Friday 14 February 2020

குடியுரிமை திருத்த மசோதா: முற்றிலும் தவறான நியாயப்படுத்தவே முடியாத சட்டம்

(இது ஒரு மொழி பெயர்ப்பு கட்டுரையாகும். சமரன் நிலைப்பாட்டிலிருந்து
விமர்சன பூர்வமாக படிக்குமாறு வாசகர்களைக் கோருகிறோம் - ஆசிரியர்.)


டிசம்பர் 13, 2019 அன்று குவஹாத்தியில் சிகிஙிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அனுமதிக்கப்படத்தக்க இறுதி தேதியாக ஏன் 31 டிசம்பர் 2014 தேர்ந்தெடுக்கப்பட்டது அல்லது குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த, புலம்பெயர்ந்தவர்களுடைய விஷயத்தில் மட்டும் குடியுரிமை பெறுவதற்கான பன்னிரெண்டு வருட கட்டாயத் தகுதி எதற்காக்க குறைக்கப்பட்டது என்பதை CAB தெளிவுபடுத்தவில்லை.

குடியுரிமை (திருத்தம்) மசோதா, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டையோ அல்லது இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு சரிசமமான பாதுகாப்பு போன்ற அரசியலமைப்பிற்கே உரிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வியைடைந்தது. எந்தவொரு சட்ட விதிகளின் செல்லுபடித் தன்மையையும் தீர்மானிப்பதற்கான இன்றியமையாத சோதனை என்னவென்றால், அந்தச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நபர்களும் சமமான சூழ்நிலைகள் மற்றும் சமமான நிபந்தனைகளின் கீழ் சமமாக நடத்தப்படுகிறார்களா என்பது தான் என இந்திய அரசியலமைப்பு குறித்த பாடப்புத்தகங்கள் கூறுகின்றன. இந்த சோதனையின் மூலம் உய்த்தறியப்படுவது யாதெனில், நியாயமானவர்கள் எந்தவொரு பாரபட்சமில்லாமல் கருதப்படவேண்டும் எனவும் நேர்மையற்றவர்கள் ஒருபோதும் சம உரிமை உடையோராக பாவிக்கக்கூடாது என்பதே ஆகும். ஆகவே, அரசியலமைப்பின் 14 வது பிரிவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லது இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு சரிசமமான பாதுகாப்பை எவர்க்கும் இந்திய அரசு மறுக்கக் கூடாது. மேலும் எந்த ஒரு வர்க்கத்தைச் சார்ந்தோருக்கும் எதிராகப் பாகுபாட்டினை அனுமதிக்கக்கூடாது என தெளிவாக கூறுகிறது. அதே நேரத்தில் அது உத்தரவாதம் அளித்த சமத்துவ உரிமைகளை செயல்படுத்தும் நோக்கங்களுக்காக நபர்களை வகைப்படுத்துவதைத் தடுக்கவும் செய்யாது என்பதே ஆகும்.

அனுமதிக்கப்பட்ட வகைப்பாட்டிற்கு, அரசியலமைப்பு இரண்டு நிபந்தனைகளை வகுக்கிறது: முதலாவது, அது ஒரு எளிதில் புரிந்துகொள்ளத்தக்க வேறுபாட்டின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும். அதாவது ஒரே வகுப்பிலிருந்து பிரிந்தவர்களிடமிருந்து ஒற்றை வகுப்பில் இணைக்கப்பட்ட நபர்கள் அல்லது அவர்களது வாழ்நிலைகளை வேறுபடுத்த வேண்டும்; இரண்டாவது, சிக்கலாக உள்ள சட்டத்தின் வழியே அத்தகைய வேற்றுமைத் தன்மைகள் எப்போதும் இலக்கோடு பொருந்திய நியாயமான பிணைப்பினை சம்பாதிக்க/வென்றெடுக்க முயல வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோசனையில் உள்ள சட்டத்தின் நோக்கத்திற்கும் வகைப்படுத்தலின் அடிப்படை முகாந்தரத்திற்கும் இடையே ஒரு தொடர்பு நிச்சயமாக இருக்க வேண்டும்.

அரசியலமைப்பால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த கொள்கையைத் தலைகீழாக மாற்றுவதற்கு குடியுரிமைச் சட்டத் திருத்தம் (CAB) முயல்கிறது. 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 2 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் உட் பிரிவு (ஆ) சட்டவிரோதமாக குடியேறியவரைபின்வருமாறு வரையறுக்கிறது:

இந்திய நாட்டிற்குள்ளே நுழைந்த ஒரு அயல்நாட்டவர்

(i)         செல்லத்தக்க நுழைவுரிமையோ அல்லது இன்ன பிற பிரயாண அடையாளச்சீட்டுக்களோ மேலும் அவ்வகைப்பட்ட ஆவணங்களோ அல்லது எந்த ஒரு சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது அதன் மூலமோ ஒரு அதிகாரியால் வேண்டப்படுகிறவை இல்லாமலோ, அல்லது

(ii) செல்லத்தக்க நுழைவுரிமையோ அல்லது இன்ன பிற பிரயாண அடையாளச் சீட்டுக்களோ மேலும் அவ்வகைப்பட்ட ஆவணங்களோ அல்லது எந்த ஒரு சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது அதன் மூலமோ ஒரு அதிகாரியால் வேண்டப்படுகிறவை வைத்திருந்தபோதிலும் அனுமதிக்கப்பட்ட காலவரையறைக்கு மேலாக அவ்விடத்தில் இருந்தாலோ அவர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்என்றே பொருள்படும்.

இந்த வரையறைக்கு உட்படுத்த குடியுரிமைச் சட்ட மசோதா (CAB) விலக்கு கூறு ஒன்றை இதனிடையே உட்புகுத்துகிறது.

அந்த விலக்குக் கூறு தெரிவிப்பது:

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து, சீக்கியர், பௌத்தர், சமணர், பார்சி அல்லது கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரும், 2014 டிசம்பர் 31 ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ இந்தியாவிற்குள் வந்திருந்தாலும், 1920-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நுழைவுரிமை (இந்தியாவிற்குள் பிரவேசித்தல்) சட்டத்தின்  [Passport(entry into India)Act, 1920] பிரிவு(3)இன் துணை பிரிவு(2)இன் உட்பிரிவு(இ) என்பதன் படியோ அல்லது அதன் காரணமாகவோ அல்லது 1946-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அயல்நாட்டவர்கள் சட்டத்தின் [Foreigners Act-1946] ஷரத்துகளிலிருந்தோ அல்லது அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் அல்லது விதிகளிலிருந்தோ மத்திய அரசாங்கத்தால் விலக்களிக்கப்பட்டவர் எவரும் இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்”.

இந்த விலக்குக் கூறின் இரகசியம் தேனொழுக கருத்தாளும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. குடியுரிமைச் சட்ட திருத்தத் மசோதாவுடன் இணைக்கப்பட்ட நோக்கம் மற்றும் நியாய அறிக்கை (Statement of Object and Reason-SOR), இந்தியாவின் எல்லைப் பகுதிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலுள்ள தற்போதையே எல்லை பகுதிகளின் ஊடாக மக்களின் இடம்பெயர்வு தொடர்ந்து நடந்து வருகிறது என்று விவரிக்கிறது. அந்த அறிக்கை (SOR) மேலும் கூறுவது: “1947 ஆம் ஆண்டில் இந்தியா பிரிக்கப்பட்டபோது பல்வேறு மதங்களைச் சேர்ந்த பிரிக்கப்படாத இந்தியாவின் இலட்சக் கணக்கான குடிமக்கள் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷின் அந்த எல்லையோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் அரசியலமைப்புகள், அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவையாக இருப்பதற்கு அனுமதியளிக்கிறது. இதன் விளைவாக, இந்து, சீக்கியர், பௌத்தர், சமணர், பார்சி மற்றும் கிறிஸ்த்துவ சமயத்தைச் சேர்ந்த பலர் அந்த நாடுகளில் மதத்தின் அடிப்படையில் அடக்குமுறைகளைச் சந்தித்தனர். இத்தகைய அடக்குமுறைகளைப் பற்றி அவர்களில் சிலர் தங்கள் அன்றாட வாழ்க்கையில், அங்கு தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கும், பகிரங்கமாக அறிவிப்பதற்கும், பிரச்சாரம் செய்வதற்குமான உரிமை இடைமறிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கலக்கம் கொண்டுள்ளனர். இதுபோன்ற பல நபர்கள் வாழ்விடம் தேடி இந்தியாவிற்கு தப்பி வந்துள்ளனர். அவர்களின் பிரயாண அடையாளச் சீட்டுகள் காலாவதியானாலும் அல்லது முழுமையற்றதாக இருந்தாலும் அல்லது அடையாள ஆவணங்களே இல்லாவிட்டாலும் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள்”.

கவனிக்கத்தக்க தவறுகள்

இந்த மூன்று நாடுகளின் முஸ்லிம்கள் மதத்தின் அடிப்படையில் அடக்குமுறைகளைஎதிர்கொள்ளவில்லை என்று குடியுரிமைத் திருத்த மசோதா மேற்கோள்காட்டுகிறது என்பது தெளிவு, ஏனெனில் இஸ்லாம் அங்கு அரச மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. மத அடக்குமுறைகளை எதிர்கொண்டு இந்தியாவுக்கு தப்பி வருபவர்களில் முஸ்லிம்களும் அடங்குவார்களா என்பதில் விளக்கங்கள் ஏதுமற்ற கள்ள மௌனத்தையே கூடுதலாக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

அரசாங்கத்திலும் சரி பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திலும் சரி இந்த மசோதாவின் ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் உள்ள அஹமதியர்களும், ஷியாக்களும் ஏன் மத ரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் என்ற பொது வரையறைக்குள் உட்படுத்தவில்லை என்ற கேள்விக்கு கள்ளத்தனமான மௌனத்தையே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இசுலாம் அல்லாத பிற மதங்களை அரச மதமாக கொண்டுள்ள அண்டை நாடுகளான இலங்கை மற்றும் நேபாளத்தில் உள்ள சிறுபான்மையினர்களும் கடந்த காலங்களில் இந்தியாவிற்குள் தப்பி வந்துள்ளனர். இந்த மசோதாவின் சட்ட வரம்புக்குள் இவர்களும் ஏன் கொண்டு வரப்படவில்லை என்ற கேள்விக்கு இந்த மசோதா மீண்டும் விளக்கம் ஏதுமற்ற சமரசத்தையே முன்வைக்கிறது. பிரிக்கப்படாத இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுடன் ஆப்கானிஸ்தானை ஒப்புமைப் படுத்துவதற்கும் கூட எந்த நியாயமான காரணங்களும் இல்லை. மியான்மரில் நடத்தப்பட்ட மத ஒடுக்குமுறையைத் தொடர்ந்து பெருமளவில் இந்தியாவுக்கு தப்பி வந்த ரோஹிங்கியா முஸ்லிம்களையும், மத ஒடுக்குமுறைக் காரணமாக புகலிடம் நாடிய அண்டை நாடுகளைச் சேர்ந்த நாத்திகர்களையும் தெரிந்தே சேர்க்காமல் தவிர்த்திருப்பது இந்த மசோதாவின் விவரிக்க முடியாத மற்றும் கவலைக்குரிய மற்றொரு அம்சமாகும்.

அரசாங்கம் பிற வகுப்பினரையும் அவர்களது பூர்வீக நாடுகளையும் உள்ளடக்கி இந்தப் பட்டியலை மேலும் விரிவுபடுத்தக்கூடும் என்ற யோசனை பூசல் நிறைந்தது மட்டுமன்றி ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல. இந்த மசோதாவின் ஆதரவாளர்களே கூட இதுபோன்ற கொள்கை விஷயத்தில் அரசாங்கத்தின் தெரிவு என்பது சட்டத்தால் நிலைநாட்டக்கூடியதல்ல என நிராகரிக்கின்றனர். அரசியலமைப்பின் 14-வது பிரிவின் இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்ய தவறியதே இந்த மசோதாவின் தோல்வி. இதுவே பலருக்கு அதிருப்தி அளிப்பதாக தோன்றியது. இந்தச் சட்டத்தின் தற்போதைய விதிகளின் கீழ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்குள் செல்லத்தக்க நுழைவுச் சீட்டுகளின்றி அல்லது எவருடைய அனுமதிக்கப்பட்ட பிரயாணக் காலம் காலாவதியானதோ அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்படுவர். மேலும் இந்தச் சட்டத்தின் பிரிவு-5 அல்லது பிரிவு-6 இன் கீழ் இந்தியக் குடியுரிமைப் பெறுவதற்கானத் தகுதியையும் இழப்பர்.

நுழைவுரிமை (இந்தியாவிற்குள் பிரவேசித்தல்) சட்டம், 1920, மற்றும் அயல்நாட்டவர் சட்டம், 1946 மட்டுமல்லாமல் செப்டம்பர் 7, 2015, மற்றும் ஜூலை 18, 2016 தேதியிட்ட அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட விதிகள், அறிவிப்புகள் அல்லது ஆணைகள் ஆகியவற்றின் பாதகமான தண்டனை விளைவுகளிலிருந்து இது போன்ற புலம்பெயர்ந்தோருக்கு மைய அரசு விலக்கு அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 8, 2016 மற்றும் செப்டம்பர் 14, 2016 தேதியிட்ட ஆணைகளின் மூலம் இந்தியாவில் நீண்ட கால அடிப்படையில் தங்குவதற்கான நுழைவிசைவுச் சீட்டைப் பெறுவதற்கு இவர்களைத் தகுதியுடையோராக அறிவித்தது. அத்தகைய குடியேறியவர்களை இந்திய குடியுரிமைக்கு தகுதியுடையவர்களாக மாற்றத் தேவையான நாடாளுமன்ற ரீதியிலான ஆதரவை வழங்குவதாக்க குடியுரிமைத் திருத்த மசோதா முன்மொழிந்தது…

நோக்கம் மற்றும் நியாய அறிக்கை (SOR) விளக்குவது:

வரையறுக்கப்பட்ட கெடு தேதியான டிசம்பர் 31, 2014 வரை இந்தியாவிற்குள் வந்த சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அவர்களுடைய குடியுரிமை விவகாரங்களைக் கட்டுப்படுத்த ஒரு தனிப்பட்ட நிருவாக அமைப்பு தேவை. இந்த நோக்கத்திற்காக, இந்த சட்டத்தால் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் மற்றும் நடத்தை முறைகளுக்கு உட்பட்டு மத்திய அரசு அல்லது அதனால் குறிப்பிடப்பட்ட ஒரு ஆணையத்தின் மூலம் பதிவுச் சான்றிதழ் அல்லது குடியுரிமைப் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அவர்களில் பலர் நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவிற்குள் வந்திருப்பதால், அவர்கள் பிரிவு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய குடியுரிமைக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தாலோ அல்லது இந்தச் சட்டத்தின் மூன்றாவது அட்டவணையில் உள்ள விலக்கு கூறின் கீழ், குடியுரிமைப் பெறுவதற்கானத் தகுதிகளைப் பூர்த்தி செய்தாலோ அவர்களுக்கு இந்தியாவில் நுழைந்த நாளிலிருந்து இந்தியாவின் குடியுரிமை வழங்கப்படலாம்”.

சட்டத்தின் 6-வது பிரிவு அதன் மூன்றாவது அட்டவணையின் அடிப்படையில் 12 வருட கட்டாயக் குடியிருப்பை வெளிநாட்டவர் இயற்கையாக குடியுரிமை பெரும் முறையின் மூலம்  [By Naturalisation] குடியுரிமைப் பெறுவதற்கான தகுதியாகப் பரிந்துரைக்கிறது. இந்த மூன்று நாடுகளைச் சார்ந்த குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தற்போதுள்ள 11 ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து வருடங்களுக்கு இந்தியாவில் குடியிருந்ததாக நிறுவ முடியுமானால், இயற்கையாகக் குடியுரிமைப் பெரும் முறையின் மூலம் குடியுரிமைப் பெற தகுதி வாய்ந்தவர்களாக மாற்றுவதற்கு மூன்றாவது அட்டவணையில் திருத்தம் செய்ய குடியுரிமைத் திருத்த மசோதா முயல்கிறது. நோக்கம் மற்றும் நியாய அறிக்கையின்(SOR) 7வது பத்தி இந்த குறைப்பு நடவடிக்கைக்கு அரைகுறையான விளக்கத்தை மட்டுமே வழங்கியது: மேற்கூறிய (மூன்று) நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை மதத்தினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் குடியுரிமைச் சட்டம், 1955-ன் பிரிவு-5 இன் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்து வருகின்றனர் [பதிவுசெய்வதின் மூலம் குடியுரிமை பெறுவதை குறிக்கிறது]. ஆனால் அவர்களுடைய இந்திய வம்சாவளியை நிரூபிக்க அவர்களால் முடியவில்லை. எனவே, அவர்கள் மேற்சொன்ன சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் இயற்கையாக குடியுரிமை பெரும் முறையின் மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள், இது மற்ற விதிகளுக்கிடையில், சட்டத்தின் மூன்றாவது அட்டவணையின், 12 வருட குடியிருப்பின் அடிப்படையில் இயற்கையாகக் குடியுரிமைப் பெறுவதற்கான தகுதியையே பரிந்துரைக்கிறது. அவர்கள் பெரும்பாலும் நிரந்தரமாக இந்தியாவில் குடியிருந்தாலும் இது போன்ற விதிகள் அவர்களுக்கான வாய்ப்புகளையும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய உதவிகளையும் மறுக்கிறது”.

இறுதியான கெடு தேதியாக 31 டிசம்பர், 2014 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்லது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரின் விஷயத்தில் மட்டும் 12 வருட குடியிருப்புக்கான நிபந்தனை ஏன் குறைக்கப்பட்டது என்பதை குடியுரிமைத் திருத்த மசோதா தெளிவுபடுத்தவில்லை. இதன் தொடர்ச்சியாக அத்தகைய புலம்பெயர்ந்தோருக்கு கூடுதலான சலுகைகளை வழங்க குடியுரிமைத் திருத்த மசோதா(CAB) முயல்கிறது. சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு(6பி)-இன் துணைப்பிரிவு (3) இன் கீழ், சட்டவிரோத குடியேற்றம் அல்லது குடியுரிமை தொடர்பாக ஒரு நபருக்கு எதிராக நிலுவையில் உள்ள எந்தவொரு நடவடிக்கையும் அவருக்கு அல்லது அவளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளைக் குறைக்கும்.

பழங்குடியினப் பகுதிகளுக்கான விலக்குரிமை

பிரிவு 6பி-இன் துணைப்பிரிவு (4) அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அசாம், மேகாலயா, மிசோரம் அல்லது திரிபுராவின் பழங்குடிப் பகுதியையும், 1873-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வங்காள கிழக்கு எல்லை விதிமுறைகளின்  [Eastern Frontier Regulation, 1873] கீழ் அறிவிக்கப்பட்ட உட்புற எல்லையின்  [Inner Line] கீழ் உள்ள பகுதியையும் குடியுரிமைச் சட்டத்தின் நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கிறது. ஆறாவது அட்டவணையின் கீழ் உள்ள வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும் அரசியலமைப்பு உத்தரவாதத்தையும், வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறையின் (1873) “உள் எல்லை இசைவுInner Line Permit-ILP) நிருவாக முறையின் கீழ் உள்ள பகுதிகளுக்கு வழங்கப்படும் சட்டரீதியான காப்புறுதியையும் பாதுகாப்பதற்காக இந்த விலக்கு நியாயப்படுத்தப்படுகிறது. ஆறாவது அட்டவணை தன்னாட்சி சபைகள் மூலம் பழங்குடியினரின் முன்னேற்றத்தை எளிதாக்குவதற்கும், இந்த பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களின் தனித்துவமான சமூக பழக்கவழக்கங்களைப் பாதுகாப்பதற்கும், அங்கு வாழும் மக்களைச் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்கும் இயற்றப்பட்டது.

அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் நாகாலாந்துக்கு இந்திய குடிமக்கள் உட்பட எவரும் நுழைவதை உள் எல்லை இசைவு’ (ILP) முறை கட்டுப்படுத்துகிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் ஒரு சட்டவிரோதக் குடியேறி குடியுரிமையைப் பெற்றவுடன், அவர் அல்லது அவள் மற்ற இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும் அதே கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் இந்த பகுதிகளில் வசிக்கும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு குடியுரிமைத் திருத்த மசோதா (CAB) எதற்காக விலக்களிக்கிறது என்பதை நோக்கம் மற்றும் நியாய அறிக்கை’ (SOR) விளக்கவில்லை.

[டிசம்பர் 9 ம் தேதி, நாகாலாந்து அரசாங்கம் உள் எல்லை இசைவு’(ILP) நிருவாக முறையை திமாபூர் மாவட்டம் வரை விரிவுபடுத்தியது. அதுவரை திமாபூர் அம்மாநிலத்தில் உள் எல்லை இசைவு’(ILP) முறையின் கீழ் இல்லாத ஒரே மாவட்டமாக இருந்தது. டிசம்பர் 11 அன்று, இந்திய ஜனாதிபதி மணிப்பூர் மாநிலம் முழுதையும் உள்ளடக்கும் வகையில் உள் எல்லை இசைவு’(ILP) நிருவாக முறையை விரிவுபடுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார்.]

ஒரு ஆண் அல்லது பெண், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தால் (அதாவது, அந்த நபர் இந்தியாவின் முன்னாள் குடிமகனாக இருந்திருந்தால் அல்லது அவ்வாறு இருந்தவரின் வாரிசாக இருந்தால்) அல்லது ஒரு இந்திய வம்சாவளி வந்தவரை துணைவராகக் கொண்டிருந்தால் ஒரு அயல்நாட்டவர் இந்தச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் அயல்நாட்டு குடிமகனாக (OCI) பதிவு செய்து கொள்ளலாம். அதிக முறை வருகை, பல்நோக்கு வாழ்நாள் நுழைவிசைவு  [Multipurpose Lifelong Visa], இந்தியாவில் நீண்ட காலம் தங்குவதற்கான வெளிநாட்டவர்கள் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு, வேளாண்மைக்குரிய அல்லது தோட்டப் பண்ணைகள் தொடர்பானச் சொத்துக்களை விலைக்கு வாங்கும் உரிமை தவிர்த்து நிதி, பொருளாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு [NRI] நிகரான சம அந்தஸ்து போன்ற சலுகைகள் அத்தகைய அயல்நாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.மத்திய அரசு அறிவித்த எந்தவொரு சட்டத்தையும் ஒரு நபர் மீறியிருந்தால் அட்டைதாரரின் கருத்தை கேட்க ஒரு நியாயமான வாய்ப்பை வழங்கிய பின்னர், இந்தியாவின் அயல்நாடு குடிமகனுக்கான(OCI) பதிவை ரத்து செய்ய அனுமதிக்கும் சட்டத்தை இம்மசோதா திருத்துகிறது. பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அயல்நாட்டு குடிமகனுக்கான(OCI) பதிவை ரத்து செய்ய 1955 சட்டம் ஏற்கனவே வழங்கியபோது, இந்த ஷரத்தை சேர்க்க வேண்டியதற்கான காரணத்தை இந்தச் சட்டத்தின் நோக்கம் மற்றும் நியாய அறிக்கை’(SOR) விளக்கவில்லை. இது சட்டமன்றத்தின் அதிகப்படியான அதிகாரமளிக்கும் நடைமுறைக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக மைய அரசால் அறிவுறுத்தப்பட்டு அயல்நாட்டு குடிமகனுக்கான(OCI) பதிவை ரத்து செய்வதற்கு பயன்படும் சட்டங்களின் தன்மை குறித்து எந்த வழிகாட்டலையும் குடியுரிமைத் திருத்த மசோதா(CAB) வழங்கவில்லை.

சட்டவிரோதக் குடியேறிகளில் குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அவர்களின் பிறப்பிடம், மதம், இந்தியாவில் நுழைந்த தேதி மற்றும் இந்தியாவில் வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தும் குடியுரிமைத் திருத்த மசோதாவின் (CAB) அணுகுமுறை கடுமையான அரசியலமைப்பு சவாலுக்கு உட்பட்டது. இத்தகைய வேறுபடுத்தும் காரணிகள் நியாயமான குறிக்கோளிற்கு உதவும் வகையில் அதாவது இந்த மசோதா அடைய விரும்பும் இலக்கிற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதே முதன்மையான மற்றும் முக்கியமான கேள்வியாக உள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் அண்டை நாடுகளில் மத ரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதாக இருந்தால், குடியுரிமை திருத்த மசோதா (சிகிஙி) குறிப்பிட்ட நாடுகளையும், மதத்தையும் தெரிவுசெய்து உள்ளடக்கியிருப்பது மேலும் அதே நோக்கத்தின் அடிப்படையில் சேர்ப்பதற்கு தகுதியுள்ள மற்றவர்களை விலக்கி வைத்ததன் மூலம், பாகுபாடு காட்டாத கொள்கையை  [Non-discrimination Policy] பூர்த்தி செய்வதற்கான சாத்தியப்பாட்டை இழந்தது. இந்த மதங்கள் மற்றும் மூன்று நாடுகள் குறித்து தற்போது மத்திய அரசால் முன்வைக்கப்படும் நியாயவாதம் பலருக்கு நம்பிக்கை அளிக்கவில்லை, மேலும் அரசியலமைப்பின் அடிப்படையில் சரியான காரணத்தை வழங்கவில்லை.

மூன்று நாடுகளிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் புறக்கணிக்கப்பட்ட மதத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்கள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லது இந்தியாவின் ஆட்சிப் பகுதிக்குள் உள்ள சட்டங்களின் கீழ் சமமான பாதுகாப்பு போன்ற உரிமைகள் வழங்கப்படாதது குறித்தும், மேலும் இந்த மசோதாவின் வெளிப்படையான தெரிவிக்கப்பட்ட நோக்கத்திற்காக, அதாவது, அண்டை நாடுகளில் மத அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது என்பதனை நிறைவேற்ற இத்தகையவர்களின் புறக்கணிப்பு எவ்வாறு சேவை செய்கிறது என இவர்கள் கேள்வி எழுப்பலாம். இந்தியாவில் குடியுரிமைக் குறித்த முக்கியமான அறிஞரான அனுபமா ராய் கருத்துப்படி, மத ஒடுக்குமுறை வகைபாட்டிற்கான ஒரு நியாயமான அடிப்படையாக இருந்தாலும், இந்திய குடியுரிமையின் அஸ்திவாரங்களான மதச்சார்பின்மை மற்றும் பாகுபாடற்ற குடியரசுத் தன்மை போன்றவற்றை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இதைப் புகுத்த முடியாது. அரசியலமைப்பின் நியாயமுறைகள் ஒருபுறம் இருக்க, ஒரு சட்டத்தின் செல்லுபடித் தன்மையைச் சோதிக்க சமீப காலங்களில் நீதிமன்றங்களையே பெருமளவில் நம்ப வேண்டிய நிலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பிரண்ட்லைன், ஜனவரி 03, 2020
வி.வெங்கடேசன்

சமரன் 
ஜனவரி 2020

No comments:

Post a Comment