்குள்ளாகவே உலக நாடுகளில் நோய்ப் பரவலும், மரணங்களும் அதிகரித்திருந்தன. இந்த கால தாமத அறிவிப்பிற்கும், உலக சுகாதார நிறுவனத்திற்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் குறித்தும் இக்கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்ப்போம்.

ஆனால், இவ்வளவு காலதாமதமான எச்சரிக்கைக்குப் பிறகும் கூட அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகளும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற காலனிய நாடுகளும் மக்கள் மீது எவ்வித அக்கறையுமின்றி எந்தவொரு தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்தன. சர்வதேச பயணிகளை பரிசோதித்தல், சர்வதேச போக்குவரத்தைத் தடைசெய்தல், ஊரடங்கு, சமூக இடைவெளி, கைகழுவும் முறைகள், நோயாளிகளைக் கண்டறிதல், பரிசோதித்தல், தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவம் வழங்குதல் போன்ற தொற்றுநோய் தடுப்பு முறைகளை முறையாக அவை பின்பற்றவில்லை. ஒரு திடீர் கொள்ளை நோய் பேரிடரை எதிர்கொள்ள அவை வக்கற்று இருந்தன.

ஜனவரி மாத இறுதியிலியே உலகளாவிய தொற்று நோய் என அறிவித்து, சர்வதேச விமானம், கப்பல், தரைவழி போக்குவரத்துகளை இரத்து செய்திருந்தால், நோய் இந்த அளவிற்கு உலகம் முழுதும் சமூக பரவலாக மாறியிருக்கும் வாய்ப்பு குறைவே.

அமெரிக்க அதிபர் பாசிசக் கோமாளி டிரம்ப் இது வெறும் ஃபுளு காய்ச்சல்; ஈஸ்டருக்குள் ஒழித்து விடலாம்; கிருமி நாசினியை ஊசியாக செலுத்தினால் கொரோனா ஓடிவிடும்என்று ஹாலிவுட் திரைப்படத்தின் சூப்பர் மேன்போல கோமாளித்தனமான வசனங்களை பேசிக் கொண்டிருந்தார். பிரிட்டன் அதிபர் நோய் வந்தால் வரட்டும், மக்களின் குழு நோய் எதிர்ப்பு சக்தி (Herd Immunity) அதிகரிக்கும்" என்று உளறிக் கொட்டினார்.

உண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ துறையே இல்லை என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம் ஆகும். அது மட்டுமின்றி அந்நாடுகளில் சுகாதாரப் பணிகள், மருத்துவம், மருந்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி தனியார்மயம், வணிகமயம் மற்றும் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் காப்பீடு நிறுவனங்களின் பிடியில் உள்ளன. ஆகவேதான் கொரோனாவை தடுக்கவும் முடியாமல், நோயாளிகளுக்கு மருத்துவமும் செய்ய முடியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றன. இதுவரை கொரோனா நோயால் உலகம் முழுதும் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,700 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா, ஏகாதிபத்திய நாடுகளின் வல்லரசு முகமூடியை கிழித்து தொங்க விட்டுள்ளது. மோடி கும்பலின் டிஜிட்டல் இந்தியாவின் வெற்று வாய்ச்சவடால்களை அம்பலப்படுத்தியுள்ளது. பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவம், சுகாதாரப் பணிகள் மருத்துவம், கல்வி மற்றும் ஆராய்ச்சியை அரசுகள் கைகழுவியதும், அத்துறைகளை தனியார்மயம், வணிகமயம் மற்றும் கார்ப்பரேட்மயமாக்கியதுமே உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவலுக்கும், மரணங்களுக்கும் முழுமுதற் காரணமாகும். மேலும் இந்த கொள்ளை நோயானது உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கைகள் படுதோல்வி அடைந்துவிட்டன என்பதையே உள்ளங்கை நெல்லிக்கனி போல எடுத்துக் காட்டுகின்றது.

உலக சுகாதார நிறுவனம் 11.3.2020 அன்று உலகளாவிய பெருந்தொற்று என்று அறிவித்த பிறகும் கூட உலக நாடுகள் விழித்துக் கொள்ளவில்லை. அப்போதாவது சர்வதேச விமான-கப்பல்-தரைவழி போக்குவரத்து வழிதடங்களை மூடி, இறுதியாக வந்த சர்வதேச பயணிகளையும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களையும் (contacts) ஆய்வகப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி மருத்துவம் வழங்கியிருந்தால், உலக நாடுகள் இவ்வளவு பெரிய பாதிப்புகளையும், மரணங்களையும் எதிர்கொள்ள நேர்ந்திருக்காது. சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் உலக நாடுகளும், மோடி அரசும் செய்யத் தவறிவிட்டன. கொரோனாவைத் தடுப்பதில் படுதோல்வி அடைந்துவிட்டன.

கொரோனா உலக முதலாளித்துவ நெருக்கடியை ஆழப்படுத்தி, ஏகாதிபத்திய முரண்பாடுகளை கூர்மையடையச் செய்துள்ளது. இது ஏகாதிபத்திய நாடுகளின் காலனியாதிக்கம், உலக மறுபங்கிட்டிற்கான பனிப்போர் மற்றும் பாசிசத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.

கொரோனாவைத் தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகள்

சர்வதேச பயணிகளை பரிசோதித்தல், ஊரடங்கு, சமூக இடைவெளி, நோய் தடுப்பு முறைகள் போன்றவற்றை மோடிகும்பல் முறையாக செயல்படுத்தவில்லை. ஆய்வகப் பரிசோதனை செய்வதுதான் முதன்மையானது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்த பிறகு, பரிசோதனை செய்வதற்கான கருவிகளை இறக்குமதி செய்தல் - அதன் இலாப விகிதம் இவற்றைத்தான் மோடி அரசு கணக்கிட்டுக் கொண்டிருந்ததே ஒழிய உண்மையாக மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவில்லை. அவரது உரைகள் அனைத்தும் வெற்று வாய்ச் சவடால்களாகவே இருந்தன. கைதட்டுதல், பட்டாசு வெடித்தல், விளக்கேற்றுதல் போன்ற மூட நம்பிக்கைகளை பரப்பி மக்களை கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்தும் பாசிசக் கோமாளியாகவே செயல்பட்டார் மோடி. ஊரடங்கையும் கூட எவ்வித முன் தயாரிப்புமின்றி கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை உள்நாட்டு அகதிகளாக மாற்றும் வகையில் அறிவித்தார். தென் ஆப்பரிக்க நாடு கூட 3 நாட்கள் அவகாசம் அளித்த பின்பே ஊரடங்கை அறிவித்தது. ஆனால் மோடியோ 4 மணி நேர அவகாசம் மட்டுமே தந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பைப் போல மாநில அரசுகளை கலந்துகொள்ளாமல் அறிவித்தார். தமிழக எடப்பாடி அரசோ மோடி கும்பலுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருந்தது.

பொது சுகாதார நெருக்கடி நிலை என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) 30.1.2020 அன்று அறிவித்த போது மோடி என்ன செய்து கொண்டிருந்தார்?

பிப்ரவரி மாதத்தில் மோடி-அமித்ஷா கும்பல் ஒரு இலட்சம் பேரை குஜராத்தில் ஓரிடத்தில் குவித்து வைத்து டிரம்பிற்கு சிவப்புக் கம்பளம் விரித்து அவரைக் கட்டியணைத்துக் கொண்டும், அவரது காலை நக்கிக் கொண்டும் இருந்தது. பிறகு அதைத் தொடர்ந்து டில்லியில் மதக் கலவரங்களை திட்டமிட்டு தூண்டிவிட்டு இசுலாமியர்களின் இரத்தம் குடித்துக் கொண்டிருந்தது; பிறகு மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு 22 எம்.எல்.ஏக்களை விலை பேசி மாமாவேலை பார்த்துக் கொண்டிருந்தது. அவ்வாறாக சில பல மாமா வேலைகளை முடித்துவிட்டு மெல்ல தூக்கம் கலைத்து சர்வதேச பயணிகளுக்கான பரிசோதனை, கட்டுப்பாடுகளை ஆமை வேகத்தில் விதிக்க துவங்கியது. இதுவே கொரோனா நோய் பரவலுக்கு முக்கிய காரணமாகும். ஜனவரி 28 அன்று கேரளாவில் இந்தியாவின் முதல் தொற்று நோயாளி கண்டறியப்பட்டார்.

மோடி அரசின் ஆமை வேக நடவடிக்கைகள் வருமாறு:

26.01.2020: சீனாவில் 985 கொரோனா நோயாளிகள் மற்றும் 41 மரணங்கள்; ஜப்பான், நேபாளம், பிரான்சு, தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் 29 கொரோனா நோயாளிகள் என்றிருந்த சூழலில், இந்நோய் மனிதரிடமிருந்து மனிதருக்கு சுவாசக் குழாய் மூலம் பரவும் தன்மைக் கொண்டது என்று கூறி சீனாவிற்கு அத்தியாவசியமற்ற பயணம் அனைத்தையும் இரத்து செய்யுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது. (அதாவது சீனாவிற்கு அத்தியாவசியமான பயணங்களை அனுமதித்தது).

05.02.2020: சீனாவில் 24,363 நோயாளிகள் - 491 மரணங்கள்; 24 நாடுகளில் 191 நோயாளிகள் மற்றும் இந்தியாவில் 3 நோயாளிகள் என்றிருந்த சூழலில், இந்தியப் பயணிகளை சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு மோடி அரசு கேட்டுக் கொண்டது. சீனாவிற்கு சென்றுள்ள பயணிகள் திரும்பி வருகையில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவித்தது. (பிற நாட்டுப் பயணிகளின் வருகை கட்டுப்படுத்தபடவில்லை)

26.02.2020: சீனாவில் 78,191 நோயாளிகள் - 2718 மரணங்கள்; 37 நாடுகளில் 2,918 நோயாளிகள் 44 மரணங்கள்; இந்தியாவில் 3 நோயாளிகள் என்றிருந்த சூழலில், சீனாவிலிருந்து வருபவர்களுக்கு புதிய விசா அவசியம் எனவும் சீனா மட்டுமன்றி, சிங்கப்பூர், ஈரான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டது. (அதாவது அந்நாடுகளுக்கு அத்தியாவசியமான பயணங்களையும் பிற நாட்டு பயணங்களையும் அனுமதித்து) இந்நாடுகளிலிருந்து திரும்புவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலாம் என்றது. (ஆனால் அது முறையாக கடைபிடிக்கப்படவில்லை)

02.03.2020: சீனாவில் 80,174 நோயாளிகள் - 2915 மரணங்கள், 64 நாடுகளில் 8,774 நோயாளிகள், 128 மரணங்கள் இந்தியாவில் 5 நோயாளிகள் என்றிருந்த சூழலில், தனிமைப்படுத்தப்பட வேண்டிய பட்டியலில் ஜப்பானையும் சேர்த்தது.

03.03.2020: சீனாவில் 80,304 நோயாளிகள் - 2946 மரணங்கள், 72 நாடுகளில் 10,565 நோயாளிகள், 166 மரணங்கள், இந்தியாவில் 6 நோயாளிகள் என்றிருந்த சூழலில், 03.3.2020 க்கு முந்தைய தேதியில் இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டன. மேற்கண்ட நாடுகளுக்கும் சீனாவிற்கும் பயணம் செய்த, வழங்கப்பட்ட பயணிகளின் விசாக்கள் இரத்து செய்யப்பட்டன. அத்தியாவசியப் பயனங்களுக்கு புதிய விசாக்கள் வழங்கப்பட்டன. (அதாவது தற்பொழுதும் அத்தியாவசியப் பயணங்கள் அனுமதிக்கப்பட்டன)

05.03.2020: சீனாவில் 80, 566 நோயாளிகள் - 3015 மரணங்கள், 85 நாடுகளில் - 14,759 நோயாளிகள், 266 மரணங்கள், இந்தியாவில் 30 நோயாளிகள்; என்றொரு சூழலில் 10.3.2020 தேதியிலிருந்து இத்தாலி, தென் கொரியாவிற்கு சென்று வந்த பயணிகள் கோவிட் 19 நோய் இல்லை என்பதற்கான சான்றிதழ் ஒப்படைப்பது அவசியமாக்கப்பட்டது. (பிற நாடுகளுக்கு அவசியமாக்கப்படவில்லை)

06.03.2020: சீனாவில் 80,711 நோயாளிகள் - 3,045 மரணங்கள், 88 நாடுகளில் - 17,487 நோயாளிகள் - 335 மரணங்கள், இந்தியாவில் 31 நோயாளிகள் என்ற நிலையில், மேற்கூறப்பட்ட பயண ஆலோசனைகள் அனைத்தையும் ஒருங்கினைத்து மீண்டும் ஒருமுறை அறிவித்தது. கூடுதலாக விலாசம், தொலைபேசி எண், பெயரை உள்ளடக்கிய சுய விவரப் பட்டியலை அனைத்து சர்வதேச பயணிகளும் அளிக்குமாறு கேட்கப்பட்டது. (அதாவது இதுவரை இந்த விவரங்கள் கேட்கப்படவில்லை). மேலும் முதன்முதலாக அனைத்து வாயில்களிலும் சுகாதார பதிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது. (அதாவது நடைமுறைப்படுத்தப்படவில்லை)

10.03.2020: சீனாவில் 80,924 நோயாளிகள் - 3,045 மரணங்கள், 109 நாடுகளில் 32,778 நோயாளிகள் - 872 மரணங்கள், இந்தியாவில் 63 நோயாளிகள்; என்றொரு சூழலில், சீனா, ஹாங்காங், கொரியன் ரிபப்ளிக், ஜப்பான், இத்தாலி, தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், மலேசியா, பிரான்ஸ், ஸ்பெயின், மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சென்று வந்த அனைத்து பயணிகளும் வந்த தேதியிலிருந்து 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என கோரப்பட்டது. (அதாவது தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்படவில்லை) 01.02.2020 அன்றும் அதற்கு முந்தைய தேதியும் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும், 01.02.2020 க்கு பிறகு இந்நாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட வழக்கமான விசாக்களும் இரத்து செய்யப்பட்டன.

சர்வதேச கப்பல் போக்குவரத்து - கப்பல் பயணிகளை அதுவரை கண்டு கொள்ளாத அரசு, முதன்முதலில் 10.03.2020 அன்றுதான் முதல் எச்சரிக்கையை விடுத்தது. 01.02.2020 லிருந்து கொரோனா பாதித்த நாடுகளுக்கு கப்பல் பயணம் மேற்கொண்டவர்கள் இனி இந்திய துறை முகங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவித்தது. சீனா, ஹாங்காங், மெக்கா , ஈரான், தென் கொரியா, இத்தாலி (அ) பாதிப்படைந்த எந்தவொரு நாட்டிலிருந்தும் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

11.03.2020: சீனாவில் 80,955 நோயாளிகள் - 3,162 மரணங்கள், 113 நாடுகளில் 37,364 நோயாளிகள் - 1,130 மரணங்கள், இந்தியாவில் 70 நோயாளிகள் என்றிருந்த சூழலில், உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய பெருந்தொற்றுஎன காலம் கடந்து அறிவித்தது. அதற்குப் பிறகுதான் முதன் முதலில் சுகாதார அமைச்சரின் தலைமையில் உயர் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அரசியல்-அதிகாரம் சார்ந்த அலுவலக ரீதியானது தவிர, பிற அனைத்து விசாக்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லாத பயணச் சலுகைகளும் 13.03.2020 முதல் 15.04.2020 வரை இரத்து செய்யப்பட்டன. (வெளிநாடு வாழ் இந்தியர்கள் (OCI) அதுவரை அனுமதிக்கப்பட்டு வந்தனர்). சீனா, இத்தாலி, ஈரான், கொரியன் ரிபப்ளிக், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து வரும் சர்வதேச பயணிகள் மற்றும் இந்தியப் பயணிகள் 15.02.2020 க்கு பிறகு வந்தவர்கள் 13.03.2020-லிருந்து 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பே அவர்களிடமிருந்து பிறருக்கு நோய் பரவியிருக்க வாய்ப்புண்டு என்பதை பற்றி அரசு சிந்திக்கவேயில்லை.

மேலும், நோய் தொற்றியது முதல் நோய் அரும்பும் காலம் வரை அதாவது 14 நாட்களில் ஒருவருக்கு எந்த அறிகுறியும் இருக்காது; ஆனால் அவரது உடலில் வைரஸ் இருக்கும்; அது மற்றவருக்கு பரவவும் செய்யும் என்பது பற்றிய தொற்றுநோய் குறித்த அடிப்படை புரிதலின்றி மத்திய மாநில அரசுகள் செயல்பட்டன. சர்வதேச பயணிகளுக்கு வெப்பநிலை அளவீடு (Thermal Screening) மட்டுமே செய்யப்பட்டது. அதாவது நோய் அறிகுறி உடையைவர்கள் மட்டுமே கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். நோய் அறிகுறியற்ற நோய் தொற்றுடையோர் சமூக பரவலுக்கு அனுமதிக்கப்பட்டனர். 11.03.2020 அன்றுதான் சர்வதேச தரை வழி போக்குவரத்தும் கண்காணிக்கப்பட்டு பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டன.

13.03.2020: சீனாவில் 80,991 நோயாளிகள் - 3,180 மரணங்கள், 122 நாடுகளில், 51,767 நோயாளிகள் - 1,775 மரணங்கள், இந்தியாவில் 91 நோயாளிகள் என்ற நிலையில்; பங்களாதேஷ், பூட்டான், நேபாள், மியான்மர் போன்றவற்றில் 368, எல்லைகளைப் பகிரும் 8 மாநிலங்களில் 20 வாயில்கள் 15.03.2020 லிருந்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. (அதாவது 14.03.2020 வரை இந்த நாடுகளிலிருந்து பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்). கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட 7 நாடுகளுக்கும் பயணம் செய்தவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

14.03.2020: சீனாவில் 81,621 நோயாளிகள் - 3,194 மரணங்கள், 134 நாடுகளில் 61,513 நோயாளிகள் - 2,198 மரணங்கள், இந்தியாவில் 107 நோயாளிகள் என்றொரு சூழலில், 16.03.2020லிருந்து இந்திய-பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. செக் போஸ்ட் வழியாக சென்ற ஜ.நா மற்றும் பிற அரசியல்வாதி-அதிகாரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

16.03.2020: சீனாவில் 81,077 நோயாளிகள் - 3,218 மரணங்கள், 150 நாடுகளில் 86,438 நோயாளிகள் - 3,388 மரணங்கள், இந்தியாவில் 119 நோயாளிகள்; இந்தச் சூழலில், 18.3.2020-லிருந்து ஐக்கிய அரபு எமிரகம், கதார், ஓமன், குவைத் போன்ற நாடுகளிலிருந்து வரும் (அ) நாடுகள் வழியாக வரும் பயணிகள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டனர். ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக அமைப்பு, துருக்கி, பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு பயணிகள் 18.03.2020 லிருந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. (அதாவது 18.3. வரை அனுமதிக்கப்பட்டனர்)

17.03.2020: 158 நாடுகளில் 1,79,111 நோயாளிகள் - 7,426 மரணங்கள், இந்தியாவில் 137 நோயாளிகள் என்றிருந்த நிலையில், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா விலிருந்து பயணிகள் வருவது தடை செய்யப்பட்டது. (அதுவரை தடை செய்யப்படவில்லை).

18.03.2020: 159 நாடுகளில் 1,91,127 நோயாளிகள் - 9,807 மரணங்கள், இந்தியாவில் 151 நோயாளிகள் என்றொரு சூழலில், நோய் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். பாதிப்படைய வாய்ப்பற்றவர்கள் அல்லது அறிகுறியற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். (இப்பொழுதும்கூட நோய் அறிகுறியற்ற ஆனால் நோய்த் தொற்றுடையவர்கள் (Asymptomatic Carriers) பற்றி அரசு சிந்திக்கவேயில்லை).

19.03.2020: 166 நாடுகளில் 2,09,839 நோயாளிகள் - 8,778 மரணங்கள், இந்தியாவில் 180 நோயாளிகள் என்று பரவியிருந்த சூழலில்; 22.3.2020, 20:01 GMT லிருந்து சர்வதேச விமான போக்குவரத்து அனைத்தும் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. (இது ஜனவரி 30 அன்றே செய்திருக்கப்பட வேண்டும்).

20.03.2020: 172 நாடுகளில் 2,34,073 நோயாளிகள் - 9840 மரணங்கள், இந்தியாவில் 180 நோயாளிகள் என்றொரு நிலைமையில் துறைமுகங்கள் தொற்றுநோய் தடுப்புமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், சரக்கு மற்றும் பெட்ரோல் டீசல் சப்ளையை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது.

மார்ச் 24ம் தேதிதான் 25ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கை அறிவித்தார் மோடி.

மேற்கூறப்பட்ட மத்திய அரசின் ஆமை வேக அறிவிப்புகள், மெத்தனமான நடவடிக்கைள், போன்றவையே இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் தீவிரம் பெற்று சமூகப் பரவலாக மாறிப் போனதற்கான முக்கிய காரணமாகும். சர்வதேச விமான-கப்பல்-தரை வழி போக்குவரத்துகளை ஜனவரி இறுதியே தடை செய்து, இறுதியாக வந்தவர்கள் அனைவரையும் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியிருந்தால் நோய் தொற்று சமூக பரவலாக மாறியதை தடுத்திருக்கலாம். இம்முறையைத்தான் தைவான், வடகொரியா, தென்கொரியா, ஹாங்காங், கியூபா போன்ற நாடுகள் செயல்படுத்தி கொரோனாவின் சமூகப் பரவலை தடுப்பதில் வெற்றி கண்டுள்ளன.

இது குறித்து, வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த புகழ்பெற்ற நுண்ணுயிரியல் வல்லுநர் (Virologist) திரு. டி.ஜேக்கப் ஜான் கூறுவதாவது:

இந்தியா முக்கிய காலத்தை வீணடித்துவிட்டது; ஜனவரி துவக்கத்திலியே பிரச்சினையின் அபாயத்தை உணர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெரும்பாலான தடுப்பு நடவடிக்கைகள் ஜனவரி மாதத்திலேயே துவங்கியிருக்கப்பட வேண்டும். இந்தியா முன்னெச்சரிக்கையோடு இயங்கவில்லை; நிலைமைகளுக்கு ஏற்றவாறு வினையாற்றியது (Reactive) அவ்வளவே. அதன் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் இல்லை; இந்தியா கதாநாயக கத்திச் சண்டையில் மூழ்கியிருந்ததுஎன்கிறார்.

ஆம். பாசிசக் கோமாளி மோடி கைதட்டுங்கள்; விளக்கேற்றுங்கள்; கொரோனா ஓடிவிடும் என்றெல்லாம் கதாநாயக பிம்பத்தை கட்டியமைத்துக் கொண்டு மக்களை கொண்டாட்ட மன நிலைக்கு மாற்றிக் கொண்டிருந்தார். அது ஒரு பாசிஸ்ட்டின் மனோ நிலை.

ஜேக்கப் ஜான் தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சமூகப் பரவல் துவங்கி விட்டது; தடுப்பு முறைகள் மாற்றப்பட வேண்டும்; சர்வதேச பயணிகளை பரிசோதிக்கும் முயற்சிகள் சொற்ப அளவே உள்ளனஎன்கிறார்.

சர்வதேச பயணிகளுக்கு இறுதி வரை வெப்பநிலை பரிசோதனை (Thermal Screening) மட்டுமே செய்யப்பட்டது. அதாவது காய்ச்சல் உள்ளவர்களை மட்டுமே பரிசோதித்து தனிமைப்படுத்தும் அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது. நோய் அரும்பும் காலம் (Incubation Period) பற்றியும், அக்காலகட்டத்தில் இருப்பவர்கள் உடலில் வைரசைக் கொண்டிருந்தாலும் அறிகுறிகள் இல்லாமல் (Carrier) இருப்பர் என்ற (அறிகுறிகள் வெளிப்பட 5 முதல் 14 நாள் வரை ஆகலாம்) அடிப்படை மருத்துவ அறிவு கூட இல்லாமல் தான் மத்திய அரசு செயல்பட்டது. அவர்களை அனுமதித்து சமூக பரவலுக்கு வித்திட்டது. மாநில அரசுகளின் செயல்பாடுகளும் இவ்வாறே இருந்தன.

சர்வதேச பயணிகளை வெப்பநிலை பரிசோதனை செய்வதை மட்டுமே ஒரே தடுப்பு நடவடிக்கையாக மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்தின. முதலில் சீனாவிலிருந்து வருபவர்களையும், பிறகு குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வருபவர்களையும், இறுதியாக அனைத்து சர்வதேச பயணிகளையும் மத்திய, மாநில அரசுகள் வெப்பநிலை பரிசோதனைக்கு மட்டுமே உட்படுத்தின. இந்த வெப்பநிலை பரிசோதனை (Thermal Screening) யின் நோக்கம் நோய் அறிகுறியுள்ள அதாவது காய்ச்சலுடையவர்களை மட்டுமே கண்டறிவதே ஆகும். இதன் மூலம் சுமார் 46.5% நோய் தாக்கிய பயணிகளை கண்டறிய முடியாது என்கிறது ஓர் ஆய்வு. எவ்வளவு சரியாக பரிசோதனை செய்தாலும் அது 50% க்கும் மேற்பட்ட நபர்களை தவற விட்டுவிடும் என்கிறது மற்றொரு ஆய்வு: காரணம் நாம் ஏற்கனவே கூறியவாறு நோய் அரும்பும் காலமான (Incubation Period) 0-14 நாட்களில் நோய் பாதித்த ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிப்படாமல் இருக்கும். அக்காலத்தில் இருக்கும் நோயாளிகளை இந்த வெப்பநிலை பரிசோனை (அ) தெர்மல் ஸ்கிரீனிங் தவறவிட்டுவிடுகின்றன. இவர்கள் எளிதாக பிறருக்கு நோயை கடத்திவிடும் ஆபத்து உண்டு. இது பரவலான சமூகப் பரவலுக்கு இட்டுச் சென்றுவிடும். இதன் காரணமாகவே ஊரடங்கிற்குப் பிறகும் சமூகப் பரவலின் காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது. ஆனால் சமூக பரவல் இல்லை என்று மத்திய மாநில அரசுகள் மூடி மறைக்கின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தைச் (ICMR) சேர்ந்த சந்திப் மண்டல் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பரவலைத் தாமதமாக்க வேண்டுமெனில், நாட்டிற்கு வரும் நோய் அறிகுறியற்றவர்கள் உள்ளிட்ட அனைவரையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் (IJMR) தெரிவித்துள்ளது.

மோடி அரசின் வெப்பநிலை பரிசோதனைஎன்ற செயல்தந்திரம் தவறானது என்று விஞ்ஞான ஆய்வுகள் ஐயத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளன. காரணம் அது நோய் அறிகுறி உடையவர்களை மட்டுமே கணக்கில் கொள்கிறது. மேலும் இது நோய் அறிகுறியற்ற பயணிகள் சமூகத்திற்குள் கண்காணிக்காமல் வாழ அனுமதிகப்படுகின்றனர். நோய் அறிகுறிகள் வெளிப்பட்ட பின்பு அவர்களையும், அவர்களது தொடர்பாளர்களையும் மத்திய, மாநில அரசுகள் தேடி விழிபிதுங்குகின்றன.

வெப்பநிலை பரிசோதனைகளும் கூட நோய்தாக்கிய சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டன. பெரும்பாலான விமானங்களும், விமான நிலையங்களும் கொரோனா தொற்றுநோயின் மறைமுக கடத்திகளாக (Carriers) திகழ்ந்தன.

இந்தியாவில் முதல் தொற்று கேரளாவில் தான் துவங்கியது. கேரளாவில் பெரும்பாலான நோய் தொற்றுக்கு காரணம் வளைகுடா நாடுகளிலிருந்து கேரளாவிற்கு திரும்பியவர்கள் அனைவரும் கறாராக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதே. துபாய், அபுதாபி, தோஹா மற்றும் வளைகுடா நாடுகளில் நோய் தொற்று பரவத் துவங்கிய பிறகும் அங்கிருந்து வரும் விமான போக்குவரத்துக்களை கேரளா தடை செய்யவில்லை. வந்தவர்களையும் வெப்பநிலை பரிசோதனை மட்டுமே செய்தது. அனைவரையும் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தனிமைப்படுத்தியிருந்தால் இத்தனை பேருக்கு (482) பரவியிருப்பதை தடுத்திருக்கலாம். இதை ஜனவரி மாதத்திலியே கேரள அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் கொரோனாவை தடுக்க தவறிவிட்டது. தொற்றுக்குப் பிறகு விழித்துக் கொண்டு கட்டுப்படுத்த துவங்கியது. பாரம்பரிய மருத்துவ முறைகளை அமல்படுத்தி நிவாரணப் பணிகளையும் முறைப்படுத்தியது. ஆனால் கேரளாவிலுள்ள புலம்பெயர் தமிழ் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். கேரளாவில் செவிலியர்கள் சுய பாதுகாப்பான உபகரணங்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி போராட்டம் நடத்தினர். ஒரு பிற்போக்கான தரகு முதலாளித்துவ அரசும் கூட நிவாரணப் பணிகளையும், நோய் தடுப்பு முறைகளையும் சரிவர செய்ய முடியும் என்பதற்கு கேரள அரசு உதாரணம் ஆகும். ஒரிசாவும் கூட நோயை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. ஆனால் மோடி கும்பலின் எடுபிடி எடப்பாடி அரசோ நிவாரணப் பணி, தடுப்பு முறை போன்றவற்றை சரிவர செய்யவில்லை. சமூகப் பரவலை மூடி மறைக்கிறது; நிவாரணப் பணிகள் பெருப்பாலானவர்க்கு போய் சேரவில்லை. குஜாராத் வளர்ச்சிமுழுக்க சுத்தமாக அம்பலப்பட்டுப் போயுள்ளது. அதிகளவு நோயாளிகளின் (3,548) எண்ணிக்கையும், மரண விகிதமும் (162) மோடியின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது.

தமிழக அரசின் மெத்தனம்

உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11 அன்று உலகளாவிய தொற்றுநோய் என்று அறிவித்த பிறகும் கூட மார்ச் இறுதிவரை அதன் ஆபத்தை உணராமல் தூங்கிக் கொண்டிருந்தது தமிழக அரசு. மார்ச் 31 ம் தேதி 67 நோயாளிகள் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான போதுதான் தமிழகத்தின் சுகாதார செயலர் கடினமான நாளாக உள்ளது” (been a tough day) என்று டிவிட்டரில் பதிவிட்டார்.

தமிழகத்தில் ஆய்வகப் பரிசோதனைகள் குறைவாகவே செய்யப்பட்டன (ஏப்ரல் 2ந் தேதிபடி 3,272; 6.7.20 தேதியின் படி சுமார் 13 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் மக்கள் தொகையான 7.50 கோடியுடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவே. இந்திய அளவில் ஒரு கோடி பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது). எனவே ஊரடங்கிற்குப் பிறகும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே சென்றன. புது டில்லியிலிருந்து சென்னைக்கு வந்த நபர் தொற்றுநோய்க்கு ஆளாகியிருந்தார். இதுவே சமூகப் பரவலுக்கான முதல் உதாரணமாகும். டெல்லி நிஜாமுதீன் ஜமாத்திற்கு சென்று வந்தவர்கள் மார்ச் 30 வரை தேடி பரிசோதிப்பதற்கு எவ்வித முயற்சியையும் தமிழக அரசு எடுக்கவில்லை. டெல்லி தப்லிக் மாநாடு மார்ச் 13-15 வரை நடைபெற்றது. மார்ச் 11 உலகளாவிய பெருந்தொற்று என அறிவிக்கப்பட்ட பிறகும் இம்மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்தது. மோடி அரசே இவ்வாறு அனுமதித்துவிட்டு பிறகு இசுலாமியர்தான் நோயை பரப்புவதாக மத வெறி பிரச்சாரத்தை, இசுலாமிய வெறுப்பை RSS இந்து முன்ணணி போன்ற மதவெறி கும்பல்கள் மூலம் கட்டியமைத்தது. கொரோனாவை தடுக்க முடியாத வக்கற்றதனத்ததை மூடி மறைக்கப் பார்த்தது.

இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா, கிர்கிஸ்தான், சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்தும் விருந்தினராக கலந்துகொண்டனர். இந்நாடுகளில் அந்த நேரத்தில் நோய் பரவல் உச்சத்திலிருந்தது. ஆனாலும் மோடி கும்பல் இந்த மாநாட்டிற்கு அனுமதி அளித்தது. சுமார் 200 பேர் மார்ச் 8ம் தேதி வாக்கிலியே டெல்லி வந்தடைந்து விட்டனர். டெல்லி கெஜ்ரிவால் அரசின் செயலற்றதனத்தையே இது காட்டுகிறது. ஏனெனில் டெல்லி அரசு மக்கள் பெருந்திரளாக கூடுவதை மார்ச் 13 அன்று தடை செய்திருந்தது. அதன் பிறகும் உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டு மாநாடு நடைபெற்றது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டெல்லி மாநாடு முடிந்து 3 நாட்கள் கழித்துதான் அதாவது மார்ச் 18ம் தேதிதான் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மார்ச் 10ம் தேதி குறிப்பிடத் தக்க அளவில் நோயாளிகள் உள்ள குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்துதல் அறிவுறுத்தப்பட்டது. மார்ச் மாத துவத்தத்தில் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு ஆட்படுத்தியிருந்தால், டெல்லி மாநாட்டை அனுமதிக்காமலிருந்திருந்தால் அத்தகையதொரு தீடீர் சமூக தொற்றை தடுத்திருக்க முடியும். மகாராஷ்டிரா அரசு தப்லிக் ஜமாத்திற்கு அனுமதி மறுத்ததை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. இதே போன்று அனுமதி மறுத்திருந்தால் நோய்தொற்று எண்ணிக்கை அதிகம் அடைந்திருக்காது. ஆனால் அனுமதி தந்துவிட்டு பாசிச மோடி அரசும் அதன் எடுபிடி தமிழக அரசும் இசுலாமியர்கள் மீது பழிபோட்டது.

ஏப்ரல் 1ம் தேதி தமிழகத்தின் சுகாதார செயலாளர் திருமதி பீலா ராஜேஷ் (Beela Rajesh) “டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி விட்டோம். 658 பேரில் 108 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 515 பேர் அடையாளம் காணப்பட்டு கண்டறிந்துவிட்டதாகவும் கூறினார்.

பொதுசுகாதாரத் துறை இயக்குநர் மா.குழந்தைசாமி வெப்பநிலை பரிசோதனை விமான நிலையங்களில் ஜனவரி மாதத்தின் நடுவாக்கில் துவங்கப்பட்டதுஎன்கிறார். நாம் ஏற்கனவே கூறியவாறு இது காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி உடையவர்களை மட்டுமே பரிசோதிக்கும் நோக்கம் கொண்டதாகும். தமிழக அரசு நோய் அரும்பும் காலத்திலிருந்த அறிகுறியற்றவர்களை தவறவிட்டு விட்டது என்பதே உண்மை.

தொடக்கத்தில் ஆய்வகப் பரிசோதனைகளை செய்வதில் தமிழகம் ஒப்பீட்டு ரீதியாக மகராஷ்டிரா, குஜராத், கேரளாவைவிட பின்தங்கியிருந்தது. பிறகுதான் பரிசோதனைகளை அதிகப்படுத்த தொடங்கியது. இருப்பினும் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. ஆகவேதான் சமூகப்பரவலால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்ட போதும் தமிழக முதல்வர் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை இரத்து செய்வதற்கு மறுத்தார். மார்ச் 16ம் தேதி தமிழக முதல்வர் கல்வி நிறுவனங்கள், மால்கள் மற்றும் கேளிக்கை இடங்களை மார்ச் 31 வரை மூடுவதற்கும் 4 விமான நிலையங்களில் தனிமைப்படுத்துதலுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கும் உத்தரவிட்டார். இது மிகவும் காலதாமதமான நடவடிக்கையாகும், இறுதியாக மார்ச் 24ம் தேதி சட்டமன்ற கூட்டத் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது. சட்டமன்ற கூட்டத் தொடரை இரத்து செய்வது, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது போன்ற எதிர்க்கட்சிகளின் குரலுக்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. நிவாரணப் பணிகளும் உரிய முறையில் மேற்கொள்ளபடவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் மத்திய மாநில அரசுகள் அறிவித்த நிவாரண நிதி ஒருவருக்குக் கூட கிடைக்கப் பெறவில்லை என்று ப.சிதம்பரம் பேட்டி தரும் அளவிற்குத்தான் நிவாரணப் பணிகளின் அருகதை இருந்தது.

ஊரடங்கை மீறுவோர் மீது காட்டுமிராண்டித் தனமான போலீஸ் ராஜ்ஜியத்தை தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டது. தருமபுரியில் திரு. துளசிராமன் எனும் சுகாதார ஆய்வாளார் பணிக்குச் செல்லும்போதே கடுமையாக தாக்கப்பட்டார். அவர் மீதான கொடூர தாக்குதலை பற்றி தெரிந்த பின்பும் பொது சுகாதார துறை கண்டுகொள்ளவே இல்லை. சாத்தான் குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய வணிகர்கள் காவல்துறையால் அடித்தே கொல்லப்பட்டனர். தென்காசி வீ.கே.புதூரைச் சேர்ந்த் குமரசேனும் காவல்துறையில் படுகொலை செய்யப்பட்டார்.

ஆய்வகப் பரிசோதனைதான் மிகவும் முக்கியமானது என்று உலக சுகாதார நிறுவனம் பல முறை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகள் அவற்றிற்கு முக்கியத்துவம் தராமல் ஊரடங்குஒன்றை மட்டுமே ஒரே தடுப்புமுறையாக கருதிக் கொண்டு செயல்படுகின்றன. காரணம், ஆய்வகப் பரிசோதனை RT-PCR (ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் செயின் ரியாக்சன்) பரிசோதனை மிகவும் அதிகமாக செலவு பிடிக்க கூடியதாகும். ஆய்வகங்களும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. ஆய்வகங்களை அதிகப்படுத்தி மக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்ய மத்திய, மாநில அரசுகள் தயாரில்லை. சீனாவிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட விரைவு பரிசோதனை கருவிகளும் பயன்பட தகுதியற்றவை என ICMR ஆய்வு முடிவின் அடிப்படையில் திருப்பி அனுப்பட்டன.

வெளிநாட்டிற்குச் சென்று திரும்பிய சுமார் இரண்டு இலட்சம் பேரை தமிழக அரசு ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தவேயில்லை. ஆனால் தமிழக அரசு தொடர்ந்து சமூக பரவல் இல்லை என சொல்லிக் கொண்டே வருகிறது. தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒரு பேரிடருக்கு தேவையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் (PPE), முகவுரைகள் (Masks) வென்டிலேட்டர்கள் (செயற்கை சுவாசக் கருவிகள்) போன்றவை கையிருப்பில் இல்லை. ஆனால் கையிருப்பு உள்ளதாக கூறிக் கொண்டே ஆருடம் கூறிவருகின்றது.

பரிசோதனை குறைவே நோயாளிகளின் எண்ணிக்கைக் குறைவிற்குக் காரணம்

உலக சுகாதார நிறுவனமும், தொற்றுநோய் வல்லுநர்களும் ஆய்வகப் பரிசோதனைக்கு முதன்மை முக்கியத்துவம் தரப்பட வேண்டும்என தொடர்ந்து கூறி வந்தாலும் மத்திய, மாநில அரசுகள் அவற்றைக் காது கொடுத்து கேட்கத் தயாரில்லை. ஊரடங்கை மட்டுமே ஒரே தடுப்பு முறையாக அணுகி மக்கள் மீதே அனைத்து பொறுப்புகளையும் சுமத்தினர். சமூக இடைவெளி, ஊரடங்கு, சோப்பால் அடிக்கடி கைகளைக் கழுவுதல், கைகளை முகத்தில் படாமல் வைத்திருத்தல் போன்ற தடுப்பு முறைகள் அவசியம் எனினும், நோயாளிகளையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கு ஆய்வக பரிசோதனைமிக மிக முக்கியமானதாகும். இதுவே சமூகப் பரவலை கட்டுப்படுத்தவல்லது.

பரிசோதனை; பரிசோதனை; பரிசோதனை(Test; Test; Test) இது மட்டுமே தொற்றுநோய் கட்டுப்படுத்துதலின் முதுகெலும்பாகும். சமூக இடைவெளி, ஊரடங்கு இவை மட்டுமே போதுமானது அல்லஎன்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் திரு. டெட்ரோஸ் கூறுகிறார். இதை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவில்லை.

15.01.2020 அன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) RT-PCR- ஆர்.டி-பி.சி.ஆர் (Reverse Transcription Polymerase Chain Reaction) என்கிற ஆய்வகப் பரிசோதனைக்கான ஆய்வக வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து பெற்றது. துவக்கத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அணுகுமுறையானது, சில குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களில் அதுவும் நோய் அறிகுறிகள் உள்ளவருக்கு மட்டுமே ஆய்வகப் பரிசோதனை செய்வது என்பதாக இருந்தது. புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் கழகம் (NIV- National Institute of Virology) உட்பட 11 மாநிலங்களில் உள்ள 13 நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மையங்களை (VRDL - Virology Research and Diagnostic Labs) மட்டுமே தேர்வு செய்தது. பிப்ரவரி 29 ஆம் தேதிக்குப் பிறகு இது 31 ஆய்வகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 1000 ஆய்வகங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

மார்ச் 13ஆம் தேதி வாக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் 5,900 மாதிரிகளை மட்டுமே பரிசோதனை செய்திருந்தது. வல்லுனர்களும் ஊடகங்களும் இது குறித்து தொடர் கேள்விகள் எழுப்பிய பிறகு மார்ச் 17ஆம் தேதி அனைத்து சர்வதேசப் பயணிகளுக்கும் பரிசோதனை விரிவுபடுத்தப் பட்டது. இந்த பரிசோதனையும் நோய் அறிகுறியுள்ளவர்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் மேல் சுவாச குழாய் (URI) தொற்று இருப்பவர்கள் (சளி, காய்ச்சல்) பரிசோதிக்கப்படவில்லை. கீழ் சுவாசக்குழாய் இருப்பவர்கள் (LRI) (இருமல், மூச்சுத்திணறல்) மட்டுமே பெருமளவு பரிசோதிக்கப்பட்டனர்.

மார்ச் 20ம் தேதி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், கீழ் சுவாசக்குழாய் தொற்றின் காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்கள், நோயாளிகளுடன் தொடர்பிலிருந்த ஆபத்திற்குரிய அறிகுறியற்றவர்களுக்கு பரிசோதனைகள் விரிவுபடுத்தியது. பரிசோதனை விகிதம் 10.3 பிபிஎம் (ppm - per million population) என்றளவிற்கு உயர்ந்தது.

6.7.2020 வாக்கில் இந்தியா முழுதும் 1 கோடி பேருக்கும், தமிழக அளவில் 13 லட்சம் பேருக்கும் பரிசோதனை செய்துள்ளது. அதாவது பரிசோதனை விகிதம் இந்தியளவில் 7,500 பிபிஎம் (ppm) ஆகும். ஒரு மில்லியன்- 10 லட்சம் பேரில் 7,500 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது பிற நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.
மார்ச் 2ன் படி

நாடு
பரிசோதனை விகிதம்
இந்தியா
10.3 ppm
அமெரிக்கா (USA)
மலேசியா
பிரிட்டன்
ரசியா
இஸ்ரேல்
ஸ்வீடன்
ஜெர்மனி
கத்தார்
இத்தாலி
ஆஸ்திரேலியா
தென் கொரியா
நார்வே
பக்ரைன்
ஐஸ்லாந்து
314 ppm
422 ppm
960 ppm
998 ppm
1247 ppm
1413 ppm
2020 ppm
3009 ppm
3499 ppm
4473 ppm
6148 ppm
8025 ppm
10982 ppm
26772 ppm

ஜூலை 8ன் படி

நாடு
பரிசோதனை விகிதம் 10 லட்சம் பேரில்
இறப்பு
இந்தியா
10.3 ppm
லிருந்து 7,588 ஆக 08.07.2020 உயர்ந்தது
அதன் இறப்பு எண்ணிக்கை
21,144
அமெரிக்கா (USA)
பிரேசில்
ரசியா
பிரிட்டன்
ஸ்பெயின்
ஈரான்
இஸ்ரேல்
ஸ்வீடன்
இத்தாலி
ஜெர்மனி
1,19,255
20,508
1,49,317
1,62,622
1,22,651
22,286
1,26,419
59,403
95,173
76,095
1,34,862
68,055
10,667
44,517
28,396
12,084
344
5,487
34,914
9,115

இதற்கிடையில் வல்லுனர்கள் பலரும் குறைவான பரிசோதனைகள் பற்றி கேள்வியெழுப்பி நெருக்கடி தந்தனர். 02.04.2020 தேதியின்படி, மொத்தம் 55,851 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதனால் பரிசோதனை விகிதம் 41 பிபிஎம் (தேசிய சராசரி) என உயர்ந்தது. பரிசோதனைகள் அதிகரிக்க அதிகரிக்க நோயாளிகளின் கண்டுபிடிப்பும் அதிகரிக்க துவங்கியது. உதாரணமாக, மார்ச் 13ம் தேதி 5,934 மாதிரிகளிலிருந்து 81 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அதாவது மொத்த மாதிரிகளில் 1.36 சதமாகும். ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து 55,851 மாதிரிகளிலிருந்து 2,056 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அதாவது மொத்த மாதிரிகளில் 3.68 சதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அமைச்சகத்தின் இணையதளத்தில் அகில இந்திய அளவிலான (அ) மாநில அளவிலான பரிசோதனைகளின் எண்ணிக்கை கூட குறிப்பிடப்படவில்லை. மாநில அரசுகளின் இணையதளங்களின் புள்ளி விவரங்கள் கூட அதில் சேர்க்கப்படுவதில்லை.

மாநில அளவிலான பரிசோதனைகள் அட்டவணை (2/4/2020 ன் படி)
கோவிட்19 பரிசோதனை விகிதங்கள் (2/4/2020ன் படி)


மாநிலம்
பரிசோதனை விகிதம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
அந்தமான் நிக்கோபார்
கேரளா`
டெல்லி
கோவா
சண்டிகர்
ராஜஸ்தான்
லடாக்
மகராஷ்டிரா
ஜம்மு - காஷ்மீர்
கர்நாடகா
மிசோரம்
பஞ்சாப்
உத்தரகாண்ட்
அருணாச்சலப் பிரதேசம்
திரிபுரா
தெலுங்கானா
தமிழ்நாடு
சிக்கிம்
ஹரியானா
சட்டீஸ்கர்
அசாம்
இமாச்சலப் பிரதேசம்
குஜராத்
ஒடிசா
ஆந்திரப் பிரதேசம்
மத்திய பிரதேசம்
பீகார்
உத்திரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
ஜார்கண்ட்
343
224
150
108
97
94
88
87
81
61
48
43
42
41
40
38
38
34
32
32
28
27
27
25
25
14
13
12
6
4

தேசிய சராசரி
41

தேசிய சராசரி 02.04.2020ன் படி 41 ஆகும். அது 08.07.2020ன் படி 7,588 ஆகும். இருப்பினும் இது மேற்கத்திய நாடுகளை விட மிகவும் குறைவாகும். தொடக்கத்தில் அந்தமான்-நிகோபார், கேரளா, டெல்லி, கோவா, சண்டிகர், ராஜஸ்தான், லடாக், மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மிசோரம், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் தேசிய சராசரியை விட அதிகமாக பரிசோதனைகள் செய்தன. திரிபுரா, தெலுங்கானா, தமிழ்நாடு, சிக்கிம், ஹரியானா, சத்தீஸ்கர், அசாம், இமாச்சலப் பிரதேசம், குஜராத், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தேசிய சராசரியை விட குறைவாகவே பரிசோதனைகள் செய்தன. தற்போது இந்தியாவில் தமிழகம்தான் பரிசோதனையை அதிகமாக செய்கின்றது. ஆனாலும் நோய் பரவலுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவே ஆகும்.

அதிகமாக பரிசோதனை செய்த மாநிலங்கள் அதிகளவு நோயாளிகளை கண்டறிந்துள்ளன.

(2/4/2020ன் படி)

மாநிலம்
பரிசோதனைகள்
நோயாளிகள்
(%)
மகாராஷ்டிரா
கேரளா
ராஜஸ்தான்
கர்நாடகா
டெல்லி
தமிழ்நாடு
10703
7908
7353
4034
3038
2868
423
286
133
124
293
309
3.95
3.62
1.81
3.07
9.64
10.77

குறைவாக பரிசோதனை செய்த மாநிலங்கள் குறைவான நோயாளிகளையே கண்டறிந்துள்ளன.

மாநிலம்
பரிசோதனைகள்
நோயாளிகள்
(%)
குஜராத்
பீகார்
உத்திரப் பிரதேசம்
மத்திய பிரதேசம்
1862
1615
2640
1193
88
24
121
107
4.73
1.49
4.58
8.97

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் குறைவான பரிசோதனைகள் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் நோயாளிகளை தவறவிட்ட குறைபாடான வெப்பநிலை பரிசோதனை முறைகளுமே நோய் அறிகுறியற்ற பயணிகள் பலரும் சமூகத்தில் கலப்பதற்கு வழி ஏற்படுத்தித் தந்துள்ளது. இதுவே இன்று பெருகி வரும் சமூக பரவலுக்கு முழுமுதற் காரணமாகும். அண்மைய நாட்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கும் தொற்றுநோய் ஏற்படுவது அதிகரித்துள்ளது. சுய பாதுகாப்பு உபகரணங்கள் தடையின்றி வழங்கப்படாததும் இதற்கு காரணமாகும். சர்வதேச பயணிகளுக்கு மோடி 4 நாட்கள் அவகாசம் அளித்தார். ஆனால் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு ஊரடங்கிற்கு 4 மணி நேரம் மட்டுமே அவகாசம் அளித்தார். துவக்கத்திலேயே அனைத்து சர்வதேச பயணிகளும் 3 வார கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு சமூக பரவலின் ஆரம்ப அறிகுறிகளை கண்டுப்பிடிப்பதில் படுதோல்வி அடைந்துவிட்டது.

விரைவு பரிசோதனை கருவிகளில் நடந்த ஊழல் (ரேபிட் டெஸ்ட் கிட்)

ஒரு கொள்ளை நோய் பேரிடர் காலத்தில் விரைவுப் பரிசோதனை கருவிகளைக் கூட உற்பத்தி செய்ய வக்கற்றுப்போன டிஜிட்டல் இந்தியா’, அவற்றை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்ய முடிவெடுத்து ஆர்டர் செய்தது. அதிலும் ஊழல்! இக்கருவி நோயாளியின் நோய் எதிர்ப்புத் திறனை (IgG - IgM) அளவிடும் கருவியே ஒழிய நோய் தொற்றை கண்டறியும் கருவி அல்ல. சீனத்துப் பரிசோதனை கருவிகள் பயன்படுத்த தகுதியற்றவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (கனடாவும் இவ்வாறு) அறிவித்துள்ளது. ஒருபுறம் இது ஏகாதிபத்திய சீனாவின் லாப வெறி அடிப்படையிலான உற்பத்தியின் தகுதியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மறுபுறம் இந்த தரமற்ற கருவிகளில் கூட மத்திய மாநில அரசுகள் நடத்தியிருக்கும் ஊழலை அம்பலப் படுத்தியுள்ளது.

சீனாவின் வெண்ட்போ நிறுவனத்தின் இந்திய இறக்குமதி நிறுவனமான மேட்ரிக்ஸ் லேப் ஒரு கிட் ரூ.245 என்ற விலையில் 5 லட்சம் கிட்டுகள் (போக்குவரத்து உட்பட) இறக்குமதி செய்து ரூ.155 லாபம் வைத்து ரூ.400 க்கு ரேர் மெட்டபாலிக் நிறுவனத்திற்கு விற்றது. இதன் மீது ரூ.200 லாபம் வைத்து ஒரு கிட் ரூ.600 என்ற விலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு (ICMR) ரேர் மெட்டபாலிக் நிறுவனம் விற்றது. அதாவது ரூ.245 க்கு வாங்கப்பட்ட கிட் இரண்டு இடைத்தரகர்கள் மூலம் கைமாறி ரூ.600க்கு மக்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. சீனாவின் இந்தியா இறக்குமதி நிறுவனமான மேட்ரிக்ஸ் லேப் நிறுவனமும், ரேர் மெட்டபாலிக் என்ற இந்திய நிறுவனமும் ஊழலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இதில் அரசியல்வாதிகளின் பங்கு நிச்சயம் உண்டு. மட்டுமின்றி எடப்பாடி அரசு ஷான் பயோடெக் என்ற நிறுவனம் மூலம் மேட்ரிக்ஸ் லேப் பிடம் நேரடியாக வாங்கி கணிசமாக சுருட்டியுள்ளது. மத்திய அரசின் வர்த்தக நிறுவனமான அரசு வர்த்தகக் கழகம்’ (State Trading Corporation) இருக்கும் போது தனியார் நிறுவனத்தை நாடியதற்கு காரணம் கொள்ளைநோய் பேரிடர் காலத்திலும் கொள்ளை லாபம் அடிக்கவே ஒழிய வேறு காரணம் இல்லை.

முன் தயாரிப்பற்ற ஊரடங்கால் உழைக்கும் மக்களை பட்டினியில் கொல்லும் அரசுகள்

மார்ச் 24ஆம் தேதி வெறும் 4 மணி நேர அவகாசத்துடன் 25ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவித்தார் மோடி. முன் தயாரிப்பற்ற குறைவான அவகாசம் கொண்ட ஊரடங்கால் கோடிக்கணக்கான தொழிலாளர்களை பசி பட்டினியில் கொல்வதற்கான முடிவாகவே அது இருந்தது. தொற்றுநோய் வல்லுநர்களும் உலக சுகாதார நிறுவனமும் ஊரடங்கு அவசியம் என்றே கூறுகின்றன. அதை நாம் ஏற்கிறோம், ஆனால் மோடியின் ஊரடங்கு விஞ்ஞானபூர்வ அடிப்படையில் இல்லை. மத்திய, மாநில அரசுகள் சர்வதேச பயணிகளை முறையான பரிசோதனை இல்லாமல் அனுமதித்துவிட்டு சமூகப் பரவலுக்கு வித்திட்டுள்ளன. ஊரடங்கால் சமூக தொற்று குறைந்துள்ளதே ஒழிய முழுவதும் சமூகப்பரவலை நிறுத்திவிடவில்லை. நிறுத்தவும் முடியாது; நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே உள்ளன. காரணம் பரிசோதனைகள் குறைவாக செய்யப்பட்டதே காரணமாகும். ஆகவே குறைவான பரிசோதனைகளால் கண்டறியப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உண்மையானதல்ல. இதைவிட அதிகமாக இருக்கலாம். எனவே ஊரடங்கு தளர்த்தியவுடன் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென்று பல்கிப் பெருகும் அபாயம் உண்டு. மட்டுமின்றி அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறைவிடம் பூர்த்தியாகாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நோய்த்தொற்றை நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு கடத்திக் கொண்டுச் செல்ல வாய்ப்புண்டு. உணவு இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் எளிதில் தாக்கிவிடும் அபாயமும் உண்டு. அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப் பெறாததாலும் மக்கள் தொழில் ஏதும் செய்யாமல், வேலையின்றி பட்டினி கிடப்பதாலும் ஊரடங்கை மீறுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி பரிசோதனைகளை அதிகப்படுத்தி நோயாளிகளையும், நோயரும்பும் காலத்தில் உள்ள நோய் அறிகுறியற்றவர்களையும் தனிமைப்படுத்தி இருந்தால் 21 நாள் ஊரடங்கு போதுமானது என்று தொற்றுநோய் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒட்டுமொத்த ஊரடங்கிலிருந்து படிப்படியாக பிராந்திய அளவிலான ஊரடங்கிற்கு முன்னேறி இருக்க முடியும் என்கின்றனர். ஆனால் மத்திய மாநில அரசுகள் அவற்றைச் செய்யத் தவறி விட்டதால் ஊரடங்கை தளர்த்த அஞ்சி ஊரடங்கை மட்டுமே ஒரே தடுப்பு முறையாக செயல்படுத்தி வருகின்றன. மக்களை பசி பட்டினியில் கொன்று வருகின்றன. ஊரடங்கை காலதாமதமாக அறிவித்ததன் பின்புலத்தில் கார்ப்பரேட்டுகளின் தொழில் உற்பத்தி நலன்கள் அடங்கியிருந்தன.

நோய்தொற்று பெருகியதும் வேறு வழியின்றி மாநில அரசுகளை கலந்து கொள்ளாமல் பணமதிப்பிழப்பு அறிவிப்பை போல மிகவும் எதேச்சதிகாரமான முறையில் ஊரடங்கை அறிவித்தார் பாசிச மோடி. ஆப்பிரிக்க நாடுகள் கூட 3 நாட்கள் அவகாசம் தந்து ஊரடங்கை அறிவித்தன. ஆனால் மோடி அரசு வெறும் 4 மணிநேர அவகாசமே தந்துவிட்டு அறிவித்தது. லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்ப முடியாமல் வீதிகளில் உள்நாட்டு அகதிகளாக்கப்பட்டனர். பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் டெல்லியின் வீதிகளில் திரண்டனர்; போக்குவரத்து வசதி இல்லாததால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே சென்றனர். வழியிலேயே பலர் பட்டினியில் மாண்டனர்.

தொழிலாளர்கள் மட்டுமின்றி, சில்லறை வியாபாரிகள், சிறு வர்த்தகர்கள், விவசாயக் கூலிகள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலரும் அடிப்படைத் தேவைகள் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் சங்கிலி (supply chain) முழுவதும் அறுபட்டுள்ளது. அறுவடை நின்று போயுள்ளது. உற்பத்தி செய்த பொருட்கள் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. சிறப்பு பேருந்துகள், ரயில்கள் மூலம் ஊரடங்கால் பிற மாநிலங்களில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய மாநில அரசுகள் தயாரில்லை.

மறைந்த அர்ஜுன் சென்குப்தா தலைமையிலான அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களின் தேசிய ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் கே.பி.கண்ணன் கூறுவதாவது 460-470 மில்லியன் (46-47 கோடி) தொழிலாளர்களில், 369 மில்லியன் (36.9 கோடி) தொழிலாளர்கள் விவசாயத்திலோ (அ) சிறு குறு நடுத்தர தொழில்களிலோ ஈடுபட்டு வருகின்றனர்; அவர்கள் பெரும்பாலானோர் வேலையிழந்துள்ளனர். மீதமுள்ள தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தற்காலிக (அ) தினக்கூலிகள் ஆவர். இவர்கள் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து பசி பட்டினியால் வாடுகின்றனர்என்கிறார்.

மாநிலத்தின் பல பகுதிகளில் அறுவடை நடந்துகொண்டு வருகிறது. விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கு (MSP) கொள்முதல் செய்ய வேண்டும். இழப்பிற்கேற்றவாறு விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள தொழிலாளர்களை சமூக இடைவெளியுடன் அறுவடை செய்ய அனுமதிக்கலாம்.

40 நாள் ஊரடங்கு எனில் மொத்த தேசிய உற்பத்தியில் 20% இழப்பு என கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் (Companies) பணப்புழக்க நெருக்கடியில் சிக்கியுள்ளன. இவற்றை உரிய நேரத்தில் மீட்காவிட்டால் அவை மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்குண்டு அழியும். உற்பத்தித்திறன் பாதிக்காத அளவிற்கு நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும். ரெபோ மற்றும் ரெபோ விகிதத்திற்கான இடைவெளியைக் குறைக்கும் வகையில் (ஆர்.பி.ஐ) ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கிக் கடன் தோல்வியில்தான் முடியும். தேவையும் (demand) குறைந்து விட்டதால் அதற்கேற்றவாறு உற்பத்தி திட்டமிடப்படுதல் வேண்டும். உற்பத்தி இழப்பை மருந்து, முககவசம் மற்றும் பிபிஇ (PPE) மருத்துவ உபகரண உற்பத்தியின் மூலம் ஈடுகட்டலாம். இந்த கட்டத்தில் நோய்த்தடுப்பே பிரதானமானது; பொருளாதார இழப்பீடு இரண்டாம் பட்சமானதுதான்.

மோடி கும்பலின் 21 நாள் ஊரடங்கு காலம் (தற்போது மேலும் ஜூலை 31ஆம் தேதி வரை பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது) உண்மையில் போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றப்பட்டது. மும்பையில் பர்தி (Pardhi) இன பழங்குடி மக்கள் பிளாட்பாரங்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறை கடுமையாக தாக்குதல் நடத்தி அவர்களை அவ்விடத்தை விட்டு ஓட ஓட விரட்டியது. மார்ச் 26 அன்று, 32 வயது மதிக்கதக்க நபர் ஹவுராவில் பால் வாங்கிக் கொண்டிருந்த பொழுது காவல்துறையால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். சிறிதும் முன் தயாரிப்பற்ற ஊரடங்கால் மக்கள் பெரிதும் துன்புற்று வருகின்றனர்.

10 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடின்றி ரயில்வே பிளாட்பார்ம்களில், சாலை ஓரங்களில், கான்கிரீட் குழாய்களில், சாக்கடையின் விளிம்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டில், ‘வீட்டிலேயே இருங்கள்என்ற மோடி-எடப்பாடி அரசுகளின் அறிவிப்புகள் கேலிக்கூத்தானதாகும். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் செத்து மடியும் மக்களிடம் அடிக்கடி கை கழுவுங்கள்என்று அறிவிப்புகள் அவர்களை அவமானப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன:

மோடி அரசு மக்கள் அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவச்சொல்கிறது. தேசிய சுகாதார அறிக்கை 2018-ன் படி நாட்டில் 43.35 சதவிகித குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வசதி இருக்கிறது. அதிலும் 32 சதம் தான் சுத்திகரிக்கப்பட்டது. சுமார் 33.5 சதம் குடும்பங்கள் அடிபம்புகளை நம்பியுள்ளன. 11 சதத்தினர் கிணற்று நீரை பயன்படுத்துகின்றனர். இதில் 9 சதம் திறந்த கிணறுகள் 46.6 சத குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டிற்குள்ளே குடி நீர் வசதி இருக்கிறது. 35.8 சதத் தினருக்கு வீட்டிற்கு அருகே குடி நீர் கிடைக்கிறது. 17.6 சத குடும்பங்களுக்கு வீட்டிலிருந்து சற்று தூரத்தில் தான் குடி நீர் கிடைக்கிறது. சத்திஸ்கரில் 26.5 சதத்தினருக்கு மட்டுமே வீட்டிற்குள்ளே குடி நீர் வசதி இருக்கிறது. 10,379 கிராமக் குடியிருப்புகள் பாதுகாப்பான குடி நீர் இன்றி வாழ்கின்றனர். அந்த அளவு நீரில் ஃபுளூரைடின் அளவு அதிகமாக உள்ளது. சுமார் 16,280 குடும்பங்களுக்கான குடி நீரில் ஆர்சனிக் கலந்துள்ளது. 46.9 சத குடும்பங்களுக்குத் தான் கழிப்பறை வசதி உள்ளது. 53.1 சத வீடுகளில் வீட்டில் கழிப்பறை கிடையாது. 42 சத குடும்பங்களுக்குத் தான் வீட்டில் குளியலறை உள்ளது. 55.8 சத வீடுகளுக்கு தான் சமையலறை வசதி உள்ளது. 31.8 சத வீடுகளுக்கு சமையலறை தனியாக கிடையாது. எனவே இத்தகைய சூழலில் அடிக்கடி கை கழுவுவது என்பது இந்தியச் சூழலில் மிக ஆடம்பரமான விசயங்கள்.

மாற்றுத் திரனாளிகள், வீடற்றோர், நாடோடிகள், பிச்சைக்காரர்கள், ரோஹிங்யா அகதிகள், பாலியல் தொழிலாளர்கள், சிறைக் கைதிகள், கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலரும் தொற்றுநோய்க்கும் பட்டினிக்கும் இடையில் சிக்கித் தவித்து வருகின்றனர். பட்டினியில் சாவதைவிட கொரானாவால் சாவதே மேலானது என்றெண்ணியே தமது சொந்த கிராமங்களுக்கு நீண்ட வரிசைகளில் நகரத் தொடங்கினர்.

டெல்லியில் சேரிகளில் வசிக்கும் மக்கள் போலீஸ் அடக்குமுறைக்கு பயந்து அதிகாலை 4 மணிக்கும் நடுநிசியிலும் பொது கழிப்பறைகளுக்குச் செல்கின்றனர். குடிசை வாசிகளிடம் கை கழுவ நீர் இல்லை; சோப்பு இல்லை; அவர்கள் ஒரு சோப்பை இரண்டாக உடைத்து பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான குடிசைகளுக்கு தனி கழிப்பறை இல்லை. பொது கழிப்பிடத்தையே பயன்படுத்துகின்றனர். மோடி கும்பலின் கிளீன் இந்தியாபடுதோல்வி அடைந்துள்ளதையே இவை உணர்த்துகின்றன. இந்தியாவில் வீடற்றவர்கள் 10 லட்சத்து 70 ஆயிரம் என 2011 கணக்கெடுப்பு கூறினாலும் உண்மையில் 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று வீடு மற்றும் நில உரிமைகள் இணையதளம்(Housing and Land Rights Network) கூறுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் நகரங்களில் வசிப்பவரே ஆவர். தலைநகரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை வீடற்றவர்களாக வாழ்கின்றனர். இவர்களின் பத்தாயிரம் பேர் பெண்கள் ஆவர். மேலும் உலகிலேயே இந்தியாவில்தான் வீதிச் சிறுவர்களின் (street children) எண்ணிக்கை அதிகமாகும். இவர்களுக்கு வாழ்வதற்கான எந்த உத்திரவாதமும் கிடையாது.

இந்தியாவில் 2.68 கோடி பேர் உடல் ஊனமுற்றவராக உள்ளனர். ரயிலில் வியாபாரம் செய்வதும், சிறு சிறு வேலைகளைச் செய்து பிழைத்து வந்த இவர்கள் அனைவரும் தற்போது வேலை இழந்து நிற்கின்றனர். நிதியமைச்சர் இவர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு நபருக்கு ரூபாய் 1000 உதவித்தொகை அறிவித்துள்ளார். அதாவது மாதத்திற்கு ரூபாய் 333.33 ஒரு நபருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த உதவி எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது; மாதம் ஒருவருக்கு 5000 தேவைஎன்கிறார் உடல் ஊனமுற்றோர் அமைப்பின் பொதுச் செயலாளர் முரளிதரன்.

சிறைக் கைதிகள் நோய் தொற்றுக்கு ஆட்படும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் சுமார் 4,66,084 சிறைக் கைதிகள் உள்ளனர். மேற்கத்திய நாடுகள் பல சிறைக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் இந்திய அரசு அதுபற்றி சிந்திக்கக் கூடத் தயாரில்லை. மார்ச் 23 உச்சநீதிமன்றம் தலையீட்டிற்கு பிறகு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி அரசுகள் சில சிறைக் கைதிகளை விடுவிப்பதாக அறிவித்தன. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்பட்டதா என தெரியவில்லை. உத்திரபிரதேச அரசு சிறைக்கைதிகளின் பிணைக்கான விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது.

ஊரடங்கால் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரோஹிங்கிய அகதிகள் பட்டினியில் சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டெல்லியில் 67 ரோஹிங்கிய அகதிகள் அவர்கள் குடியிருந்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹரியானாவிலும் இதே நிலைதான். இந்தியாவில் சுமார் 40,000 ரோஹிங்கிய அகதிகள் உள்ளனர் அவர்களில் சுமார் 6,000 பேர் பட்டினியில் சாகும் நிலையில் உள்ளனர்.

டெல்லி கலவரங்களால் இடம்பெயர்ந்த இஸ்லாமியர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. கொரானாவிற்குப் பிறகு அவர்கள் தற்போது உள்ள இடங்களிலிருந்தும் துரத்தப்பட்டு வருகின்றனர். முஸ்தபாபாத்தில் உள்ள 5000 இஸ்லாமிய குடும்பங்கள் உணவும், ரேஷன் பொருட்களும் இல்லாமல் அவதியுறுகின்றனர். ஆர்எஸ்எஸ் கும்பல் அவர்களுக்கு கிடைக்கும் ஒரு சில நிவாரணங்களைக் கூட தடுத்து நிறுத்துகிறது.

ஊரடங்கால் கட்டிட பணியிடங்கள், அசெம்பிளிங் யூனிட்டுகள், உற்பத்தி இடங்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களும் மூடப்பட்டதால், ஒரே இரவில் தினக் கூலிகள் வேலை இழந்து தவித்தனர். போக்குவரத்து வசதியும் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. வெளியே சென்றவர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டனர். டெல்லியில் பெரும்பாலான ரேஷன் கடைகள் இயங்கவில்லை. பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை ஊரடங்கு அறிவித்த 3 நாட்களுக்கு பிறகு அறிவித்தார். அது மக்களை சென்று சேரவில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் டெல்லி விஹார் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தனர். உத்திரபிரதேச அரசு சொன்னபடி போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தரவில்லை.

இந்திய தொழிலாளர் சங்கங்களின் மையம், தொழிலாளர்கள் பணியிடங்களிலிருந்து துரத்தப்படுவது பற்றியும் உணவு, உறைவிட தேவைகளுக்காகவும் அரசிற்கு கடிதம் எழுதியது. ஆனால் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ஹரியானாவில் பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து பணிபுரியும் சுமார் 22 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். ஹரியானா (பாஜக) அரசு மூன்று மாதங்களுக்கு ரூபாய் 4,500 என அறிவித்து, ரூபாய் 1000 தந்தது. அது சிலருக்கு மட்டுமே சென்று சேர்ந்தது. அவர்களின் 25% பேர் மட்டுமே அரசாங்க கணக்கில் உள்ளனர். பானிப்பட்டில் 3 லட்சம் பேரில் 3500 பேருக்கு மட்டுமே பிஎஃப் (PF) கணக்கு உள்ளது. மற்றும் அவர்கள் தொழிலாளர் அரசு காப்பீட்டில் (ESI) பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆகவே வெகு சிலருக்கு மட்டுமே நிவாரண உதவி கிடைத்தது.

சுகாதார பணியாளர்களுக்காக மோடி கைதட்டச் சொன்ன பொழுது, ஹரியானாவின் பாஜக அரசாங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சுகாதாரப் பணியாளர்களை காவல்துறை கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தது.

ஹரியானாவில் செங்கல் சூளையில் பணிபுரியும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் செங்கல் சூளையின் வெப்பத்திலியே குடும்பங்களுடன் வெந்து மடிகின்றனர்.

வடகிழக்கு டில்லியில் உள்ள ‌ஃபாஹிம் (Fahim) என்கிற தினக்கூலி” “அமைப்பாகப்படாத தொழிலாளர்களின் வங்கி கணக்குகளுக்கு ஊரடங்கிற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே அரசு பணம் செலுத்தி இருக்க வேண்டும். பணமதிப்பிழப்பிற்கு பிறகு எங்கள் மீது விழுந்த இரண்டாவது மரண அடி இது. மக்கள் வைரசை விட பட்டினியில் சாகின்றனர்என்று கண்ணீர் மல்க கதறுகிறார்.

மும்பையில் எவ்வித பாதுகாப்புமற்ற பணியிடங்களிலியே தங்கி பணிபுரிய தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்கள் காற்றோட்டமற்ற, புழுக்கமான இடங்களில் வசிக்கின்றனர். குஜராத்தில் ராம் லால் என்ற தினக் கூலியும் அவரது நண்பர்களும் கட்டிடப் பணி நடக்கும் இடங்களில் வசிக்கின்றனர். ஒரே அறையில் (10 x 12 அடி) 15-20 தொழிலாளர்கள் வசிக்கின்றனர். பலர் அறையின் டின்னாலான மேற்கூரைகளில் உறங்குகின்றனர். பலர் அறையின் சுவர்களிலுள்ள ஓட்டைகளில் உட்கார்ந்துகொண்டே உறங்குகின்றனர். கழிப்பறை வசதி மற்றும் தண்ணீர் வசதி கூட இல்லை.

அகமதாபாத்திலிருந்து சொந்த வீடுகளுக்கு சுமார் 10 லட்சத்து 3000 புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சென்றனர்.

நாடெங்கும் தொழிலாளர்கள் கட்டிட பணியிடங்களிலும், உற்பத்தி இடங்களிலும், ஹோட்டல்களிலும், தாபாக்களிலும், சந்தைகளிலும், பாலத்தின் கீழும், ரயில்வே தண்டவாளங்களின் அருகிலும், பேருந்து நிலையங்களிலும் பசி பட்டினியால் செத்து மடிகின்றனர்.

ஊரடங்கு ஓரளவு நோய் பரவலை குறைத்திருந்தாலும் நீண்டகால நோக்கில் அது நோய் பரவலை கட்டுப்படுத்தாது. ஊரடங்கு தளர்த்தும் போது நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென்று உயரும். டாஸ்மாக், தொழிற்சாலைகளை திறந்துவிடுவது போன்ற வர்த்தக நலன்களிலிருந்தே ஊரடங்கு முறைகள் அமல்படுத்தப்படுகின்றன.

துவக்கத்திலிருந்தே சர்வதேச பயணிகள் மற்றும் அவர்களின் தொடர்புகளை துல்லியமாக கண்டறிந்திருந்தால் அந்தந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு பிராந்திய அளவிலான ஊரடங்கை படிப்படியாக அமல்படுத்தியிருக்கலாம். பரிசோதனைகள் குறைவாக இருப்பதால் நோய் அறிகுறியற்ற நோய்த் தொற்றுடையவர்களை அரசு தவறவிட்டு சமூகப் பரவலுக்கு வழி ஏற்படுத்துகிறது. நோய் அறிகுறியுடைய அனைவரையும், மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களையும் பரிசோதித்து துல்லியமான பிராந்திய வாரியாக புள்ளிவிபரங்கள் நம் கையில் இருப்பின் அதற்கேற்றவாறு படிப்படியான பிராந்திய அளவிலான ஊரடங்கை உரிய கால அவகாசத்துடன் திட்டமிட்டு அமல்படுத்தியிருக்க முடியும். அவற்றை செய்ய மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டன.

மத்திய மாநில அரசுகளின் பொது சுகாதாரத் துறையின் படுதோல்வியை இவை எடுத்துக்காட்டுகின்றன.

மோடி அரசின் கொரோனா நிதி ஒதுக்கீடும் நிவாரணப் பணிகளும்

கல்வி, மருத்துவம், வரி விதிக்கும் உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் அனைத்தும் மத்திய அரசால் தனியார்மயம், வணிகமயம், கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு மையத்தில் குவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலைமையில், கொரோனா பேரிடர் மீட்புக்கும் மிகவும் சொற்ப அளவிலேயே மாநில அரசுகளுக்கு நிதியை ஒதுக்கியுள்ளது மோடி அரசு. நிவாரணப் பணிக்காக ரூபாய் 1.75 லட்சம் கோடி அறிவித்தார் நிதி அமைச்சர். இது மொத்த தேசிய உற்பத்தியில் வெறும் 1% சதம் ஆகும். இதில் 40,000 கோடி ரூபாய் மட்டுமே புதிய அறிவிப்பாகும். மீதமுள்ள தொகை பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவித்த நிதி ஒதுக்கீடாகும். அதைத்தான் கொரோனா நிவாரண நிதி என்று மக்களை ஏமாற்றுகிறது மோடி அரசு. ஜிஎஸ்டி நிதி தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. சுகாதாரப் பணிகளுக்கு வெறும் 15,000 கோடியை ஒதுக்கியது மோடி அரசு. அதாவது ஒரு குடிமகனுக்கு ரூபாய் 112 மட்டும்தான் ஒதுக்கியுள்ளது. ஆனால் கார்ப்பரேட்களை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு 7.78 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது மோடி கும்பல். மேலும் கார்ப்பரேட்களுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரி சலுகை மட்டும் அறிவித்துள்ளது. ஆனால் மோடியின் உரைகளில் நிதி ஒதுக்கீடு, நிவாரணப் பணி பற்றி ஏதும் இல்லை. அவை கைத்தட்டுதல், விளக்கேற்றுதல், பட்டாசு வெடித்தல் போன்ற மூட நம்பிக்கைகளின் வெற்று வாய்ச்சவடால்களாகவே இருந்தன.

பட்ஜெட் தாக்கல் செய்யும்போது கொரோனா பாதிப்பு துவங்கிவிட்டது. ஆனால் இராணுவத்திற்கு ரூபாய் 40,000 கோடிக்கு மேல் கூடுதல் நிதி ஒதுக்கிய மோடி அரசு மருத்துவத்திற்கு நிதியை வெட்டியது. நாட்டின் மிக முக்கிய பெரிய மருத்துவ மனைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டன. தில்லியில் இருக்கிற எய்ம்ஸ் மருத்துவமனை கூட வெறும் 0.1 சதவிகிதம் அளவிற்குத்தான் சற்று கூடுதல் நிதியை பெற முடிந்தது.

குறிப்பாக ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா என்ற தேசிய சுகாதார திட்டத்திற்கு பொது நிதி ஒதுக்கீடு 156 கோடி ரூபாயிலிருந்து வெறும் 29 கோடியாக வீழ்ச்சியடைந்தது. அதேபோல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்தது போல 6,400 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. நியாயமாக அது அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நிதி ஒதுக்கீடு என்பது 360 கோடியிலிருந்து 283.71 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. இன்னும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில், எளிதில் தொற்றக்கூடிய தொற்று நோய்களுக்கான சுகாதார நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு என்பது எந்தவிதத்திலும் அதிகரிக்காமல் 2,178 கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது. பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கான இந்த நிதி வெட்டுதான் கொரோனா போன்ற கொள்ளை நோய்களை எதிர்கொள்ள வக்கற்றதாக இந்தியாவை மாற்றியுள்ளது.

உலக அளவில் கொரோனா நோய் பரவத் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாதம் காலம் இந்தியாவிற்கு, அவகாசம் கிடைத்தது. ஆனால் அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பரிசோதனைக் கருவிகள், முகக்கவசம், வெண்டிலேட்டர்கள் தேவையான அளவு இருப்பு உள்ளதா? என்பது குறித்து கூட அரசு சிந்திக்கவில்லை. மார்ச் 24ஆம் தேதி வரையிலும் இத்தகைய மிக முக்கியமான கருவிகள் நமக்கு தேவை என்பதை உணராமல், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது மோடி அரசு.

கார்ப்பரேட்டுகளின் வாராக்கடன் இதுவரை 50 லட்சம் கோடியாகும். இவற்றை வசூலித்து கொரோனா மீட்பிற்கு செலவிட மோடி கும்பலுக்கு வக்கில்லை. காரணம் அம்பானி, அதானிகளின் தயவில்தானே ஆட்சி நடக்கிறது! கொரோனாவிற்கு மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்காமல், சுமார் 68,607 கோடி ரூபாய் அளவிற்கு விஜய் மல்லையா, மெஹீல் சோக்ஷி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது கார்ப்பரேட் ஏவல்களான மோடி-அமித்ஷா கும்பல்.

கொரோனாவுக்காக இந்திய அரசு ஒதுக்கியிருக்கும் தொகை மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) வெறும் 0.8% சதம் மட்டுமே. ஆனால் அமெரிக்கா 11%, பிரிட்டன் 15%, மலேசியா 16% ஒதுக்கியுள்ளன. அவற்றை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. 11% சதம் ஒதுக்கியும் அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

கார்ப்பரேட் வரி உலகிலேயே இந்தியாவில் தான் மிகவும் குறைவு. வெறும் 18.9% சதம்தான். அம்பானியில் தொடங்கி அரசு ஊழியர்கள் வரையிலானவர்கள் அனைவரும் சேர்ந்து செலுத்தும் வருமான வரியின் பங்கு 13.2%. அதே நேரத்தில் ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் செலுத்தும் மறைமுக வரி 62.87% ஆகும். இது மலேசியாவில் 34.8%, மெக்சிகோ 36.8%, பிலிப்பைன்ஸ் 40.3%, பிரேசில் 40.4%, துருக்கி 40.4%, இந்தோனேசியா 42.9% தான்.

நவம்பர் புரட்சிக்குப் பிறகான உலக சோசலிச எழுச்சியை நீர்த்துப் போகச் செய்வதற்கும், ஏகாதிபத்திய நெருக்கடிகளை தீர்ப்பதற்கும் சேமநல அரசுகள் (கீன்சிய அரசுகள்) ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்டன. சமூக நல அரசு என்பது பொதுத்துறை-தனியார் பங்கேற்புடன் செயல்படும் முதலாளித்துவ அரசே ஆகும். இதுவும் புதிய காலனியாதிக்கத்தின் ஒரு பகுதியே ஆகும். கீன்சியக் கொள்கைகள் தோல்வி அடைந்த பிறகு தாராளமயமாக்கல் கொள்கையும், அதைத் தொடர்ந்து புதிய பொருளாதாரக் கொள்கைகளான உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கைகளும் இந்தியா போன்ற காலனிய நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகளால் அமல்படுத்தப்பட்டன. கல்வி, மருத்துவம் போன்ற சேவைத் துறைகள் தனியார்மயம், வணிகமயம், கார்பரேட்மயமாக்கப்பட்டன. நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வி மீதான மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு அனிதாக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது தேசிய மருத்துவ ஆணைய மசோதாமூலம் மாநில அரசுகளின் மருத்துவக் கவுன்சில்கள் கலைக்கப்பட உள்ளன. மாவட்ட அரசு மருத்துவமனைகள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என நிதி ஆயோக் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. மெல்ல மெல்ல பொது சுகாதார துறைகளுக்கு நிதி குறைக்கப்பட்டே வருகின்றன. மலேரியா நோய் தடுப்பு திட்டம், கொசு ஒழிப்பு திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளன. தடுப்பூசிகளுக்கான நிதி ஒதுக்கீடு வெட்டப்படுவதால், மீண்டும் பழைய காலனிய கால நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காசநோயால் (TB) 7 நிமிடத்திற்கு ஒருவர் இந்தியாவில் உயிரிழந்து வருகிறார்கள். காசநோய் திட்டம் தோல்வி அடைந்து வருகிறது. போலியோ, தொழுநோய் போன்ற நோய்கள் மீண்டும் பரவத் துவங்கியுள்ளன. அரசு மருத்துவமனைகள் கூட காப்பீடு திட்டங்களால் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இக்காரணங்களால்தான் கொரோனா போன்ற கொள்ளை நோய்களையும் மரணங்களையும் தடுக்க வக்கற்றுப் போயுள்ளன மத்திய மாநில அரசுகள்.

யுனிசெஃப்பின் (UNICEF) கணக்கின்படி 2018 ஆம் ஆண்டில் மட்டும் 5 வயதுக்குட்பட்ட 8.8 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடால் இறந்துள்ளன. பெற்றோர் தினக்கூலிக்குச் செல்லும்போதே இத்தனை லட்சம் குழந்தைகள் இறக்கும் எனில், வேலைவாய்ப்பற்ற இன்றைய சூழலில் இம்மரணங்களின் விகிதம் அதிகரிப்பது உறுதி. இந்திய உணவுக் கார்ப்பரேஷன்களின் கிடங்குகளில் மார்ச்-2020 கணக்கின்படி 7.7 கோடி டன் உணவு தானியங்கள் நிரம்பி வழிகின்றன. ஏற்கனவே உணவுக் கிடங்குகள் நிரம்பி தானியங்கள் மக்குகின்றன. எலிக்கு தீனியாகின்றன. தற்போது ரபி பருவ கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் கிடங்குகளில் இடமில்லை. மக்கிப்போனவற்றை கழித்தாக வேண்டும். இப்படி கழித்துக் கட்டவேண்டிய தானியத்தைதான் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ இலவசம் என்று சீதாராமன் அறிவித்திருக்கிறார்என்கிறார் பொருளாதார வல்லுனர் ஜீன் திரேஷ்.

நிதியமைச்சர் நிவாரண பணிகளுக்கு 1.76 லட்சம் கோடி அறிவித்தார். பசி பட்டினியால் வாடும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள், சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு இந்த தொகை மிகவும் சொற்பமே.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ரூபாய் 20 நாளன்றுக்கு உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இது வருடாந்திர அறிவிப்புதான். புதிய அறிவிப்பு அல்ல. கிராமப்புறங்களில் விவசாய அறுவடை, மராமத்துப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் இத்தொகை பயனாளிகளுக்கு சென்று சேருமா? என்பது ஐயத்திற்குரியதே. 80 கோடி மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் ரேஷன்- கூடுதலாக ஒரு கிலோ பருப்பு நிச்சயமாக போதுமானதில்லை. சுய உதவிக் குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் கடன்தொகை 10 லட்சம் பெறுவது தற்போது சாத்தியமில்லை. 20.4 கோடி பெண்களின் ஜன்-தன் கணக்குகளில் 3 மாதங்களுக்கு ரூபாய் 1,500 அதாவது ரூபாய் 500 போடப்படுவதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். 68,000 கோடிக்கு மல்லையாகளுக்கு கடன் தள்ளுபடி செய்துவிட்டு உழைக்கும் மக்களுக்கு மாதம் ரூபாய் 500 வழங்குவது மிகவும் அயோக்கியத்தனமானது. பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் 8.7 கோடி விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ரூபாய் 2000 ரூபாய் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான். இந்த தொகை நிலமற்ற விவசாயக் கூலிகளுக்கு கிடையாதாம். 60 வயதுக்கு மேற்பட்டவர் மட்டும். விதவைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஆயிரம் ரூபாயை அறிவிப்பும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதே ஆகும்.

கொரோனா நிவாரண நிதிக்காக திரட்டப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. திட்டம் வெளிப்படைத் தன்மையோடு இயங்கவில்லை. மேலும், மோடி அறிவித்த 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத்தான் சேவை செய்ததே ஒழிய மக்களுக்கு எந்த நன்மையும் சென்று சேரவில்லை. இது, கொரோனா பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தீர்க்காது; அதிகரிக்கவே செய்யும்.

மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை

கொரோனா போன்ற கொள்ளை நோய்களின் பேரிடரை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுகளின் பொது சுகாதாரத்துறை வக்கற்றதாக புதிய பொருளாதாரக் கொள்கைகளால் மாற்றப்பட்டுள்ளன என்பது கண்கூடு. ஏகாதிபத்திய வல்லரசுகளின் நிலைமையும் இதுவே. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களை மத்திய மாநில அரசுகள் எதிர்கொள்ள முடியாமல் இருப்பதை கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.

கொரோனா தடுப்பிற்கு தேவையான முகக்கவசம், சுய பாதுகாப்பு உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள் (செயற்கை சுவாச கருவிகள்), கிருமி நாசினிகள் அனைத்துமே பற்றாக்குறை நிலையிலேயே உள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இதே நிலைமைதான். இருப்பில் உள்ள சுய பாதுகாப்பு உபகரணங்களும் (PPE-Personal Protective Equipments) உலக சுகாதார நிறுவனம் சொல்கின்ற தரத்தில் இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது சுய பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையையும், மோசமான தரத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. சுய பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையை எதிர்த்து இந்தியாவின் பல பகுதிகளில் குரல்கள் எழுந்தன. ஜம்மு-காஷ்மீர், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மருத்துவர்கள், செவிலியரின் குமுறல்கள் கேட்கவே செய்தன. அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், சீனா போன்ற நாடுகளிலும் சுய பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறைக்கு எதிராக குரல்கள் வெடித்தன.

இந்தியாவின் நிலைமையோ மிகவும் மோசம். மருத்துவர் - நோயாளிகள் விகிதம் (Doctor-Patient ratio), படுக்கைகள் - நோயாளிகள் விகிதம் (Bed-Patient ratio) போன்றவை மிகவும் குறைவாகும். மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து சொல்லவே தேவையில்லை. இந்தியாவில் 10,926 பேருக்கு 1 மருத்துவர் உள்ளார்; ஆனால் உலக சுகாதார விதிகள் ஆயிரம் பேருக்கு 1 மருத்துவர் தேவை என்கிறது. இந்தியாவில் ஆறு லட்சம் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. செவிலியர் - நோயாளிகளின் விகிதம் 1:483 மட்டுமே உள்ளது. அதாவது 20 லட்சம் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

திடீர் பேரிடருக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்ய உற்பத்தி சார்ந்த திட்டமிடல்கள் இங்கு இல்லை. கொரோனாவிற்குப் பிறகு 11 கம்பெனிகளிடம் 21 லட்சம் சுய பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்ய ஆவண செய்தது. ஆனால் அது எந்தளவு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறித்து தகவலோ, வெள்ளை அறிக்கையோ மத்திய அரசு தரத் தயாரில்லை. உள்ளூரில் உற்பத்தி செய்ய முடியாமல் கொரியா, சிங்கப்பூர், வியட்நாம், துருக்கி போன்ற நாடுகளிலிருந்து சுய பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்தியா முழுக்க அனைத்து மருத்துவ மனைகளிலும் 3.34 இலட்சம் சுய பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் பற்றாக்குறையான எண்ணிக்கையாகும். தமிழக அரசால் சீனாவிலிருந்து ஆர்டர் செய்யப்பட்ட சுய பாதுகாப்பு உபகரணங்களை மத்திய அரசு நடுவழியிலியே வழிப்பறி செய்து பறித்துக் கொண்டது.

வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகளின் பற்றாக்குறை மிகக் கடுமையாக உள்ளது. இப்பிரச்சினையை சமாளிக்க பெல் நிறுவனத்துக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. சில தானியங்கி உற்பத்தி நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன. சீனாவிலிருந்து சுமார் 10,000 வென்டிலேட்டர்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் உள்ள ஒரு கம்பெனியிடம் உற்பத்தி செய்ய கேட்டுக் கொண்டுள்ளதாக அரசு கூறுகிறது. வேலூர் மாவட்டத்தில் வெறும் 200 வெண்டிலட்டர்கள் மட்டுமே உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியரின் பேட்டி பெரும் சர்ச்சையானது. திடீரென்று ஆயிரம் பேர் கொரோனாவால் சுவாசக் கோளாருக்கு ஆளானால் (Respiratory failure) 800 பேர் மரணிப்பது உறுதி.

என்-95 (N-95) முகக்கவசங்களும் போதுமான அளவு கையிருப்பில் இல்லை. இரண்டு உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை மத்திய அரசு அணுகியது. அதுவும் பற்றாக்குறையைத் தீர்க்கவில்லை. மருந்துக் கம்பெனிகள் மருந்துகளின் கையிருப்பு போதுமானதாக உள்ளதென்று கூறினாலும், கொரோனா பேரிடரை எதிர்கொள்ளும் அளவில் இல்லை. ஹைட்ராக்சி குளோரோ-குயின் மாத்திரைகளை அனுப்புமாறு வெளிப்படையாக மிரட்டல் விடுத்த அமெரிக்க ஆண்டையின் உத்தரவிற்கு அடிமை மோடி கும்பல் அடிபணிந்து ஏற்றுமதி செய்தது. உள்நாட்டுத் தேவை பற்றி கவலைப்படவில்லை.

ஜன் ஸ்வஸ்த்யா அபியான் (ஜே.எஸ்.ஏ) என்ற தன்னார்வ அமைப்பு, இந்தியாவில் 20% முதல் 30% மருத்துவமனைகள் மட்டுமே தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடிப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தொற்றுநோய் அபாயத்தில் உள்ளது மட்டுமின்றி அவைகளே தொற்று நோயை பரப்பும் ஆபத்தில் உள்ளன.

டெல்லி அரசு, சுய பாதுகாப்பு உபகரணங்களை சப்ளை செய்யுமாறு மத்திய அரசைக் கேட்டுள்ளது. டெல்லி அரசு, தம்மிடம் 243 வெண்டிலேட்டர்கள், 3,261 சுய பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) மற்றும் 4,63,450 சர்ஜிக்கல் முகக்கவசங்கள், 20,566 N-95 முகக்கவசங்கள் மற்றும் 22,366 கிருமிநாசினிகள் கையிருப்பில் உள்ளதாக கூறியுள்ளது. இந்திய தலைநகரத்தின் இலட்சணம் இவ்வளவுதான். சுயபாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும் இந்திய அரசிடம் ஹெச் எல் எல் லைஃப் கேர் (HLL Life Care) என்ற ஒரே நிறுவனம்தான் உள்ளது.

தேசிய மருந்து விலைக் கட்டுப்பாடு ஆணையம் முககவசங்கள், கிருமிநாசினிகளின் விலைகளுக்கு கட்டுப்பாடு போட்டாலும் அவை அதிக விலைக்கே கடைகளில் விற்கப்பட்டன.

இந்தியாவின் மோசமான மருத்துவ கட்டமைப்பு

உலக சுகாதார நிறுவனம், நோயாளிகளை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், பரிசோதித்தல் மற்றும் மருத்துவம் வழங்குதல் போன்ற தொற்றுநோய் தடுப்பு முறைகளைத் தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மருத்துவ கட்டமைப்பு இங்கு இல்லை என்பதே உண்மை. காரணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிதம் மட்டுமே பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படுகிறது. 90 களிலிருந்து மருத்துவக் கட்டமைப்பு முழுதும் தனியார்மயம், வணிகமயம் மற்றும் கார்ப்பரேட்மயமாக்கப்பட்டுள்ளன. எனவேதான் கொரோனா போன்ற தொற்று நோய்ப் பேரிடரை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் வக்கற்றுப் போயுள்ளன.

திடீர் தொற்று நோய்த் தாக்குதல்களைக் கண்டுபிடித்து அவற்றிற்கு வினையாற்றுவதற்காக 2004இல் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த நோய் கண்டறியும் திட்டம் (IDSP- integrated disease surveillance Project) என்ற திட்டத்தின் செயல் திறன் பற்றியும் சந்தேகங்கள் எழுப்ப வேண்டியுள்ளது. சத்தீஸ்கரின் கிராமப்புற மருத்துவர் யோகேஸ் ஜெயின் தடயங்கள் இல்லை என்பது, இல்லை என்பதற்கான தடயம் இல்லை; மிகக் குறைந்த அளவே பரிசோதிக்கப்படுவதால் இந்தியா குறைந்த எண்ணிக்கையை காட்டுகிறது. இந்தியாவில் நோய்த் தொற்று அறிவியல் இல்லை என்பதால் சமுகப்பரவல் நிகழ்ந்துக் கொண்டுள்ளதுஎன்றார். குறைவான பரிசோதனைகள் நடத்தப்படுவதற்கு பரிசோதனைக் கருவிகளின் பற்றாக் குறை மிக முக்கிய காரணமாகும். இதை சில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். IDSP – திட்டத்தின் கீழ் சுமார் 168 ப்ளு சோதனை மையங்கள் உள்ளன. உண்மையில் அடிக்கடி ஏற்படும் வைரஸ் கிருமித் தொற்று பரவல் காரணமாக சுகாதார ஆய்வுத் துறை முக்கியமான வைரஸ் தொற்றுகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்வதற்காக ICMRன் கீழ் வைரஸ் ஆய்வு மற்றும் வைரஸை கண்டறியும் ஆய்வுக் கூடங்களை உருவாக்கியுள்ளது. இப்படிப்பட்ட சுமார் 85 ஆய்வு மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் சார்ஸ், கொரோனா போன்ற புதிய வைரஸ் தொற்றுகளைப் பற்றி ஆய்வு செய்கின்றனவா என தெரியவில்லை.

சதீஸ்கரில் 32 மில்லியன் மக்களுக்கு 156 வென்டிலேட்டர்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு இரண்டு இலட்சம் பேருக்கும் ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது. நோய் பரவல் ஒரு சதவிகிதம் என்றாலும் கூட ஆயிரம் பேருக்கு நோய் தொற்றியிருக்கும். அதில் 100 பேருக்கு வெண்டிலேட்டர் தேவைப்படும், ஆனால் ஒருவருக்குத்தான் வெண்டிலெட்டர் கிடைக்கும் என்கிறார் யோகேஸ் ஜெயின்.

சமீப காலமாக உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ உலகமும் நீரழிவு நோய், இரத்தக் கொதிப்பு, புற்று நோய், நுரையீரல் அடைப்பு நோய் போன்ற தொற்றா நோய்களின் பக்கம் தமது கவனத்தை திருப்பி விட்டன. இதன் பின்னால் பன்னாட்டு மருந்து கம்பனிகளின் வர்க்க அரசியல் உள்ளது. நீரழிவுநோய்க்கான சர்க்கரை அளவு, இரத்த கொதிப்பின் அளவு போன்றவற்றைக் கூட பன்னாட்டு மருந்துக் கம்பனிகள்தான் தீர்மானிக்கின்றன. அதற்கான மாத்திரைகளுக்கு காப்புரிமை பெற்று கொள்ளை இலாபம் அடிக்கின்றன. உலக சுகாதார நிறுவனமே இந்த பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் பிடியில் தான் இயங்குகிறது. எனவே தொற்று நோய்கள் பற்றி அவை பெரிதளவு கண்டு கொள்ளாமலிருந்தன. மட்டுமின்றி அவை எப்போதாவது ஏற்படும் நோய்கள் என்ற அலட்சியமும் அதில் உண்டு.
தற்போது தொற்று நோய்கள் மீண்டும் பெருமளவில் பரவுவது ஒரு புதிய சவாலை விடுத்துள்ளது. இந்திய சுகாதார ஆய்வுத் துறையின் படி இந்தியா இது போன்ற சவால்களை நிபா (Nipha) (2002, 2007, 2018) ஏவியன் இன்ஃபுளுயன்லா H5N1 (2016), சிக்கன்குனியா (2009), எபோலா (2013), ஜிகா (2016) என்று பலமுறை சந்தித்திருக்கிறது. ஆனால் அவை குறித்த ஆய்வுகள் பெரிதளவில் இல்லை.

2019 தேசிய சுகாதார அறிக்கையின் படி, இந்தியாவில் சராசரியாக 10,926 நபர்களுக்கு ஒரு அரசாங்க அலோபதி (ஆங்கில) மருத்துவர் இருக்கிறார். சுமார் 8.6 இலட்சம் துணை செவிலியர்கள் சுமார் 20 லட்சம் பதிவு பெற்ற செவிலியர்கள் உள்ளனர். 130 கோடி மக்கள் தொகைக்கு வெறும் 24,778 அரசு மருத்துவ மனைகளும், 7,13,980 படுக்கைகளும் தான் உள்ளது. தொற்று நோய்கள், இயற்கை சீற்றங்களைச் சமாளிப்பதற்கான நிதி ஒதுக்கிடு எந்த ஆண்டிலும் ரூ.100 கோடியைத் தாண்டியதில்லை. உண்மையில் 2016-லிருந்து இதற்கான செலவு 50 முதல் 60 கோடிவரை ஆகிறது. நெருக்கடியான காலகட்டத்தில் மருத்துவ உதவி மற்றும் மருத்துவ சேவை உள்ளிட்ட சுகாதாரத் துறை பேரழிவு தயார் நிலை மற்றும் நிர்வாகத்திற்கான 2018-19 பட்ஜெட் மதிப்பீடு ஒதுக்கிடு, 2016-17 ஒதுக்கீட்டில் பாதியாக குறைக்கப்பட்டது. (2016-17-ல் 30 கோடி 2018-19 -ல் 16.85 கோடி).

2011 மக்கள் தொகை கணகீட்டின்படி மக்கள் தொகையில் 8.3 சதம் மட்டுமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதே சமயம் 15 முதல் 59 வரையிலான வயதுகளில் 64.7 சதத்தினர் உள்ளனர். தொற்று வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற கருதுகோள் உண்மையல்ல. ஏனெனில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரில் சுமார் 30 சதத்தினர் 20 முதல் 44 வயதுகளில் உள்ளவர்கள் தான் பாதிக்கப்பட்டனர். எனினும், மரணங்கள் வயதானவர்களுக்கே நிகழ்ந்துள்ளது.

தொற்று நோய்கள் இந்தியாவில் அதிகமாகிவருகின்றன. 2019 தேசிய சுகாதார அறிக்கையின் படி பரவும் நோய்களின் காரணமாக, மொத்த நோய்களில் சுமார் 69.47 சதமான நோய்கள் கடும் மூச்சுத்திணறல் தொடர்பானவைகளாக உள்ளன. தொற்று நோய்கள் காரணமாக, மரணங்களில் 57.86 சதம் நிமோனியா மற்றும் மூச்சுத்திணறல் நோய்கள் காரணமாகவே நிகழ்கின்றன. மரணங்களுக்கான மூன்றாவது பெரிய காரணம் கடும் வயிற்றுப் போக்கு. இது 10.5 சதம் மரணங்களுக்கு காரணமாக உள்ளது. பெரும்பாலும் சுகாதாரமற்ற நீரால் வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. 2018 -ல் மட்டும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிககை 9.2 லட்சம். அதற்கு முந்தைய ஆண்டு 7.5 லட்சமாகும். அதே போல், வைரஸ் மஞ்சள் காமாலை, வைரஸ் மூளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கடும் வயிற்று போக்கு, கடும் மூச்சுத்திணறல் ஆகியவை 2018-ல் முந்தைய ஆண்டைவிட அதிகமாக இருந்தன. ஆனால் தொற்றுநோய்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை.

பழைய காலனியாதிக்க கட்டத்தில் இந்தியாவிலிருந்த சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆங்கில மருத்துவம் விழுங்கியது. இன்று வரை இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் மீதான அலோபதி ஆதிக்கம் தொடர்கிறது. நோய்களும், அதற்கேற்ற மருத்துவ முறைகளும் நாட்டிற்கு நாடு தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாறுப்படுகிறது. இந்திய மக்களுக்கு உரித்தான மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் அதற்கு கீழா நெல்லி போன்ற மூலிகை மருத்துவமும் மேற்கிந்திய நாடுகளில் இல்லை. மேற்கிந்திய நாடுகளுக்கே உரிய புற்று நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களும் உண்டு. இந்தியாவில் டெங்கு தொற்று நோய் பரவியபோது நிலவேம்பு கசாயம், வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு கட்டுபடுத்தப்பட்டது. ஏகாதிபத்திய சீனாவில் மாவோ காலத்தில் சோசலிச கட்டமைப்பில் உள்ள கிராமப்புற வெறுங்கால் மருத்துவர்கள் (barefooted doctors) முறை இன்னும் நடைமுறையில் இருப்பதால்தான் கொரோனா போன்ற கொள்ளை நோய்களை கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனாவிற்கு சீனாவின் பாரம்பரிய மருத்துவமும் பயன்படுத்தப்பட்டது. இங்கும் அலோபதி ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, ஆங்கில மருத்துவத்துடன் சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை இணைத்த ஒருங்கிணைந்த மருத்துவ முறையைஉருவாக்கி வழங்கவேண்டும். தற்போது தமிழக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வரும் கபசுரக் குடிநீர்கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க பயன்படுகிறது என்றும், ஆரம்பநிலை நோயாளிகளை முழுவதும் குணப்படுத்துகிறது என்றும் சித்த மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தோல்வி

கொரோனாவை தடுப்பதிலும், வந்த பிறகு மருத்துவம் வழங்குவதிலும் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் படுதோல்வி அடைந்துள்ளன. அமெரிக்காவில் சுமார் 32 லட்சம் பேர், பிரேசிலில் 17.5 லட்சம் பேரும், ரஷ்யாவில் 7 லட்சம் பேரும், இத்தாலி 2.42 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாடுகளில் மரண விகிதமும் அதிகம் ஆகும். தங்களது முதலாளித்துவ இயலாமையை மூடி மறைக்க சீன வைரஸ், வூஹான் வைரஸ்என்றெல்லாம் திசைதிருப்புகின்றன. இது சீனாவின் வூஹான் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் என்றும் வூஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து தவறுதலாக தப்பி வந்த வைரஸ் என்றும் WHO சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது எனவும் அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கூறிவருகின்றன. ஆனால் இந்த வைரஸ் வூஹானின் காட்டு விலங்குச் சந்தையிலிருந்து (Wet market) பரவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். குதிரைக் கால் வெளவால்களிடமிருந்து எறும்பு திண்னிக்கும், எறும்பு திண்ணியிடமிருந்து மனிதர்களுக்கும் பரவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதற்கான ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தங்களது தோல்வியை மூடிமறைக்க சீனா மீது திசைதிருப்பி தப்பிக்கப் பார்க்கின்றன. சீனாவும் அது அமெரிக்க ராணுவத்தால் பரப்பப்பட்ட வைரஸ் எனக் கூறி தனது தவறுகளை மூடிமறைக்கப் பார்க்கிறது. உண்மையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ துறையே இல்லை. மருத்துவ கட்டமைப்பு முழுவதும் தனியார்மயம், வணிகமயம், கார்ப்பரேட்மயமாக்கப்பட்டுள்ளதே கொரோனா நோய் பரவலுக்கும் மரணங்களுக்கும் காரணம். முதலிடத்தில் இருந்த இத்தாலியை பின்னுக்கு தள்ளி தற்போது அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாடுகளின் காப்பீட்டு நிறுவனங்களின் பிடியில் தான் மருத்துவ துறை உள்ளது. ஏகாதிபத்திய சீனாவும் இதற்கு விதிவிலக்கல்ல, அங்கு மருத்துவ துறை கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவத் துறையை கபளிகரம் செய்து வருகின்றன. அமெரிக்காவில் நோய் தொற்றும், மரணங்களும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. அமெரிக்காவின் மோசமான மருத்துவ கட்டமைப்பு குறித்து அமெரிக்க வாழ் மலையாளியான மீனா டி பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்.

அமெரிக்காவில் கோவிட்-19, டெஸ்ட்டுக்கு ரூ. 3.5 லட்சம், சிகிச்சைக்கு ரூ.16 லட்சம் வரை தேவைஎன்று குரல் தழு தழுக்க பேசுகிறார். அவர் மேலும் கூறுவதாவது இங்கு அமெரிக்காவில் நாம் காய்ச்சலிலும், இருமலிலும் எவ்வளவு சுகவீனம் (பலவீனம்) அடைந்த போதிலும் மருத்துவமனையை தொடர்பு கொண்டால் அவர்கள் கூறுவது நீங்கள் இங்கு வரவேண்டாம், கோவிட்டுக்கு மருந்து இல்லை, வீட்டில் இருந்து கைகளை கழுவுங்கள்; கிருமிநாசினிகளைப் பயன்படுத்துங்கள். இங்கு வந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. மூச்சுவிடாத நிலை ஏற்ப்பட்டால் மட்டும் இங்கு வந்தால் போதும் என்கிறார்கள். பெரும்பான்மையான சாதாரண அமெரிக்க குடிமக்கள் முடிந்தவரை மருத்துவ மனைக்குச் செல்ல மாட்டார்கள். காரணம் காப்பீடு இருந்தாலும் ஒரு பகுதி தொகையை நம்மிடம் பெற்றுக்கொள்வார்கள். சரியாக சொல்வதென்றால் இங்குள்ள சுகாதாரம் - நலவாழ்வு என்பதே காப்பீட்டு நிறுவனங்களின் குத்தகையில் - அவர்களின் கையில்தான் உள்ளது. இப்படி ஒரு மோசமான சுகாதார கட்டமைப்பு கொண்ட நாட்டையே நாம் வளர்ந்த நாடு என்கிறோம். வளர்ச்சிக்கான அளவுகோல் என்ன என்பதை எவ்வளவுதான் சிந்தித்தாலும் புரிந்துகொள்ள முடியவில்லைஎன்கிறார் மீனா டி பிள்ளை.
அதே சமயம் தைவான், வட கொரியா, தென் கொரியா, வியட்நாம் போன்ற நாடுகள் துவக்கத்திலேயே சர்வதேசிய வழித் தடங்களை மூடி பரிசோதனை, தனிமைப்படுத்துதலை முறையாக அமல்படுத்தி தங்கள் நாடுகளில் நோய் பரவாமல் தடுத்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமைதான்; இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளில் 60 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளை இறப்பதற்கு விட்டுவிடலாம் என்று அந்நாடுகள் முடிவெடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன. குழு எதிர்ப்புச் சக்தி வளரும் (Herd immunity) எனவே மருத்துவமே தேவையில்லை என்கிறார் போரிஸ் ஜான்சன். சோசலிசம் தோற்றுவிட்டது; முதலாளித்துவம் சாகாதது; அதில் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்கள். முதலாளித்துவம் வயிற்றுக்கு பால் ஊத்தவில்லை, வாய்க்கு பால் ஊத்துகிறது என்பது கொரோனா நிகழ்வு மூலம் நிருபணமாகியுள்ளது.

அமெரிக்காவில் ஒவ்வொரு 1000 பேருக்கு 2.9 மருத்துவமனை படுக்கைகள் தான் உள்ளன. துர்க்மெனிஸ்தானில் 1000 பேருக்கு 7.4 படுக்கைகளும் மங்கோலியாவில் 7.0 படுக்கைகளும், அர்ஜைண்டினாவில் 5.0 படுக்கைகளும் மற்றும் லிபியா வில் 3.7 படுக்கைகளும் உள்ளது, அந்நாடுகளை காட்டிலும் அமெரிக்காவில் குறைவு. உலக சுகாதார அமைப்பால் கணக்கெடுக்கப்பட்ட 182 நாடுகளில் அமெரிக்கா 69 வது இடத்தில் உள்ளது. போதிய படுக்கைகள் இல்லாததால் நாடு முழுவதும் உள்ள கோவிட் -19 நோயாளிகள், உரிய நேரத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது இல்லை. மாறாக மருத்துவமனையில் படுக்கை காலியாகும் வரை காத்திருக்க வேண்டிய சூழலில் இறப்புகள் அதிகரிக்கின்றது.

அமெரிக்காவின் மருத்துவர்களின் எண்ணிக்கையும் திருப்தி தரக் கூடியதாக இல்லை. அமெரிக்காவில் 1000 பேருக்கு 2.6 மருத்துவர்கள் உள்ளனர். இது (ரஷ்யாவில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள்) ரசியாவைவிட குறைவாகும். சிலி மற்றும் சீனாவை விட அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலம் குறைவாக உள்ளது. ஈரான் மற்றும் சவுதி அரேபியாவை விட அமெரிக்காவில் பேறு கால இறப்பு அதிகம். மாலி மற்றும் ஏமனில் இருப்பதைவிட பொருளாதார சமத்துவமின்மை அதிகமாக உள்ளது. இனவெறி நாடான இசுரேல் இதற்கு அடுத்தப் படியாக உள்ளது.

அமெரிக்காவின் தோல்வியை அமெரிக்க - தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆண்டனி எஸ் பைவுசி ஒப்புக் கொள்கிறார். அவர் கூறுவதாவது; “நமது தற்போதைய தேவைக்கேற்ப நமது கட்டமைப்பு தயாராக இல்லை. அது தோல்வியடைந்துள்ளதை நாம் ஒப்புகொள்ள வேண்டும்”.

அண்மையில் கொரோனா பரிசோதனையை அனைவருக்கும் இலவசமாக்கி டிரம்ப் ஒரு சட்டமியற்றினார். கோவிட் 19, நிமோனியாவினால் அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரத்தில் சிகிச்சையை இலவசமாக்காமல் பரிசோதனையை மட்டும் இலவசமாக்கினால் போதாது. அமெரிக்காவில் 3 கோடி பேர் காப்பீடு இல்லாமல் இருக்கிறார்கள். மேலும் அதிகமானோர் கூட்டு காப்பீடே வைத்துள்ளனர். அவர்களுக்கு நிதி நெருக்கடியினால் தங்கள் பங்கை செலுத்துவது கடினமாக இருக்கும். இந்த இரு பிரிவினருக்கும் கோவிட் 19 தீவிர சிகிச்சைக்காக செல்வதென்பது பெரும் நெருக்கடியாகவே மாறும்.

கொரோனா பரவலுக்கு வெகு முன்பாகவே டிரம்ப் நிர்வாகம் அதிகாரவர்க்கத்தின் நலன்களை காக்கும் நோக்கில் பொது சுகாதார கட்டமைப்பின் நிதியை குறைத்தது. 2017 -ம் ஆண்டு ஜனவரியில் டிரம்ப் வெளியிட்ட அரசாணையால் புதிதாக அரசு ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதை தடை செய்ததின் மூலம் நோய் கட்டுபாட்டு மையங்களில் 700 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. சந்தைகளின் நிலைமைகளை ஆராய்ந்து வர்த்தகம் செய்வதில் ஏற்படும் சிறு இடையூறையும் சரி செய்ய ஃபெடரல் ரிசர்வ் (மத்திய வங்கி) என்ற ஒரு அமைப்புள்ளது. கடந்த வாரத்தின் பிற்பகுதியில் ஃபெடரல் ரிசர்வ் 1.5 டிரில்லியன் டாலரை சந்தையில் ஏற்பட்ட சரிவை சரி செய்ய வங்கிகளுக்கு அளித்தது. ஆனால் அமெரிக்காவில் மருத்துவத்திற்கு இவ்வளவு நிதி கிடைக்கவில்லை.

2008-ல் முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இன்னும் மீளவில்லை 2008-இன், நெருக்கடியிலிருந்து மீள, நெருக்கடியின் சுமைகளை இந்தியா போன்ற காலனிய நாடுகள் மீது சுமத்துவதிலும் சீனாவுடன் வர்த்தகப் போரிலும் பனிப்போரிலும் ஈடுப்பட்டு வருகின்றன. எனவே கல்வி, மருத்துவத்திற்கு நிதியை வெட்டி இராணுவத்திற்கே கூடுதல் நிதி ஒதுக்கிடு செய்து வருகின்றன. இந்தியாவையும் அவ்வாறே நிர்பந்திக்கின்றன. ஆகவேதான் கொரோனா போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்ள வக்கற்று தோல்வியை தழுவுகின்றன.

உலக சுகாதார நிறுவனம் காலதாமதமாக மார்ச் 11 அன்று தான் உலகளாவிய பெருந்தொற்று நோய் கொரோனா என்று அறிவித்தது. ஆனால் அதற்குப் பிறகும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மிகவும் அஜாக்கிரதையாக தூங்கி கொண்டுதான் இருந்தன. டிரம்ப் அது வெறும் ஃப்ளு காய்ச்சல் என்றார். சீனாவின் தடுப்பு நடவடிக்கையை துவக்கத்தில் பாராட்டினார். ஆனால் அமெரிக்காவில் நோய் பரவல் அதிகரிக்க அதிகரிக்க நிலைமை கைமீறி போனபோது, சீனாவின் மீது பழி போட்டு தனது இயலாமையை மூடி மறைக்க முயன்றார்.

ஊரடங்கு அறிவித்தால் பங்கு சந்தை வீழும் என்று கவலைப்பட்டாரே ஒழிய கொரோனா மரணங்களைப் பற்றி அவர் கவலைப் பட வில்லை. ஏற்கனவே பங்குச் சந்தைகள் வீழ்ச்சியில்தான் இருந்தன. சவுதி அரேபியாவிற்கும் ரசியாவிற்குமான எண்ணை வர்த்தகம் நடக்கவில்லை. ஆகவேதான் ஊரடங்கு அறிவிப்பில் காலம் தாழ்த்தினர். இதற்கு கார்ப்பரேட்டுகளின் நெருக்கடியே முக்கிய காரணம். பிறகு வேறு வழியின்றி ஊரடங்கை அறிவித்தனர். பிப்ரவரி மாதமே நோய்ப் பரவல் பெருகத் தொடங்கிவிட்டிருந்தாலும், மார்ச் மாதம் நடுவில் வரை டிரம்ப் அரசு அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்கவில்லை.

அமெரிக்காவிலும் பரிசோதனை அனைவருக்கும் செய்யவில்லை. காரணம் பரிசோதனைக்கு சில லட்சங்கள் (3.5 லட்சம்) செலவாகும் என்பதே. நியூயார்க் நகரம் தான் நோயின் மையப்பகுதியாக இருந்தது. நகரத்திலிருந்து மருத்துவ மனைகள் நோயாளிகளின் வருகையை சமாளிக்க முடியவில்லை. நியூயார்க் மருத்துவமனை பற்றாக் குறையால், ஜேக்கப் ஜே ஜேவிட் கன்வென்ஸன் மையம் மருத்துவமனையாக மாற்றப் பட்டது. கப்பற்படை மருத்துவமனை ஒன்றும் பயன்படுத்தப் பட்டது. முகக்கவசங்கள், வெண்டிலேட்டர்கள் மற்றும் சுய பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை நிலவியது. பிபிஇ முககவசம் பற்றாக் குறையை எதிர்த்து செவிலியர்கள் வீதிக்கு வந்து போராடினர்.

அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகள் சுருங்கி போயிருந்தன. நோய் தடுப்பு பணிகள் மாகான கவர்னர்களின் பொறுப்பில் விடப்பட்டது. மாகான அரசுகளிடம் போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் அவற்றால் சமாளிக்க முடியவில்லை.

ஃபெடரல் ரிசர்வ் அமைப்பால் வழி நடத்தப்படும் மத்திய வங்கிகள் (Central banks) வட்டி விகிதத்தை குறைத்தன. பொருளாதார தேக்க நிலையைப் போக்க அரசுகள் பெரும் நிதி தொகுப்பை அறிவித்தன. அமெரிக்க காங்கிரஸ் குறுகிய கால பிரச்சனையில் உள்ள கம்பனிகளுக்கும் வேலைவாய்ப்பற்றோருக்கும் 2.2 டிரில்லியன் டாலர் நிதி தொகுப்பு அறிவித்தது. ஒரே வாரத்தில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பின்மை பல லட்சம் அதிகமாகி புதிய உச்சத்தை தொட்டது.

இத்தாலியில் மருத்துவமனைகள் யாருக்கு மருத்துவம்செய்வது யாரை இறக்கவிடுவது என்று முடிவெடுக்கும் நிலைபாடு எடுத்தன. முன்னேறிய முதலாளித்துவ சமூகத்தின் கொடூரத்தை இதைவிடவும் வேறு எந்தச் சூழலும் உலகிற்கு புரியவைக்க முடியாது.

அமெரிக்காவின் மருத்துவ கட்டமைப்பு முழுக்கவும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. தனியார் துறையால் தொற்றுநோய் பரவல், கொள்ளை நோய்களை தடுக்க முடியாது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் மருத்துவமனைகள் ரியல் எஸ்டெட் கார்ப்பரேட்டுகளால் தான் நடத்தப் படுகின்றன என்பது குறிப்பிடதக்கது.


 கொரோனா தடுப்பில் சீனா இழைத்த தவறுகள்

கொரோனா கொள்ளை நோய் தடுப்பில் சீனா மூன்று விதமான தவறுகள் இழைத்துள்ளன.
1) கொரோனா சமூகத் தொற்று பற்றி உலக சுகாதார நிறுவனத்திற்கு காலதாமதமாகவே அறிவித்தது. அங்கு 2019 நவம்பரில் தொற்று நோய் பரவத் துவங்கியது. டிசம்பர் மாதம் முதலே அது மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் சார்ஸ் வகை தொற்று நோய் என்று வூஹான் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்த போதும், சீனா அதற்கு செவிமடுக்கவில்லை. ஜனவரி 20, 2020 அன்றுதான் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் நோய் என சீனா அறிவித்து, 23/1 முதல்தான் ஊரடங்கு அறிவித்தது. ஆனால் ஜனவரி மாத இறுதிக்குள் பல நாடுகளுக்கு நோய் பரவத் துவங்கிவிட்டது.

2) வூஹானிலுள்ள விலங்கு மாமிச சந்தையிலுள்ள குதிரைக்கால் வெளவாலிடமிருந்து எறும்புதிண்ணிக்கும், எறும்புதிண்ணியிடமிருந்து மனிதருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக விஞ்ஞானிகளும், WHO-ம் தெரிவித்துள்ளது. இதை சீனாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. 2003-ல் சீனாவில் ஏற்பட்ட சார்ஸ் நோய் (SARS) இதே விலங்கு மாமிச சந்தையிலுள்ள குதிரைக்கால் வௌவாலிடமிருந்து சிவெட் பூனைக்கும், சிவெட் பூனையிடமிருந்து (Civet Cats) மனிதருக்கும் பரவி 850 பேர் மரணமடைந்தனர். இச்சந்தையை ஒழுங்குபடுத்த விஞ்ஞானிகள் வலியுறுத்திய போதும் சீனா அதை ஒழுங்குபடுத்தவில்லை. தற்போது கொரோனா வந்த பிறகே தற்காலிகமாக அதை மூடியது. காரணம் பல பில்லியன் டாலர்களில் அங்கு நடக்கும் வர்த்தகமே ஆகும்.

3) கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக காட்டியுள்ளது. [இதை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றியதாக தகவல் தெரிவிக்கின்றன.] தற்போது முதலில் விடுபட்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மேற்கூறிய காரணங்களால் சீனாவில் இரண்டாவது அலைத் தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.

இதுபற்றி விரிவாக காண்போம்.

31.12.2019 அன்று வூஹான் (Wuhan) முனிசிபாலிட்டி (Municipality) சுகாதார ஆணையம் நோவல் கொரோனா வைரஸால் பலருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்திற்கு முதன் முதலில் தகவல் அளித்தது. ஆனால் உண்மையில் நவம்பர் 17, 2019 தேதியிலிருந்தே கொரோனா தொற்றுநோய் பரவத் துவங்கிவிட்டதற்கான ஆதாரம் சீனாவின் அரசு ஆவணங்களில் உள்ளதாகவும், அதை சீனா மூடிமறைத்து காலதாமதமாகவே உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (South China Morning Post) என்ற இணையதள பத்திரிகை தெரிவித்துள்ளது.

2019 நவம்பர் 17 அன்று, 55 வயது நபர் (ஹ¨பே மாகாணத்தை சேர்ந்தவர்) கொரோனா தொற்றுக்கு முதன்முதலில் ஆளானார். அன்று முதல் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. ஒரு நாளைக்கு 1 முதல் 5 வரையில் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நவம்பர் 17 துவங்கிய நோய்த் தொற்றில் அன்று மட்டுமே 4 ஆண்களும் 5 பெண்களும் (9 பேர்) பாதிக்கப்பட்டனர். அவர்கள் 39 முதல் 79 வயது வரை நிரம்பியவர்களாக இருந்தனர். நவம்பருக்கு முன்பே கூட தொற்று துவங்கியிருக்கலாம் என்கிறது அந்த பத்திரிக்கை.

டிசம்பர் 15 அன்று கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 27 ஆகவும் டிசம்பர் 20 அன்று 60 ஆகவும் உயர்ந்துள்ளது. டிசம்பர் 27 அன்று ஜாங் ஜிக்சியான் (Zhang Jixian) என்ற ஹ¨பே மாகாண மருத்துவர், சீன அதிகாரிகளுக்கு இந்த நோய் கொரோனா வைரஸால் உண்டாகியுள்ளதுஎன்று தகவல் தெரிவித்துள்ளார். அந்த தேதியில் நோயாளிகளின் எண்ணிக்கை 180 ஆகவும் டிசம்பர் 31 அன்று எண்ணிக்கை 266 ஆக உயர்ந்திருந்தது.

ஆனால் வூஹான் அதிகாரிகள் இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய் என்பதை தொடர்ந்து மறுத்தும் மறைத்தும் வந்தனர்.

டிசம்பர் 30 இலிருந்து வூஹானைச் சேர்ந்த சில மருத்துவர்கள் இது சார்ஸ் வகைப்பட்ட தொற்று நோய் என்று உணரத் துவங்கிவிட்டனர். டிசம்பர் 30 அன்று டாக்டர் லீ வென்லியாங் (Li Wenliang) என்ற 29 வயது வூஹான் மருத்துவர் வீ சேட் (We chat) என்ற சமூக வலைத்தளத்தில் தனது சக மருத்துவர்களுக்கு தெரியும்படி இது மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் சார்ஸ் வகைப்பட்ட தொற்று நோய்என்று எழுதினார்.

மருத்துவர் லீ, ‘கெய்க்சின் குளோபல்(Caixin Global) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் மருத்துவர்களும், நோய்த்தடுப்பு அதிகாரிகளும் இது எவ்வளவு ஆபத்தானது என அறிவார்கள். ஆனால் அவர்களுக்கு பேச தைரியம் இல்லை. அச்சுறுத்தலை எதிர் கொண்டாலும் இது குறித்து நான் பேசியாக வேண்டும்என்று டிசம்பர் மாதமே கூறினார். கொரோனா வைரஸ் குறித்து தனது சக மருத்துவர்கள் 150 பேருக்கு வீ சேட்மூலம் தகவல்களை பகிர்ந்தார். ஜனவரி இறுதியில் லீ இவ்வாறு எழுதினார் இந்த சமூகப் பரவல் நோய் தொற்று குறித்து முன்கூட்டியே உலகிற்கு அறிவித்திருக்க வேண்டும். இதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்என்று எழுதினார்.

மருத்துவர்கள், ரேடியாலஜிஸ்‌ட் (Radiologists) உள்ளிட்ட 8 பேர் நிமோனியா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிடி ஸ்கேன் பார்த்ததற்காகவும், இது குறித்து தகவல்களை இணையதளத்தில் பகிர்ந்ததற்காகவும் வதந்தி பரப்புதல்என்ற பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டனர்.

பிப்ரவரி மாதம் ஜி ஜிங்பிங் (சீன அதிபர்) கொரோனா தொற்று நோயை சரிவர கையாளவில்லைஎன்று எழுதிய சமூக ஆர்வலர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
டாக்டர் லீ உள்ளிட்ட மருத்துவர்களின் கருத்தைத் தொடர்ந்து வூஹான் அதிகாரிகள் மறுத்தனர், மறைத்தனர். 8 மருத்துவர்களும், ரேடியாலஜிஸ்‌ட்களும் சட்டவிரோதமாக பாசிச முறையில் தண்டிக்கப்பட்டது குறித்தும், அதைத் தொடர்ந்து நோய் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவின. இதனுடன் நோயாளிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு பெருகத் தொடங்கியது. ஆகவே, வேறு வழியின்றி 20.01.2020 அன்று இது மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் தொற்றுநோய்என சீன அதிபர் அறிவித்தார் ஊரடங்கு 23.01.2020 அன்றுதான் அறிவிக்கப்பட்டது. ஊரடங்கிற்கு முன்பு புது வருட கொண்டாட்டத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு அவசர அவசரமாக இடம்பெயர்ந்தனர். செல்லும்போது கொரோனா தொற்று நோயையும் கொண்டு சென்றனர். ஆகவேதான் 80,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு சீனாவில் தொற்று பரவியது. 31.12.2019 அன்று இது வெறும் நிமோனியா காய்ச்சல் தான் என்று WHOக்கு தகவல் தெரிவித்தது. 20.01.2020 அன்றுதான் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் தொற்றுநோய் என தகவல் தெரிவித்தது. 3 மிக முக்கியமான வாரங்கள் வீணாகின. அதற்குள் பிற நாடுகளுக்கு நோய் வேகமாகப் பரவத் துவங்கி விட்டது.

கொரோனா நோய் ஆபத்து பற்றி முதன்முதலில் குரல் எழுப்பிய லீ வென்லியாங்கின் குரல் நசுக்கப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அவரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 07.02.2020 அன்று மரணமடைந்தார். அவரும் அவரது சகாக்களும் நோய் குறித்த தகவல்களை பரப்பியதற்காக பாசிச முறையில் தண்டிக்கப்பட்டனர். இது சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்தும், நோயாளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியதையடுத்தும் வேறு வழியின்றி வூஹான் அதிகாரிகளும், சீன அதிபரும் வெளிப்படையாக அறிவிக்கத் துவங்கினர்.

சீனா காலதாமதமாக அறிவித்தது குறித்தும் வெளிப்படையான தன்மை இல்லை என்பது குறித்தும் வூஹான் மேயர் திரு ஜூ ஜியான்வங் (Zhow Xianwang) உண்மைகளை ஒப்புக் கொண்டார். அவர் தகவல்கள் உரிய நேரத்தில் வெளிப்படையாக பகிரப்படவில்லை. எனது கைகள் கட்டப்பட்டுவிட்டன. சமூகப் பரவல் தொற்று நோய் (Epidemic) என்று அறிவிப்பதற்கு முன்பு நான் மைய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்று தேசிய சட்டம் கூறுகிறது. நான் பதவி விலக விரும்புகிறேன்என்று கூறியுள்ளார்.

டிசம்பர் மாதமே லீ போன்ற மருத்துவர்களின் குரலுக்கு உடனடியாக சீனா செவிசாய்த்திருந்தால் சீனாவிலும் பிற நாடுகளிலும் நோய் பரவலைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். சீனா இது குறித்து மிகவும் அக்கறையற்றும், கவனக் குறைவாகவும் செயல்பட்டது. உண்மை பேசியவர்களின் குரலை பாசிச முறையில் ஒடுக்கியது.

தொற்று நோய் என்று தெரிந்தவுடன் 24 மணி நேரத்திற்குள் உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் விதிகள் கூறுகின்றன. ஆனால் சீனா 3 வாரங்கள் கழித்தே WHOவிற்கு தகவல் தெரிவித்தது. இது WHOவின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் (2005) பிரிவு 6க்கு எதிரானதாகும்.

2005 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார மன்றம் (World Health Assembly) பொது சுகாதார நெருக்கடி நிலை மற்றும் சமூக நோய் தொற்று குறித்தும் உலக நாடுகள் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை உருவாக்கியது.

2005 ஒழுங்குமுறைகள் பிரிவு 6 கூறுவதாவது பொது சுகாதார நெருக்கடி நிலை ஏற்படுவதற்கான ஆபத்தான நிலைமைகள் இருக்குமாயின் எந்த ஒரு நாடும் உலக சுகாதார நிறுவனத்திற்கு 24 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்”.

எனவே சர்வதேச சுகாதார ஒழுங்கு முறைகளின் (International Health Regulations 2005) பிரிவு 6க்கு எதிராக சீனா செயல்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது.

மேலும், சீனா அனைத்து தகவல்களையும் உரிய நேரத்தில் பகிரவில்லை. இது 2005 ஒழுங்குமுறையின் பிரிவு 7க்கு எதிரானதாகும், இது குறித்து பிரிவு 7 கூறுவதாவது

பொது சுகாதார நெருக்கடி குறித்த அனைத்து தகவல்களையும் அனைத்து நாடுகளும் உலக சுகாதார நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்என்கிறது.

ஆனால் கொரோனா வைரஸின் மரபணு அமைப்பை (Genetic Sequene) 12.01.2020 அன்று தான் பகிர்ந்து கொண்டது.

சீனா காலதாமதமாக அறிவித்ததற்கும், தகவல்களை வெளிப்படையாக அறிவிக்காததற்கும் ஆதாரமாக அந்நாடு அந்த கால இடைவெளியில் மருத்துவ உபகரணங்களை பதுக்கி வைத்துக் கொண்டதை சவுத் சீனா மார்னிங் போஸ்ட்இதழ் அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளது. 20/1/2020 அன்று சீன அதிபர் சமூக தொற்று நோய் என்று வெளிப்படையாக அறிவிப்பதற்குள் கொரோனா தடுப்பிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதியை குறைத்து இறக்குமதியை அதிகரித்துக்கொண்டது சீனா.

ஜனவரி 2020 ல் சர்ஜிக்கல் முகக் கவசங்கள் இறக்குமதியை 278% சதமும், சர்ஜிக்கல் கவுன்களின் (Surgical Gowns) இறக்குமதியை 72% சதமும், சர்ஜிக்கல் கையுறைகளின் (Surgical Gloves) இறக்குமதியை 32% சதமும் அதிகரித்துள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் சர்ஜிகல் கையுறைகளின் ஏற்றுமதியை 48% சதமும், சர்ஜிக்கல் கவுன்களின் ஏற்றுமதியை 71% சதமும் முகக் கவசங்களின் ஏற்றுமதியை 48% சதமும், வெண்டிலேட்டர்களின் ஏற்றுமதியை 45% சதமும், இன்குபேட்டர் ஏற்றுமதியை 56% சதமும், தெர்மோ மீட்டர், காட்டன் பால்ஸ் (Coton bolls) மற்றும் ஸ்வாப்களின் (Swabs) ஏற்றுமதியை முறையே 53%, 58% சதமும் குறைத்துள்ளது. பதுக்கிய மருத்துவ உபகரணங்களை தற்போது லாப அடிப்படையில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் 2005ன் பிரிவுகள் 6, 7-க்கு எதிராக சீனா செயல்பட்டுள்ளது குறித்து உலக சுகாதார நிறுவனம் மௌனம் சாதிக்கிறது.

ஊழல் மலிந்த உலக சுகாதார நிறுவனம்

31.12.2019 அன்று வூஹான் முனிசிபாலிட்டி சுகாதார ஆணையம் நோவல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சில நிமோனியா நோயாளிகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் தந்தது. [ஆனால் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவியதாக கூறவில்லை]. 12.01.2020 அன்று சீனா கொரோனா வைரஸின் மரபணு அமைப்பை உலக சுகாதார நிறுவனத்துடன் பகிர்ந்துகொண்டது. 13.01.2020 இது மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவ வாய்ப்புள்ளதாக சீன அதிபர் கூறியதையடுத்து மறுநாள் 14.01.2020 அன்று உலக சுகாதார நிறுவனமும் அவ்வாறே கூறியது. பிறகு 20.01.2020 அன்று உறுதியாக மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் ஆபத்தான தொற்றுநோய் என சீன அதிபர் WHOக்கு தகவல் தெரிவிக்கிறார். உலக சுகாதார நிறுவனமும் 22.01.2020 அன்று சீன அதிபரின் தகவலை அறிக்கையாக வெளியிட்டது. 23.01.2020லிருந்து வூஹானில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. 30.01.2020 அன்று WHO “சர்வதேச அளவிலான பொது சுகாதார நெருக்கடி நிலை (Public Health Emergency of International Concern) என்ற குழப்பமானதொரு அறிவிப்பை வெளியிட்டது. பிறகு 11.03.2020 அன்றுதான் உலகளாவிய தொற்றுநோய்  (Pandemic) என அறிவித்தது. ஜனவரி மாதத்திலேயே பல நாடுகளுக்கு பரவி விட்ட நிலையில் WHO ஏன் இவ்வளவு காலதாமதமாக அறிவித்தது?

அதாவது, வூஹானில் மனிதர்களுக்கு தொற்று நோய் பரவத் தொடங்கி (WHO அறிக்கைபடி 31.12.2019), சுமார் 2 மாதங்கள் 20 நாட்கள் கழித்தே மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் தொற்றுநோய் என 11.03.2020 அன்று அறிவித்தது. சுமார் 2 மாதங்கள் 10 நாட்கள் கழித்தே WHO உலகளாவிய தொற்று நோய் என அறிவித்தது.

சீன ஏகாதிபத்தியம் துவக்க காலத்தில் நோயின் சமூகப் பரவல் பற்றி மிகவும் அக்கறையற்று இருந்தது. மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் தொற்றுநோய் என அறிந்திருந்தும் அதுகுறித்த தகவலை வெளிப்படையாக உடனே WHOக்கு பகிரவில்லை. சீனாவின் தகவல்களை மட்டுமே நம்பியிருந்த WHO அதுகுறித்து ஸ்தூலமான ஆய்வு மேற்கொள்ளவில்லை. காரணம் உலக சுகாதார நிறுவனம் சுதந்திரமாக இயங்கும் அமைப்பு இல்லை. அது சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் பிடியில் இயங்கும் ஊழல் மலிந்த நிறுவனமாகும். ஒரு தொற்றுநோயை உலகளாவிய தொற்றுநோயாக அறிவிப்பதா? வேண்டாமா? எப்போது அறிவிப்பது? என்பதை இந்த பன்னாட்டு மருந்து நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னர் தொற்று நோய்க்கான மருந்துகள், தடுப்பூசி தயாரிப்பு பணிகள் முதலியவற்றை தயாரித்துக் கொண்ட பின்புதான் WHO மூலம் உலகளாவிய தொற்றுநோய் என்பதை இவை அறிவிக்கின்றன. கோவிட்-19 பற்றிய அறிவிப்பில் WHO-ன் சீனச் சார்பு நிலை என்பது உலக சுகாதார நிறுவனத்தின் மீதான சீனாவின் மேலாதிக்கத்தையே காட்டுகிறது. இது உலக வர்த்தக கழகத்தில் ஏற்பட்டு வரும் சீன மேலாதிக்கத்தின் தொடர்ச்சியாகும். இவை இரண்டும் சீன-இரசிய ஏகாதிபத்திய முகாம்களின் உலக மேலாதிக்கத்திற்கான முயற்சிகள் பலமடைந்து வரும் புற நிலைமைகளின் ஒரு பகுதியே ஆகும். கோவிட்-19 பற்றிய காலதாமதமான அறிவிப்புகளுக்குப் பின்னால் சீன ஏகாதிபத்தியத்தின் வர்த்தக நலன்களும், பில்கேட்ஸ் போன்ற அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் இலாப வெறியும் அடங்கியுள்ளன.

ஜனவரி 30 ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் (Tedros), “சர்வதேச அளவிலான பொது சுகாதார நெருக்கடி நிலைஎன்ற அறிவிப்போடு, சீனாவின் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மிகவும் புகழ்ந்து பேசினார். அது மட்டுமன்றி அவர் சீனாவிற்கு செல்லும் விமானங்களை பிற நாடுகள் இரத்து செய்யும் நடவடிக்கைகளை விமர்சிக்கவும் செய்தார். சர்வதேச பொது சுகாதார நெருக்கடி நிலையின் போது நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பிற நாடுகளின் இந்த நடவடிக்கையை அவர் விமர்சித்திருப்பது என்பது உலக சுகாதார நிறுவனத்தின் சீனச் சார்பு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

ஜனவரி 30 அன்று உலகளாவிய தொற்று நோய் என்று ஏன் அறிவிக்கவில்லை என்பதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் ஜாசரிவிக் (Tarik Jasarevic) இவ்வாறு கூறினார் “உலகளாவிய தொற்று நோய் (Pandemic) என்ற வகைப்பாடு உலக சுகாதார நிறுவனத்தில் தற்போது இல்லை. ஆறு படிநிலைகள் (Phases) கட்டங்களை வைத்து நோயை வகைப்படுத்தும் பழைய முறையை WHO பின்பற்றுவதில்லை”. ஆனால், மார்ச் 11 அன்று டெட்ரோஸ் ‘கோவிட்-19 ஒரு உலகளாவிய தொற்று நோய் (Pandemic) என்று அறிவித்தார். அந்தக் கட்டத்தில் 114 நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை 1,18,000 ஆகவும், 4,291 மரணங்கள் எனவும் பதிவாகியிருந்தன.

2009ல் ஹெச்1என்1 (H1N1) ஸ்வைன்ஃபுளு (Swine Flu) என்பது உலகளாவிய தொற்று நோய் என்று WHO அறிவித்தது. ஆனால் உலகளாவிய தொற்று நோய் என்பது பொய்யான அறிவிப்பு என்பதும், அதற்குப் பின்னால் பன்னாட்டு மருத்து நிறுவனங்களின் வர்த்தக நலன்களும், இலாப வெறியும், ஊழலும் அடங்கியுள்ளன என்பது அம்பலமாகியது. அதிலிருந்தே WHO உலகளாவிய தொற்று நோய் (Pandemic) என்ற பதத்தை பயன்படுத்துவதில்லை என முடிவெடித்தது. WHO ஊழல் மலிந்து போயிருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. மெக்சிகோவின் வெராகுரூஸ்-ல் (Veracruz) 2009ம் ஆண்டு குழந்தை ஒன்று ஹெச்1என்1 ஸ்வைன்ஃபுளூ தொற்று நோயால் பாதிக்கப்பட்டது. இதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் WHO “உலகளாவிய தொற்று நோய் பற்றிய பாரம்பரிய வரையறையை அமைதியாக மாற்றியமைத்தது. நோய் தொற்றானது பல நாடுகளில் பரவுவதாகவும் இருக்கத் தேவையில்லை மற்றும் ஆபத்தானதாகவும் இருக்கத் தேவையில்லை என மாற்றியமைத்தது. பருவநிலை ஃபுளூ காய்ச்சலை போன்று பரவலாக இருந்தால் கூட போதும் அதை உலகளாவிய தொற்று நோயாக WHO அறிவிக்கலாம் என்று வரையறைகள் மாற்றியமைக்கப் பட்டன. எனவே 2009ல் ஏற்பட்ட சாதாரண பருவநிலை ஃபுளூ காய்ச்சல் உலகளாவிய தொற்று நோய் என்று உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

அப்போது WHO ன் இயக்குநராக இருந்த டாக்டர் மார்கரெட் சான் (Margaret Chan) ஆறாம் நிலை (6th Phase) ‘உலகளாவிய தொற்று நோய் (Pandemic) என்று அதிகார பூர்வமாக அறிவித்தார். இது உலக நாடுகள் உள்நாட்டு நெருக்கடி நிலையை அறிவித்து ஹெச்1என்1 (H1N1) தடுப்பூசிகளை பில்லியன் டாலர்களில் கொள்முதல் செய்யும் நிலைக்குத் தள்ளியது. ஐரோப்பிய கவுன்சிலின் பாராளுமன்ற அமைப்பின் (Parliamentary Assembly) தலைவராக இருந்த ஜெர்மனியை சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் வோல்ஃபாங்கி வோடார்க் (Wolfgang Wodarg) என்பவர், இந்த ஸ்வைன் ஃபுளூ என்பது உலகளாவிய தொற்று நோய் என்ற அறிவித்ததன் பின்புலத்தில் உள்ள வர்த்தக நலன்கள் குறித்து 2009 ல் ஓர் சர்வதேச ஆய்வைக் கோரினார்.

2009ல் ஸ்வைன் ஃபுளூ காய்ச்சலை உலகளாவிய தொற்று நோயாக அறிவித்ததன் பின்னணியில் மையமாக செயல்பட்ட பேராசிரியர் ஆல்பர்ட் ஆஸ்டர் ஹாஸ் (Albert Oyster Haus) என்பவர் ஹெச்1என்1 (H1N1) தடுப்பூசியில் பில்லியன் கணக்கான யூரோக்களில் தனிப்பட்ட ரீதியாக இலாபம் பெற்றார் என்று நெதர்லாந்து பாராளுமன்றம் கூறியது. இவர் ரோட்டர்டேமில் (Rotterdem) உள்ள ஏராஸ்மஸ் (Erasmes) பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், WHOவிற்கு இன்புளூயன்ஸா (Influenza) பற்றிய ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.

WHOவின் பல விஞ்ஞான வல்லுநர்கள் WHO இயக்குநர் டார்க்டர் சான்க்கு உலகளாவிய தொற்று நோய் என்று 2009 ஸ்வைன் ஃபுளூ காய்ச்சலை அறிவிக்க அழுத்தம் தந்தனர். அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரிட்டனின் கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் (Glaxo Smith Kline London) சுவிட்சர்லாந்தின் நோவார்டிஸ் (Novartis) மற்றும் பிற முன்னணி தடுப்பூசி தயாரிப்பு பன்னாட்டு மருந்து நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்றனர். 2009 உலகளாவிய தொற்று நோய் அறிவிப்பு என்பது போலியானது என்று அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. மேற்கண்ட பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்கில் இலாபமடைந்தன.

2009 ஊழலுக்குப் பின்பு 6 கட்டங்களின் அடிப்படையில் உலகளாவிய தொற்று நோய் என்று இனி அறிவிப்பதில்லை என உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்தது. மிகவும் குழப்பமானதொரு தெளிவற்றதொரு பதத்தை - அதாவது சர்வதேச அளவிலான பொது சுகாதார நெருக்கடிஎன்ற பதத்தை பயன்படுத்த தொடங்கியது. ஆனால் தற்போது WHO வின் இயக்குநர் அத்துடன் மீண்டும் “உலகளாவிய தொற்று நோய்” என்ற அறிவிப்பை மார்ச் 11 அன்று வெளியிட்டார்.

தற்போதுள்ள WHO வின் விஞ்ஞான வல்லுநர்களின் ஆலோசனை குழுமம் (SAGE – Scientific Advisory Group of Emergencies), தடுப்பூசி தயாரிக்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பில்கேட்ஸ் மற்றும் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் (BGMF) மற்றும் வெல்கம் டிரஸ்ட் (Well come Trust) களிடமிருந்து கணிசமான அளவில் நிதி பெறுகின்றனர். ஆலோசனைக் குழுமத்திலுள்ள 15 பேரில் 8 பேருக்கு, பில்கேட்ஸ் மற்றும் மெவின்டா கேட்ஸ் பவுண்டேஷன், மெர்க் கோ (Merck & Co) (MSD), கேவி (Gavi), தி வேக்சின் அல்லாயனிங் (கேட்ஸ் பவுண்டேஷனின் தடுப்பூசி நிறுவனம்), கேட்ஸ் பவுண்டேஷனின் உலக சுகாதார விஞ்ஞான ஆலோசனை கமிட்டி (BMGP Global Health Scientific Advisory Committee), ஃபைஜர் (Ptizer), நோவா வாக்ஸ் (Novo Vax), ஜிஎஸ்கே (GSK), நோவார்டிஸ், ஜிலீட் (Gilead) மற்றும் பிற முன்னணி தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் நிதியுதவி (இலஞ்சம்) அளிக்கின்றன.

WHO வின் SAGE ஆலோசனை குழுவிலுள்ள பல உறுப்பினர்கள் கேட்ஸ் பவுண்டேஷனுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். உலக சுகாதார நிறுவனம் ஐ.நா அவையின் உறுப்பு நாடுகளின் நிதியில் இயங்கவில்லை. உண்மையில் தனியார் தடுப்பூசி நிறுவனங்கள் மற்றும் பில் கேட்ஸ் நிறுவனங்களின் நிதியில் தான் பொதுத்துறை-தனியார் துறை பங்கேற்பு எனும் பெயரில் இயங்குகிறது.

டிசம்பர் 31, 2017 க்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில், WHO வின் பொது நிதி ஒதுக்கீடான 24 பில்லியன் டாலர்களில் பாதிக்கும் மேல் தனியார் கார்ப்பரேட் கம்பனிகளும், உலக வங்கியும், ஐரோப்பிய யூனியனும் அளித்துள்ளன. இவற்றில் அதிகளவு நிதியை பில்-மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷனும், கேட்ஸ் பவுண்டேஷன் நிதி உதவியால் இயங்கும் கேவி வாக்சின் அல்லயன்ஸ் நிறுவனமும் வழங்குகின்றன. எய்ட்ஸ், காச நோய், மலேரியா போன்ற நோய் எதிர்ப்பு திட்டங்களை கேட்ஸ் குழுமமே நிதி ஒதுக்கி நடத்துகிறது. இவை மூன்றும் உலக சுகாதார நிறுவனத்திற்கு 474 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளன. பில்-மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் மட்டும் 324 மில்லியன் டாலர்களை WHO விற்கு வழங்கியுள்ளது. நிதியுதவி அளித்த நாடுகளில் அமெரிக்கா அதிகபட்சமாக 401 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

நிதியுதவி அளிக்கும் பிற தனியார் நிறுவனங்கள் வருமாறு: ஜிபீட் சையின்ஸ் (Gibed Science) (இந்த நிறுவனம் தான் கோவிட்-19 – கொரோனா நோய்க்கான மருந்துகளை விற்கும் உரிமையைப் பெற WHO விற்கும் அழுத்தம் தந்து வருகிறது) கிளாக்ஸ்கோ ஸ்மித் கிளைன் (GSK), ஹாப்மேன்-லரோச் (Hoffman – La Roche), சனோபி பாஸ்டர் (Sanofi Pastour), மெர்க் சார்ப் மற்றும் டோம் சிபிரெட் (Merck Sharp and Dohme Chibret) மற்றும் பேயர் ஏஜி (Bayer AG). இந்நிறுவனங்கள் WHO விற்கு மில்லியன் கணக்கான டாலர்களை நிதியாக வழங்கியுள்ள. இவை தான் உலகளாவிய தொற்று நோய்கள் மற்றும் அதன் தடுப்பு முறைகளை அமல்படுத்தும் ஐ.நா மற்றும் உலக சுகாதார நிறுவனத்தை தமது பிடியில் வைத்துள்ளன. அமெரிக்காவின் கேட்ஸ் குழுமமே உலகில் அதிகளவு நிதி அளித்து WHO வை இயக்குகிறது. இந்த குழுமம் பிற தடுப்பூசி நிறுவனங்களான மெர்க், நோவார்டிஸ், ஃபைஜர் ஜிஎஸ்கே போன்ற நிறுவனங்களுக்கு சுமார் 50 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குகின்றன. கோவிட் 19 தடுப்பூசி தயாரிப்பதிலும் இது ஆர்வம் காட்டி வருவதற்கு இதுவே காரணம் ஆகும். கோவிட் 19 தடுப்பில் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் கேட்ஸ் குழுமத்தின் நலன்களும், சீனாவின் மருத்துவ உபகரண உற்பத்தி சார் நலன்களும் அடங்கியுள்ளன. ஜெர்மனியைச் சேர்ந்த கியூர்வேக் (Cure Vac) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையைப் பெற அமெரிக்காவும், பயோ என்டெக் (Bio N Tech) என்ற நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையைப் பெற சீனாவும் இலாப வெறியுடன் போட்டி போடுகின்றன. சீனா அந்நிறுவனத்திற்கு 133 பில்லியன் டாலர்கள் தர முன்வந்துள்ளது.

சர்வதேச காப்புரிமைகளுக்கான விண்ணப்பங்களில் கடந்த ஆண்டு சீனா தான் முதலிடத்தில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான உலகளாவிய அமைப்பு அமைக்கப்பட்டதிலிருந்து அமெரிக்காவை முதலிடத்திலிருந்து கீழே தள்ளிவிட்டது சீனா என்று ஐ.நா காப்புரிமை நிறுவனம் தெரிவித்துள்ளது.

காப்புரிமையை அங்கீகரிப்பதற்கான நாடுகளுக்கான ஒரு அமைப்பை மேற்பார்வையிடும் உலக அறிவுசார் சொத்து அமைப்பில் கடந்த ஆண்டு 58,990 விண்ணப்பங்களை சீனா தாக்கல் செய்து, 57,840 விண்ணப்பங்களை தாக்கல் செய்த அமெரிக்காவை வீழ்த்தியது.

சீனாவின் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 200 மடங்கு அதிகரித்துள்ளது. 1978 ம் ஆண்டில் காப்புரிமை ஒத்துழைப்பு ஒப்பந்தமுறை அமைக்கப்பட்டதிலிருந்து அமெரிக்காதான் ஒவ்வொரு ஆண்டும் உலகில் அதிக விண்ணப்பங்களை தாக்கல் செய்து வந்தது. தற்போது சீனா அமெரிக்காவை தாண்டி விட்டது.

காப்புரிமை விண்ணப்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவை (52.4%) தற்போது ஆசியாவிலிருந்து வந்துள்ளன. ஜப்பான் மூன்றாவது இடத்தையும், ஜெர்மனி மற்றும் தென் கொரியா 4 வது இடத்தையும் பெற்றுள்ளன. காப்புரிமை உரிமையானது ஒரு நாட்டின் பொருளாதாரம் தொழிற்துறை மற்றும் அறிவு சார் சொத்துரிமையில் அதன் ஏகபோக வலிமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

உலக அறிவு சார் சொத்துரிமை அமைப்பின் (World Intellectual Property Organization WIPO) தலைவர் பிரான்சிஸ் “இது சீனாவின் பொருளாதார வலிமையை எடுத்துக்காட்டுகிறது. அறிவுசார் சொத்துரிமை என்பது போர் தந்திரத்தின் ஒரு பகுதியே ஆகும்” என்று கூறியுள்ளார். உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் தகவலின் படி, தொலை தொடர்பு சாதனங்களில் உலகிலேயே அதிகமாக உற்பத்தி செய்யும் சீனாவின் ஹூவாய் தொழில் நுட்ப நிறுவனம் (HWT.VL) தொடர்ந்து 3 ஆண்டுகளாக கார்ப்பரேட் காப்புரிமைக்கு விண்ணப்பதில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஹூவாய் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும், அது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனவும் உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சீனா இதை மறுத்துள்ளது.

அறிவு சார் சொத்துரிமை மற்றும் பிற காப்புரிமைகள் எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பு (அ) தொழில் நுட்பமும் மக்கள் மயமாவதை தடுக்கிறது. மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள், மருந்துகள் போன்ற துறைகளில் அனுமதிக்கப்படும் காப்புரிமையானது மருத்துவ துறை மக்கள் மயமாவதற்கு பெரும் தடையாக விளங்குகிறது.

சார்ஸ், மெர்ஸ், எபோலா, கொரோனா போன்ற வைரஸ்களின் தொற்றை தீவிரப்படுத்தும் பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்ப மயமாதல்

1990 களுக்குப் பிறகு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வர்த்தக நலன்களிலிருந்து செய்யப்படும் இலாப வெறி அடிப்படையிலான அராஜக உற்பத்தியும், அதற்காக காடுகள் அழிக்கப்படுவதும், பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தால் புவி வெப்ப மயமாதலும், பருவநிலை மாற்றங்களும் அதிகரித்து வருகின்றன. கார்ப்பரேட் மயமாக்கல் - நகர மயமாக்கலால் காடுகள் அழிக்கப்படுவதால் காட்டு விலங்குகளின் வழித் தடங்கள் பாதிக்கப்பட்டு காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமிடையே இடைவெளி குறைந்து விலங்குகளிடமிருந்து புதுப்புது வைரஸ்கள் மனிதருக்கு பரவி நோய் தொற்றை ஏற்படுத்துகின்றன. பருவ நிலை மாற்றங்கள் ஒரு புறம் வெள்ளம், மறுபுறம் வறட்சி என இயற்கைப் பேரிடர்களை உண்டாக்குகின்றன. அதீத வெப்பம், அதீத உலர்நிலை, அதீத குளிர்ச்சி என தட்டவெப்பநிலைகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன. கொரோனா வைரஸ்கள் அதீத குளிர்ச்சி மற்றும் உலர்ந்த தட்பவெப்ப நிலைகளில் மனிதரிடையே வேகமாக பரவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இத்தகைய இயற்கைப் பேரிடர்களை உருவாக்குவது ஐயத்திற்கிடமின்றி ஏகாதிபத்திய உற்பத்தி முறையே. இயற்கையை காப்பதற்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமே. ஏகாதிபத்தியத்தை சவக்குழிக்கு அனுப்பாமல் இயற்கையையும் மானுடத்தையும் காப்பது சாத்தியமில்லை.

சார்ஸ் (SARS - Severe Acute Respiratory Syndrom) என்ற தொற்று நோய் சார்ஸ் கோவி - 1 (SARS COV 1) என்ற வைரசால் உருவானதாகும். 2002-2003ஆம் ஆண்டில் சீனாவின் வூஹான் விலங்குச் சந்தையில் இது துவங்கி 800 பேரை பலி கொண்டது. இது குதிரைக்கால் வௌவால்களிடமிருந்து (horseshoe Bat) சிவெட் பூனைகளுக்குப் பரவி, சிவெட் பூனைகளிடமிருந்து மனிதருக்கு பரவிய தொற்று நோயாகும். தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்றுநோய் கொரோனா வைரஸ் கோவிட் 2 (SARS COV2) வைரசால் உருவான தொற்று நோயாகும். இதுவும் வூஹான் விலங்குச் சந்தையிலிருந்து பரவியுள்ளது எனவும், குதிரைக்கால் வௌவால்களிடமிருந்து எறும்புத் திண்ணிகளுக்கும் (Pangolins), எறும்புத் திண்ணியிடமிருந்து மனிதருக்கும் பரவியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வூஹான் நகரம் சீனாவின் மாபெரும் உற்பத்தி மையமாகும். சீனா ஏகாதிபத்திய நாடாக மாறியதற்குப் பிறகு வூஹான் நகரத்தின் காடுகள் பெருமளவு ரியல் எஸ்டேட் முதலைகள், கார்ப்பரேட்டுகளால் அழிக்கப்பட்டு வருவதால் வௌவால்கள் தது வழித்தடங்களை இழந்து மனிதரிடம் நெருங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வௌவால்களில் கணக்கிலடங்கா வைரசுகள் உயிர் வாழ்கின்றன. வௌவால்களின் குளிர்ச்சியான உடல்நிலையே இதற்கு காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். மருத்துவ குணங்களுக்காகவும் வௌவால்கள் வேட்டையாடப்படுகின்றன.

எபோலா வைரஸ் தொற்றுநோய் எபோலா வைரஸ்களால் உண்டாக்கப்படுகின்றன. டிசம்பர் 2013 முதல் ஜனவரி 2016 வரை மேற்கு ஆப்பிரிக்காவில் 11,323 பேர் இந்நோய்க்கு பலியாகினர். காங்கோவில் ஜூலை 2019ம் மாதம் இத்தொற்று பெருமளவில் பரவியது. WHO இதை உலக சுகாதார நெருக்கடி நிலையாக அறிவித்தது. ஆப்பிரிக்க நாடுகளின் காட்டு வளங்கள் உள்ளிட்ட அனைத்து வளங்களும் பல பத்தாண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்திய ஓநாய்களால் வேட்டையாடப்பட்டு வருவதே இதன் காரணம். எபோலோ வைரஸ் காடுகளிலுள்ள பழவௌவால்களிடமிடருந்து (fruit bats) மனிதனுக்கு பரவியதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மெர்ஸ் [MERS-Middle East Respiratory Syndrome] எனப்படும் தொற்றுநோய் 'ஒட்டக காய்ச்சல்' (Camel Flu) எனவும் அழைக்கப்டுகிறது. இது மத்திய கிழக்கு நாடுகளில் 2012-முதல் 2020 வரை பரவி வரும் தொற்று நோயாகும். ஒட்டகத்தோடு நேரடி தொடர்பிலிருந்தவருக்கு இந்த நோய் பரவினாலும், உண்மையில் மெர்ஸ் நோயும் கொரோனா வகைப்பட்ட வைரஸால் பரவுவியது எனவும் (MERS-COV) இது வௌவால்களிடமிருந்து பரவியிருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பிரான்ஸ், இத்தாலியில் ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய் சீனாவிலிருந்து பரவவில்லை எனவும் சில விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பிரான்சில் நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் வைரஸ் வகை, சீனாவில் ற்பட்ட தொற்றிற்கு காரணமான வைரஸ் வகையிலிருந்து வேறுபட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரேசிலில் சீனாவிற்கு முன்பே தொற்று நோய் தொடங்கிவிட்டதாகவும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும் கோவிட் 19-ன் ஆரம்பகால மூதாதையர் என்பது எம்வி 1 (MV 1) என்கிற வைரஸ் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. பின்னர் இது H13 மற்றும் H38 என்ற ஹாப்லோடைப்புகளாக உருவானது. (Haplotype- ஹேப்லோடைப் என்பது இரு உயிரினத்திற்குள் உள்ள, ஒரு பெற்றோரிடமிருந்து ஒன்றாகப் பெறப்பட்ட மரபனுக்கள் குழு).
இதற்குப் பின்னர், H13 மற்றும் H38 ஆகியவை இரண்டாவது தலைமுறை ஹாப்லோடைப் ஆன - H3 ஆகப் பரிணமித்தன. அதற்குப் பின்னர் அது H1 (கோவிட் -19) ஆக பரிணமித்தது.
அதாவது, கோவிட்-19-ன் தந்தை எச் 3 (H3); அதன் தாத்தா பாட்டி எச் 13(H13) மற்றும் எச் 38(H38); மற்றும் அதன் கொள்ளு தாத்தா எம்வி 1 (MV 1) ஆகும்.
வூஹான் கடல் உணவுச் சந்தையில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் (கோவிட் 19) எச் 1 (H1) வகையைக் சேர்ந்தது என்றாலும், அதன் தந்தையான எச் 3( H3) மட்டுமே வூஹானில் காணப்பட்டது.
கோவிட்-19-ன் தாத்தா பாட்டியான எச் 13 (H13) மற்றும் எச் 38 (H38) ஆகியவை வூஹானில் இதுவரை கண்டறியப்படவில்லை. "தொற்று நோயைத் தூண்டிய எச் 1 மாதிரி சில பாதிக்கப்பட்ட நபர்கள் மூலமாக கடல் உணவுச் சந்தைக்கு பரவியது" என்கிறார் தூதர் ஜாங் என்ற விஞ்ஞானி. கோவிட் 19 முதன்முதலாக சீனாவின் வூஹானில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் மூலத் தோற்றம் எங்கே என்பது இன்றும் தீர்மானிக்கப்படவில்லை என்கிறார் அவர்.
இதற்கிடையில் வேறு சில தகவல்களும் உள்ளன. அவற்றை தூதர் ஜாங் இவ்வாறு விவரித்தார்.
1. ஜப்பானைச் சேர்ந்த திருமணமான தம்பதியினர் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை வூஹானில் (அமெரிக்க பசிபிக் தளம் அமைந்துள்ள இடத்தில்) இருந்து போது கோவிட்- 19 ஐ எதிர்கொண்டனர். இருப்பினும் அவர்கள் சீனாவிற்கு விஜயம் செய்யவில்லை. பிப்ரவரி 3ம் தேதிக்குள் அவரது கணவருக்கு நோயின் அறிகுறிகள் தோன்றியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
2. வடக்கு இத்தாலியில் உள்ள லோம்பார்டியில் முதன்முதலாக ஜனவரி 1 அன்று கோவிட் 19 தோன்றியது.
3. புகழ்பெற்ற இத்தாலிய மருத்துவ நிபுணரான யுசெப் ரெமுஸியின் கூற்றுப்படி கோவிட்-19 தோற்றுநோய் சீனாவில் தொடங்குவதற்கு முன்பாகவே, இத்தாலியில் பரவத் தொடங்கியிருந்தது.
4. மிகவும் பிரபலமான அமெரிக்காவைச் சேர்ந்த வைராலஜிஸ்ட் ராபர்ட் ரெட்ஃபீல்ட் "கடந்த குளிர்காலத்தின் போது 80,000 அமெரிக்கர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துபோன போது, காய்ச்சல் இறப்புகளுக்கு கோவிட்-19 காரணமாக இருக்கலாம் என ஊகித்துள்ளனார். அந்த நேரத்தில் அமெரிக்கா அதைச் சோதிக்கவில்லை.
5. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அழைக்கப்படுபவர்களில் கோவிட்-19-இன் முதல் தொற்று நோயாளி இருக்கலாம் என்றால், காய்ச்சலால் இறந்தவர்களை தோண்டியெடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இத்தாலி விரும்பியது. ஆனால் அமெரிக்கா அதற்கான அனுமதியை தர மறுத்துவிட்டது (தற்போது சீனாவும் ஆய்விற்கான கோரிக்கைளை மறுத்து வருகிறது)
6. கோவிட்-19- ன் தந்தையான எச்-3 (H3) வகையும், அதன் பரிணாம வகையான எச்-1(H1) [எச் -1 வகையே தற்போது கோவிட்-19 ஐ உருவாக்கியுள்ளது] வகையும் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. கோவிட்-19-ன் தாத்தா பாட்டி (H13, H38) மற்றும் கொள்ளு தாத்தா (எம்வி 1 MV 1) வகைகள் அமெரிக்காவில் குடியேறியிருந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்சில் எற்பட்ட தொற்றுநோய்க்கான வைரஸ் வகையானது (Strain), சீனாவில் ஏற்பட்ட தொற்று நோய்க்கான வைரஸ் வகையிலிருந்து வேறுபட்டது எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நிலமைகள் இவ்வாறிருக்க, இது சீனத்து வைரஸ் என அமெரிக்காவும், அமெரிக்கன் வைரஸ் என சீனாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி தங்களது தவறுகளை மூடி மறைக்கப் பார்க்கின்றன. சார்ஸ், மெர்ஸ், எபோலா, கொரோனா போன்ற புதுப்புது வைரஸ் தொற்று நோய்களுக்கு காரணிகளான காடழிப்பு (De-Forestation), கார்ப்பரட்மயமாக்கல், புவி வெப்பமயமாதல், மற்றும் பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா, சீனா, ஜரோப்பா உள்ளிட்ட அனைத்து ஏகாதிபத்தியங்களும் பொறுப்பேற்க வேண்டும். கோவிட்-19-ன் தோற்றுவாய், தடுப்பூசி மற்றும் மருந்துகளை கண்டறிவதற்கு, உண்மையில் முதலாளித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்களை உள்ளடக்கிய ஓர் சர்வதேச ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
உலகத்தையே ஆட்டிப்படைக்கின்ற அமெரிக்காவின் நியூயார்க் நிதி மூலதனக் கும்பல்களும் அவர்களின் ஜரோப்பிய கூட்டாளிகளும் புவிகோளத்தை பேரழிவிற்கு இட்டுச் செல்வதற்கான கதவுகளை பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கு திறந்துவிட்டனர். 'மக்கள் நலன்', 'வளர்ச்சி' என்ற பேரால் ஏகாதிபத்தியவாதிகள் மூலப் பொருட்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையிடுவதற்கான தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. சுதந்திர வர்த்தகம் என்ற பேரில் தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்களும் கனிம வளங்களும் உலகம் முழுதும் சூறையாடப்படுகின்றன. இத்தகையை ஏகாதிபத்திய காலனியாதிக்கச் சுரண்டலும், போர்களும், கட்டமைப்புகளைத் தகர்த்து சுற்றுச் சூழலை அழித்து புவி வெப்பமடைவதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் இட்டுச் செல்வது தீவிரமாகிறது. அதன் விளைவாகவே உலக மக்கள் புயல், வெள்ளம், வறட்சி, பஞ்சம், பசியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சார்ஸ், மெர்ஸ், எபோலா, கொரோனா தொற்று நோய்க்கு பலியாகிவருகின்றனர்.
இன்றைய உலகம் வெப்பமடைவதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் ஏகாதிபத்தியங்களே குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம், ஐரோப்பிய, சீன காதிபத்தியங்களே முதன்மைக் காரணமாக உள்ளன. பசுமைக் குடில் வாயுக்களை குறைத்து புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கான செலவுகளை ஏற்க அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் மறுக்கின்றன. அதை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கின்றன.
பூமியின் இருப்பையே அச்சுறுத்தக் கூடிய பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, உலக நாடுகள் பசுமை குடில் வாயுக்கள் வெளியிடுவதைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்ட முயற்சிகளை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தோற்கடித்தன. ஜப்பானில் நடந்த கியாட்டோ (Kyoto) மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பருவநிலை மாற்றத்துக்கு காரணமான பசுமைக் குடில் வாயுக்களை அதிகமாக வெளியிட்டு வரும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளை பொறுப்பேற்க வேண்டும்; வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் பொறுப்பல்ல என்ற அடிப்படையான விஷயம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இதனை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் ற்க மறத்துவிட்டன.
அண்மையில் நடந்த பாரிஸ் மாநாட்டில் பசுமைக் குடில் வாயுக்களை அதிகமாக வெளியிட்ட வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள், தீவு நாடுகளில் ஏற்பட்ட பேரழிவுகளுக்கும், பெரும் நாசங்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகள் பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டு விட்டது. அத்துடன் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியிடுவதை தடுப்பதற்காக ஏழை நாடுகளும் பொறுப்பேற்க வெண்டும் என்று கூறி அந்நாடுகளுக்க 100 பில்லியன் டாலர்கள் கடன் வழங்கி அந்த சுமைகளை ஏழை நாடுகள் மீது சுமத்திவிட்டன.
இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்கள், ஏகாதிபத்திய நாடுகளின் இத்தகையப் போக்குகளை எதிர்த்துப் போராட மறுக்கின்றன. அத்துடன் இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் இத்தகைய ஆதிக்கத்திற்கு தூணை போகின்றன. எனவே காதிபத்திய நாடுகளையும், அவற்றின் காலனிய நாட்டு ஆளும் வர்க்கங்களையும் எதிர்த்துப் போராடி ஏகாதிபத்திய புதிய காலனியாதிக்கத்தை முறியடிப்பதன் மூலம்தான் கொரோனா போன்ற கொள்ளை நோய்களைத் தடுத்து மக்களை காப்பாற்ற முடியும்.
கொரோனாவிற்குப் பிறகு ஆழப்படும் முதலாளித்துவ நெருக்கடியும், கூர்மையடையும் ஏகாதிபத்திய முரண்பாடுகளும்
2008-ம் ஆண்டு அமெரிக்காவில் கிளம்பிய உலக முதலாளித்துவ நெருக்கடியிலிருந்தே ஏகாதிபத்திய நாடுகள் இன்னும் மீளாத நிலையில், கொரோனா ஊரடங்கால் உலக முதலாளித்துவ நெருக்கடி மேலும் ஆழப்பட்டுள்ளது. உற்பத்தி ஆலைகள் மூடல், வேலைவாய்ப்பின்மை என நெருக்கடி தீவிரம் பெற்றுவருகிறது. உலகம் முழுதும் 40 கோடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக ஜ.நா அறிவித்துள்ளது. மேலும் கொரோனா மீட்பிற்கு அதிகளவு நிதி ஒதுக்க வேண்டியிருப்பதாலும் பொருளாதார நெருக்கடி தீவிரம் பெறுகிறது. ஊரடங்கு அறிவிப்பால் தொழில்கள் முடங்கும் என்ற காரணத்தினால் கார்ப்பரேட்டுகளின் நிர்ப்பந்தம் காரணமாக, அமெரிக்கா-ஐரோப்பிய, சீன-ரசிய ஏகாதிபத்திய நாடுகள் ஊரடங்கை தாமதமாகவே அறிவித்தன. இந்தியா போன்ற காலனிய நாடுகளிலும் கூட அம்பானி-அதானிகளின் நிர்பந்தம் காரணமாக ஊரடங்கை கால தாமதமாக அறிவித்தன மோடி-எடப்பாடி அரசுகள். தற்போது ஊரடங்கு தளர்வுகளும் அதே நிர்ப்பந்தத்தின் காரணமாகவே அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

உலக முதலாளித்துவ பொது நெருக்கடி கொரோனாவிலிருந்து துவங்கவில்லை. உலக பொது நெருக்கடி மேலும் ஆழப்பட்டுள்ளது; அவ்வளவே. இது ஏகாதிபத்தியங்களுக்கிடையில் கூர்மையான முரண்பாடுகளை உண்டாக்குகிறது. அமெரிக்க-நேட்டோ, சீன-இரசிய ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையில் உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போரையும், காலனியாதிக்கத்தையும், பாசிசத்தையும் தீவிரப்படுத்தி வருகின்றது. கொரோனா கொள்ளை நோயால் இலட்சக் கணக்கில் மக்கள் செத்துமடியும் நேரத்திலும், செல்வாக்கு மண்டலங்களுக்காக ஏகாதிபத்திய நாடுகள் பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன. ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகள் கூர்மையடையும் தீவிரத்திற்கேற்ப இந்தியா போன்ற காலனிய நாடுகள் மீதான காலனி ஆதிக்கமும் பாசிசமும் தீவிரம் பெறுகின்றன. உலகம் ஒரு யுத்த அபாயத்தையும்-பாசிச அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரோனா பரவலுக்குப் பிறகு, ஈரான், வெனிசுலா, சிரியா உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதார தடைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளின் பொருளாதாரம் ஏற்கனவே அமெரிக்காவால் சீரழிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவிற்கு எதிராக இந்நாடுகள் போராடுவதற்கு அமெரிக்க வல்லூறு தடை போடுகிறது. உலக வங்கியிலிருந்து கடன் பெற்று கொரோனா தொற்றிற்கு எதிராக போராட இந்நாடுகள் முயற்சி எடுத்தன. அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீன-ரசிய ஏகாதிபத்திய முகாம் கண்டித்துள்ளது. ஒருபுறம் அமெரிக்கா இந்த நாடுகள் மீது பொருளாதார தடைகள் மூலமும், இராணுவ ஆக்கிரமிப்புகள் மூலமும் புதிய காலனியாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கின்றன. மறுபுறம் வெனிசுலா, ஈரான் போன்ற நாடுகள் மீது உதவி’ ‘கடன்’ ‘சேம நல அரசுஎனும் பெயர்களில் சீன-இரசிய ஏகாதிபத்திய முகாமும் தனது புதிய காலனியாதிக்கத்தை நிறுவ முயல்கிறது. இந்த நாடுகளின் எண்ணெய் வயல்களை ரோஸ்நெப்ட், ஜாருநெப்ட் போன்ற ரசியாவின் கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்துள்ளன. வெனிசுலாவின் வேளாண்மை துறையை சீனா கைப்பற்றி வருகிறது. மேலும் இந்நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்கள்முககவசங்களை உதவிஎன்ற பெயரில் அனுப்பி தன் பிடியை இறுக்குகின்றன.

அமெரிக்காவும்-சவுதி அரேபியாவும் கைகோர்த்து ஏற்கனவே ஏமனின் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ மனைகளை அழித்துவிட்டது. அது கொரோனாவிற்கு எதிராக போராட முடியாமல் தவித்து வருகிறது. இதை பயன்படுத்தி சீன-இரசிய முகாம் ஆப்பிரிக்க நாடுகள் மீது தனது புதிய காலனியாதிக்கத்தை மேலும் தீவிரப்டுத்துகிறது. புதிய பட்டுச் சாலைஎன்ற சீனாவின் உலக மேலாதிக்க வலைப்பின்னலில் ஆப்பிரிக்க நாடுகள் சிக்கியுள்ளன. இலத்தின் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்க முகாம் அரசியல் - பொருளாதார - இராணுவ ஆக்கிரமிப்புகளின் மூலம் சூறையாடியது. தற்போது அந்நாடுகளை நெருக்கடியிலிருந்து மீட்பது எனும் பெயரில் அந்நாடுகளின் உள்கட்டமைப்பு, உற்பத்தி துறை, சேவைத் துறைகளில் பொதுத்துறை - தனியார் பங்கேற்பு எனப்படும் கீன்சிய சமுக நல அரசுஎனும் பெயரில் புதிய காலனியாதிக்கத்தை சீனா நிறுவி வருகிறது.

அண்மையில் ஐ.நா சபை, ஏகாதிபத்தியங்களின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், காலனிய - புதிய காலனிய - ஒடுக்கப்பட்ட நாடுகளில் தன்னெழுச்சியாக நடைபெற்றுவரும் போராட்டங்களை புரட்சிகரப் போராட்டங்களாக மாறாமல் தடுப்பதற்கும், ‘பொதுத்துறை-தனியார் பங்கேற்புஎனப்படும் கீன்சிய சமூக நல அரசுக் கோட்பாட்டை ஏகாதிபத்திய நாடுகள் பின்பற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளது. இரசிய-சீன முகாம் அதை பின்பற்ற துவங்கிவிட்டது. அமெரிக்கா புளு-டாட்-நெட்வொர்க்எனும் பெயரில் பொதுத்துறை - தனியார் பங்கேற்பு திட்டங்களை அமல்படுத்த தயாராகி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் காப்புக் கொள்கைகள் இதற்கு தடையாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு கீன்சிய சமூக நல அரசுகொள்கையை பின்பற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை - தனியார் பங்கேற்புகீன்சிய பொருளாதாரம் என்பது அரசு மூலதனத்தில் தனியார் மூலதனப் பெருக்கத்திற்கு வழிவகை செய்யும் புதிய காலனிய வடிவமாகும்.

இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம் என்று டிரம்ப் கும்பலால் முன்வைக்கப்பட்டதை இசுரேல் ஏற்றுக்கொண்டது. பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியை (West Bank) இசுரேல் ஆக்கிரமித்து வருவதை அங்கீகரிக்கும் ஒப்பந்தமே டிரம்ப் அறிவித்த ஒப்பந்தமாகும். மேலும் அண்மையில் கூட (கொரோனாவிற்குப் பிறகு) இசுரேலின் ஜெட் விமானங்கள் காசாவை குறிவைத்து தாக்கின. காசாவின் மருத்துவ கட்டமைப்பு முழுவதையும் அமெரிக்க - இசுரேல் கும்பல் அழித்து வருகிறது.

தென் சீன கடலுக்கு சீனா முழுமையான உரிமை கோரி வந்ததையடுத்து கடந்த மாதம் அங்கு தனது இருப்பை அதிகப்படுத்தியுள்ளது. வளங்கள் மிக்க தென்சீனக் கடலை தனது பிடிக்குள் கொண்டு வந்து தெற்காசிய அரசியல் – பொருளாதார - இராணுவ மேலாதிக்கத்திற்கும், உலக மேலாதிக்கத்திற்கும் சீனா முயற்சித்து வருகிறது. தென்சீனக்கடல் மீதான சீனாவின் உரிமை கோரலையும், தெற்காசிய மேலாதிக்கத்தையும் வீழ்த்தி தனது மேலாதிக்கத்தை நிறுவ இந்தோ – பசிபிக் இராணுவ - பொருளாதார கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இக்கூட்டமைப்பில் இந்தியா முக்கிய பங்காற்றி அமெரிக்காவின் மேலாதிக்க முயற்சிகளுக்கு சேவை செய்து வருகிறது.

கடந்த மாத இறுதியில் பெய்ஜிங்கின் பிடியில் உள்ள தென் சீனக் கடலின் பாராசெல் (Paracel) தீவுகளுக்குள் அமெரிக்காவின் ஏவுகணை அழிப்பான்கள் (Missile Destroyers) நுழைய முயற்சித்தது. இதை சீனா கண்டித்துள்ளது. வியட்நாம், மலேசியா, புருனே, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகள் தென்சீனக் கடலை பகிர்ந்து வருகின்றன. இதில் அதிகளவு உரிமை வியட்நாமுக்கே உள்ளது. அவ்வாறிருக்க தென்சீனக்கடல் முழுவதற்கும் சீனா உரிமை கோரி வருகிறது. இந்த உரிமை கோரலை சர்வதேச நீதிமன்றம் (International Arbitrary Court) 2016லியே மறுத்துவிட்டது.

சீனாவின் மக்கள் விடுதலை படை எனப்படும் இராணுவம் இரு தடவை தைவான் ஜலசந்தியை ஆக்கிரமிக்க முயற்சித்ததையடுத்து, அமெரிக்காவின் கப்பல்கள் அந்த ஜலசந்தி வழியாக அனுப்பப்பட்டது. தைவான் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை முறியடிப்பதன் பெயரில் அமெரிக்கா தைவானை இத்தகைய உதவிகள் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது.

தென்சீனக் கடலில் 30க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவை வியட்நாமின் கடற்கரையிலும் அமைந்துள்ளன. அந்த முப்பது தீவுகளும் பாராசெல் (Paracel) தீவுகள் என்றழைக்கப்படுகின்றன. ஆனால் அவை சீனாவில் ஜிஷா (Xisha) தீவுகள் எனவும், ஹோவாங் தீவுகள் என வியட்நாமிலும் அழைக்கப்படுகின்றன. இந்த பாராசெல் தீவுகள் அனைத்தையும் சீனாவே கட்டுப்படுத்துகின்றன. இத்தீவுகளுக்கு வியட்நாம் மட்டுமின்றி தைபேய் (தைவான்) மற்றும் ஹனோய் நாடுகளும் உரிமை கோருகின்றன. ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளும் தனது இராணுவ இருப்பை தைவான் ஜலசந்தியில் மட்டுமின்றி, தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடலிலும் அதிகப்படுத்தியுள்ளன.

ஏப்ரல் 22 அன்று சீனாவின் லியாஒனிங் (Liaoning) எனப்படும் சீன இராணுவத்தின் விமானத் தாங்கிகள் (Aircraft carrier) தென் சீனக் கடல் வழியாக தைவான் ஜலசந்திக்கு அனுப்பப்பட்டது. மறுநாள் யோகுசுகா (Yokusuka)வை தளமாகக் கொண்ட அமெரிக்காவின் விமானம் தைவான் ஜலசந்தியில் நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க, சீன முகாம்களில் இந்த நடவடிக்கைகள் தெற்காசியாவில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இவ்விரு முகாம்களும் தென்சீனக் கடலை சுற்றிவளைப்பதன் மூலம் தெற்காசிய மேலாதிக்கத்திற்கும் - உலக மேலாதிக்கத்திற்கும் முயல்கின்றன.

கோவிட்-19 பிரச்சனையில் உலக சுகாதார நிறுவனம், சீனாவிற்கு சார்பாக செயல்படுவதாக குற்றம் சுமத்தி அமெரிக்கா WHOக்கு அளித்து வந்த நிதியுதவி சுமார் 400 மில்லியன் டாலர்களை இந்த ஆண்டு நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேறுவதாக கூறுகிறது. காரணம் அமெரிக்கா கடைபிடித்துவரும் காப்பு கொள்கைகளே ஆகும். இதை அடுத்து சீனா தனது நிதியுதவியை கூடுதலாக 30 மில்லியன் டாலர்களை அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தில் சீனாவின் மேலாதிக்கம் வளர்ந்து வருவதையே இது குறிக்கிறது. அமெரிக்காவின் நடவடிக்கையை விமர்சித்து சீனாவிற்கு ஆதரவாக பில்கேட்ஸ் பேசி வருகிறார்.

அமெரிக்கா கடந்த வாரம் வர்த்தகப் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்காக சீனாவுடன் ஏற்பட்ட சமரச வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. சீனாவும் இதை எதிர்கொள்ள தயார் என்கிறது. ஷாங்காய் கூட்டமைப்பு இனி டாலரில் வர்த்தகம் நடத்தப் போவதில்லை எனவும், உள்நாட்டு பணத்திலேயே வர்த்தகம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளது.

அமெரிக்க - சீன முகாம்களுக்கு இடையில் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகிறது. ஐரோப்பிய யூனியனில் உள்ள செர்பியாவிற்கு சீனா 5 பில்லியன் டாலர்களை உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு கடனாக அளித்துள்ளது. செர்பியா சீனாவின் ஒரு இணைப்பு - ஒரு சாலை (OBOR) திட்டத்தில் இணைந்துள்ளது. இதற்காக 4 பில்லியன் டாலர்களை செர்பியாவில் சீனா முதலீடு செய்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள ஏகாதிபத்திய நாடான இத்தாலி சீனாவின் புதிய பட்டு சாலை - ஒரு இணைப்பு - ஒரு சாலைத் திட்டத்தில் இணைந்துள்ளது. இவ்விரு ஐரோப்பிய நாடுகளுடனான சீனாவின் நல்லுறவிற்கு பிற ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. செர்பியா, இத்தாலிக்கு மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள், வெண்டிலேட்டர்களை ஏராளமாக சீனா ஏற்றுமதி செய்து அவற்றுடன் தனது நல்லுறவை வளர்த்துக் கொண்டுள்ளது. செர்பியா மீதான சீனாவின் ஆதிக்கத்தையும் ஐரோப்பிய யூனியன் கண்டித்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்வதற்கு ஏற்ற வகையில் சீனா அந்நிய முதலீட்டு கொள்கைகளை மாற்றம் செய்து வருகிறது. மேலும் அண்மையில் சீனாவின் 59 செயலிகளை முடக்கியுள்ளது. இதை அனுமதிக்கக் கூடாது என ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூறி வருகின்றன.

ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியாவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளன. அந்நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவிற்கு திருப்பி விடுவதற்கு அமெரிக்காவும் – மோடி கும்பலும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது இந்தியா மீதான அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்தின் பிடியை இறுகச் செய்வதற்கே வழிவகுக்கும். இந்தியாவும் சீனாவின் முதலீட்டை தடுக்கும் வகையில் தனது அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. இவ்வாறாக அமெரிக்கா ஆண்டையின் உத்தரவுகளை சிரமேற்கொண்டு செய்து வருகிறது மோடி கும்பல்.

கொரோனாவிற்குப் பிறகு, உலக முதலாளித்துவ நெருக்கடி ஆழப்பட்டு வருகிறது. ஏகாதிபத்தியங்களுக்கிடையில் முரண்பாடுகளை கூர்மையாக்கி வருகிறது. அமெரிக்க – நேட்டோ, சீனா - ரஷ்யா முகாம்களுக்கு இடையில் உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போர் முயற்சிகள் தீவிரம் பெற்று வருகின்றன. இதனால் இந்தியா மீதான அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்தை மேலும் அதிகப்படுத்தவே செய்யும். இது எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியாவில் பாசிசப் போக்குகளை தீவிரப்படுத்தும். இத்தகையதோர் பாசிச தாக்குதல்களை முறியடித்து பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை உருவாக்குவது காலத்தின் தேவையாகியுள்ளது.

இவ்விரு முகாம்களின் பனிப்போரை உள்நாட்டு போராக மாற்றுவது, அதாவது சொந்த நாட்டு பூர்ஷ்வாக்களை கணக்குத் தீர்ப்பது எனும் அடிப்படையில் யுத்த எதிர்ப்பு - பாசிச எதிர்ப்பு முன்னணியை கட்டியமைக்க வேண்டியுள்ளது. இம்முன்னணி ஏகாதிபத்திய நாடுகளில் சோசலிச குடியரசையும் புதிய காலனிய ஒடுக்கப்பட்ட நாடுகளில் மக்கள் ஜனநாயகக் குடியரசும் அமைப்பதற்கு தொடர்ந்து போராடும்.
சமரன்,
ஏப்ரல், மே, ஜூன் 2020

No comments:

Post a Comment