Sunday, 23 August 2020

சமரன், ஜூலை - ஆகஸ்ட் 2020

 சமரன் ஜூலை-ஆகஸ்ட் 2020 படிக்க பகிர இதழ் இணைப்பு:

https://drive.google.com/file/d/19ufjcawagD-O4tRGIs0tKNm0x3bY2OvY/view?usp=sharing


உள்ளடக்கம்:

நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் ஏகாதிபத்தியங்களின் காலனிய சுரண்டலுக்கு முற்றாகத் திறந்துவிடும் “சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்ட வரைவு 2020”ஐ திரும்பப் பெறு!

கொரோனா வைரஸ் சோதனைக் கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல. இயற்கையாகவே உருவானது என மரபியல் ஆய்வு காட்டுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் என்பது காலநிலை மாற்ற நெருக்கடியின் ஒரு பகுதியே ஆகும்

கொரோனா வைரஸிலிருந்து 5 பாடங்கள் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க உதவும்

“அமெரிக்காவிலிருந்து ‘மில்லியன் டாலர்கள்’ நிதியுதவி பெறும் இந்துத்துவா அமைப்புகள்”; யார் யாருக்கு எவ்வளவு? - அதிரவைக்கும் ரிப்போர்ட், அம்பலமானது செய்தி!

சாவர்க்கரை அறிதல் : இந்துத்துவ முன்னோடி, கற்பழிப்பை ஒரு அரசியல் கருவியாக எவ்வாறு நியாயப்படுத்துகிறான்

Wednesday, 15 July 2020

ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு பிறந்த கோவிட்-19: பின்புலத்தில் சர்வதேச மருத்துவ அரசியல்



ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு பிறந்த கோவிட்-19
பின்புலத்தில் சர்வதேச மருத்துவ அரசியல்


சீனாவின் வூஹான் நகரத்தில் டிசம்பர் மாத துவக்கத்தில் பரவத் துவங்கிய கொரோனா தொற்றுநோய் ஜனவரி மாத இறுதிக்குள் பெரும்பாலான உலக நாடுகளுக்கு பரவின. தென் கொரியா (8/1), தாய்லாந்து (13/1), அமெரிக்கா (15/1), ஜப்பான் (15/1), பிரிட்டன் (20/1), வட அமெரிக்கா (20/1), ஓசியான (20/1), தைவான் (20/1), ஹாங்காங் (23/1), பிரான்சு (24/1), ஜெர்மனி (27/1), இந்தியா (30/1), இத்தாலி (31/1), ஸ்பெயின் (31/1), ஆப்பிரிக்கா (14/2), ஈரான் (19/2), சிங்கப்பூர் (22/1), தென் அமெரிக்கா (26/2), பாகிஸ்தான் (26/2) போன்ற நாடுகளில் பெரும்பாலானவற்றில் ஜனவரி மாதத்திலேயே கொரோனா தொற்றுநோய் பரவிவிட்டன. ஆனால் உலக சுகாதார நிறுவனம் 30.01.2019 அன்று சர்வதேச அளவிலான பொது சுகாதார நெருக்கடிநிலைஎன்றும், 2020 மார்ச் 11 அன்று உலகளாவிய தொற்று நோய் (Pandemic) என்றும் அறிவித்தது.

ஜனவரி மாத இறுதியிலியே (30.01.2019) உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய தொற்றுநோய் (Pandemic) என்று அறிவிக்காமல், பொது சுகாதார நெருக்கடி நிலை என்று அறிவித்தது. ஏன்? 40 நாட்கள் கழித்தே மார்ச் 11 அன்றுதான் உலகளாவிய தொற்று நோய் என மிகவும் காலதாமதமாகவே அறிவித்தது. அதற்குள்ளாகவே உலக நாடுகளில் நோய்ப் பரவலும், மரணங்களும் அதிகரித்திருந்தன. இந்த கால தாமத அறிவிப்பிற்கும், உலக சுகாதார நிறுவனத்திற்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் குறித்தும் இக்கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்ப்போம்.

ஆனால், இவ்வளவு காலதாமதமான எச்சரிக்கைக்குப் பிறகும் கூட அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகளும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற காலனிய நாடுகளும் மக்கள் மீது எவ்வித அக்கறையுமின்றி எந்தவொரு தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்தன. சர்வதேச பயணிகளை பரிசோதித்தல், சர்வதேச போக்குவரத்தைத் தடைசெய்தல், ஊரடங்கு, சமூக இடைவெளி, கைகழுவும் முறைகள், நோயாளிகளைக் கண்டறிதல், பரிசோதித்தல், தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவம் வழங்குதல் போன்ற தொற்றுநோய் தடுப்பு முறைகளை முறையாக அவை பின்பற்றவில்லை. ஒரு திடீர் கொள்ளை நோய் பேரிடரை எதிர்கொள்ள அவை வக்கற்று இருந்தன.

ஜனவரி மாத இறுதியிலியே உலகளாவிய தொற்று நோய் என அறிவித்து, சர்வதேச விமானம், கப்பல், தரைவழி போக்குவரத்துகளை இரத்து செய்திருந்தால், நோய் இந்த அளவிற்கு உலகம் முழுதும் சமூக பரவலாக மாறியிருக்கும் வாய்ப்பு குறைவே.

அமெரிக்க அதிபர் பாசிசக் கோமாளி டிரம்ப் இது வெறும் ஃபுளு காய்ச்சல்; ஈஸ்டருக்குள் ஒழித்து விடலாம்; கிருமி நாசினியை ஊசியாக செலுத்தினால் கொரோனா ஓடிவிடும்என்று ஹாலிவுட் திரைப்படத்தின் சூப்பர் மேன்போல கோமாளித்தனமான வசனங்களை பேசிக் கொண்டிருந்தார். பிரிட்டன் அதிபர் நோய் வந்தால் வரட்டும், மக்களின் குழு நோய் எதிர்ப்பு சக்தி (Herd Immunity) அதிகரிக்கும்" என்று உளறிக் கொட்டினார்.

உண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ துறையே இல்லை என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம் ஆகும். அது மட்டுமின்றி அந்நாடுகளில் சுகாதாரப் பணிகள், மருத்துவம், மருந்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி தனியார்மயம், வணிகமயம் மற்றும் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் காப்பீடு நிறுவனங்களின் பிடியில் உள்ளன. ஆகவேதான் கொரோனாவை தடுக்கவும் முடியாமல், நோயாளிகளுக்கு மருத்துவமும் செய்ய முடியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றன. இதுவரை கொரோனா நோயால் உலகம் முழுதும் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,700 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா, ஏகாதிபத்திய நாடுகளின் வல்லரசு முகமூடியை கிழித்து தொங்க விட்டுள்ளது. மோடி கும்பலின் டிஜிட்டல் இந்தியாவின் வெற்று வாய்ச்சவடால்களை அம்பலப்படுத்தியுள்ளது. பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவம், சுகாதாரப் பணிகள் மருத்துவம், கல்வி மற்றும் ஆராய்ச்சியை அரசுகள் கைகழுவியதும், அத்துறைகளை தனியார்மயம், வணிகமயம் மற்றும் கார்ப்பரேட்மயமாக்கியதுமே உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவலுக்கும், மரணங்களுக்கும் முழுமுதற் காரணமாகும். மேலும் இந்த கொள்ளை நோயானது உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கைகள் படுதோல்வி அடைந்துவிட்டன என்பதையே உள்ளங்கை நெல்லிக்கனி போல எடுத்துக் காட்டுகின்றது.

உலக சுகாதார நிறுவனம் 11.3.2020 அன்று உலகளாவிய பெருந்தொற்று என்று அறிவித்த பிறகும் கூட உலக நாடுகள் விழித்துக் கொள்ளவில்லை. அப்போதாவது சர்வதேச விமான-கப்பல்-தரைவழி போக்குவரத்து வழிதடங்களை மூடி, இறுதியாக வந்த சர்வதேச பயணிகளையும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களையும் (contacts) ஆய்வகப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி மருத்துவம் வழங்கியிருந்தால், உலக நாடுகள் இவ்வளவு பெரிய பாதிப்புகளையும், மரணங்களையும் எதிர்கொள்ள நேர்ந்திருக்காது. சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் உலக நாடுகளும், மோடி அரசும் செய்யத் தவறிவிட்டன. கொரோனாவைத் தடுப்பதில் படுதோல்வி அடைந்துவிட்டன.

கொரோனா உலக முதலாளித்துவ நெருக்கடியை ஆழப்படுத்தி, ஏகாதிபத்திய முரண்பாடுகளை கூர்மையடையச் செய்துள்ளது. இது ஏகாதிபத்திய நாடுகளின் காலனியாதிக்கம், உலக மறுபங்கிட்டிற்கான பனிப்போர் மற்றும் பாசிசத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.

Tuesday, 14 July 2020

டெல்லி கலவரம்: இந்து ராஜ்ஜியத்தின் நேரடி சாட்சியம்!



டெல்லி கலவரம்: இந்து ராஜ்ஜியத்தின் நேரடி சாட்சியம்!

நாடெங்கும் குடியுரிமைச் சட்டங்களை எதிர்த்த போராட்டங்கள் பற்றி பரவுவதைக் கண்டு ஆத்திரமுற்ற பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் அப்போராட்டங்களை நசுக்குவதற்கும், அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதார நெருக்கடிகளை மூடிமறைத்து திசைதிருப்புவதற்கும், டெல்லியில் திட்டமிடப்பட்ட” “குஜராத் மாடல்மதக்கலவரத்தை காவல்துறை உதவியுடன் அரங்கேற்றி 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை படுகொலை செய்துள்ளது. ஏகாதிபத்திய யுத்த வெறியன், ‘இஸ்லாமிய எதிர்ப்புஇனவெறி பாசிஸ்ட் டிரம்ப் வருகையின் போது நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலையானது, தங்களது அமெரிக்க ஆண்டை டிரம்பிற்கு அவரது அடிமைகளான பாஜக-ஆர்எஸ்எஸ் சங்பரிவார ஓநாய் கும்பல் கொடுத்த நரபலி ஆகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, 15, 17, 19, 21 மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் பிரிவு 2,7 ஆகியவற்றுக்கு எதிரான குடியுரிமைச் சட்டத்தை மோடி-அமித்ஷா கும்பல் பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 8ம் தேதி நிறைவேற்றியது. அச்சட்டம் இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி இந்து மதத்திலேயே இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள், ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள், மற்றும் ஆதிவாசிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரானது என்று புரிந்துகொண்ட மக்கள் மதம் கடந்து-சாதி கடந்து-இனம் கடந்து டிசம்பர் மாதம் முதலே போராடி வருகின்றனர். ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீதான மோடி கும்பலின் அடிவருடி எடப்பாடி ஆட்சியின் பாசிச அடக்குமுறை உள்ளிட்ட எல்லாவிதமான அரச பயங்கரவாதத்தையும் எதிர்கொண்டு அஞ்சாமல் நாடெங்கும் மக்கள் ஒற்றுமையுடன் போராடி வருகின்றனர். குறிப்பாக பெண்களும் மாணவிகளும் தீரமிக்க போராட்டங்களில் ஈடுபட்டு நமது விடுதலைப் போராட்ட மரபை உயர்த்திப் பிடிக்கின்றனர். இதைக் கண்டு ஆத்திரமுற்ற ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட காவிக் கயவாளி கும்பல்கள் ரத்த வெறி பிடித்த ஓநாய் கூட்டம்போல டெல்லியில் இஸ்லாமியர்களின் ரத்தம் குடித்துள்ளது. இஸ்லாமிய வெறுப்பை கட்டியமைத்து, ‘பார்ப்பனிய வருணாசிரம கழிசடைத்தனத்தைஉயர்த்திப் பிடித்து, உள்நாட்டு நெருக்கடி, வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையை மூடிமறைத்து, அமெரிக்க மாமனின் காலை நக்கி பிழைக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக காட்டுமிராண்டி கும்பல்களை சவக்குழிக்கு அனுப்ப மக்கள் கிளர்ந்து எழுந்து விட்டார்கள்.
மோடி ஆட்சியின் டெல்லி வெறியாட்டத்திற்கும் அஞ்சாமல் போராட்டங்கள் மென்மேலும் தீவிரம் பெற்று வரும் நிகழ்வுகள், புதிய காலனிய-இந்து ராஜ்ஜிய-நூரம்பர்க் குடியுரிமை சட்டங்களுக்கும் மோடி ஆட்சிக்கும் அடிக்கப்பட்டுள்ள சாவு மணியாகும்.
டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். கும்பலால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இந்த ஓநாய் வேட்டையானது, காங்கிரஸ் கும்பலால் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளையும், குஜராத்தில் மோடி-அமித்ஷா கும்பலால் 2002ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளையும் நினைவூட்டுகிறது. 2002 குஜாரத் கலவரத்தின் போது குஜராத்தின் முதலமைச்சராக மோடியும், உள்துறை அமைச்சராக அமித்ஷாவும் இருந்தனர். தற்போது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கைகோர்த்து டெல்லியில் குஜராத் மாடல் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். மட்டுமின்றி அதை நாடெங்கும் கட்டியமைத்து கலவரங்களை தூண்ட முயற்சித்து வருகிறனர். இந்து மத வெறியன் எச்ச.ராஜா டெல்லியில் நடந்தது வண்ணாரப்பேட்டையிலும் நிகழும்என்று பகிரங்கமாக ட்விட்டரில் ஊளையிடுகிறான். கபோதி கல்யாண ராமன் என்பவன் வண்ணாரப்பேட்டை டெல்லி ஆவதற்கு முன்பு கலைந்து செல்லுங்கள்என்று முகநூலில் குரைக்கிறான். இந்துமத கோவில் கருவறைக்குள் நுழைய முடியாத அர்ஜுன் சம்பத் என்ற கயவனோ சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் கபாலீஸ்வரர் கோவில் இருந்ததுஎன்று கொக்கரிக்கிறான். கோவையில் மசூதி ஒன்றின் மீது இந்து மதவெறி கும்பல் பெட்ரோல் குண்டு வீசியுள்ளது. தமிழகத்திலும் குஜராத் மாடல்டெல்லி கலவரங்களை கட்டியமைக்க இந்து மதவெறி கழிசடைக் கும்பல் முயற்சித்து வருகிறது. ஆனால் இந்துத்துவப் பாசிச மோடியின் அடிவருடி எடப்பாடி ஆட்சியோ இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வருவதுடன் இஸ்லாம் வெறுப்பை விஷம் போல் கக்கி வருகின்றது. ‘70 ஆண்டுகள் இந்துகள் ஏமாந்துவிட்டோம், இனிமேல் சுட்டால் நாங்களும் சுடுவோம் என்று கூறி இந்து மதவெறி கலவரங்களுக்கு தூபம் போடுகிறார்’. அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

Monday, 13 July 2020

சுலைமானி படுகொலை அமெரிக்காவின் போர் வெறியும், கூர்மையடையும் ஏகாதிபத்திய முரண்பாடுகளும்


சுலைமானி படுகொலை அமெரிக்காவின் போர் வெறியும், கூர்மையடையும் ஏகாதிபத்திய முரண்பாடுகளும்
கடந்த மாதம் ஜனவரி 3ஆம் தேதி ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஈரானின் இசுலாமிய பாதுகாப்பு புரட்சிப் படையின் (IRGC - Islamic Revolutionary Guard Corps) தலைவர் காசோம் சுலைமானி  (Qasam Suloeimani) மற்றும் பாபுலர் மொபிலிசேஷன் குரூப்பின் (PMG - Popular Mobilization Group) ஒரு பகுதியான கடாய்ப் ஹிஜிபுல்லாஹ் அமைப்பின் (Kataib Hijbolloh) நிறுவனரும், ஈராக்கின் முக்கிய படைத் தளபதியுமான அல்முஹந்திஸ் (Al.Muhandis) இருவரும் போர் வெறி பிடித்த இனவெறி பாசிஸ்ட் டிரம்ப் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணான அமெரிக்க ஏகாதிபத்தியம் நிகழ்த்திய இந்த படுகொலைகள் மிகவும் வன்மையான கண்டனங்களுக்கு உரியதாகும்.

இதற்குப் பதிலடியாக ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மூளையில்  படுகாயம் அடைந்த 52 அமெரிக்க இராணுவ வீரர்களும் மரணப் படுக்கையில் உள்ளனர். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிகாவின் இராணுவ தளங்கள் மீது நடத்தப்படும் முதல் நேரடித் தாக்குதல் ஆகும்.இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் ஈரானில் 52 புராதன சமயச் சின்னங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். ஈரானும் “290 எண்ணிக்கையை (முன்பு ஈரானின் பயணிகள் விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதால் இறந்து போன ஈரானியர்களின் எண்ணிக்கை) மறந்துவிட வேண்டாம்என எச்சரித்துள்ளது. இந்த நிகழ்வுகள் இப்பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
இப்படுகொலைகளை ஈரான் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகவே ஈரான், ஈராக் நாடுகளும் சர்வதேசச் சமூகமும் பார்க்கிறது. ஆனால் இப்படுகொலைகளை நேரடியாக இசுரேலும், மறைமுகமாக நேட்டோ (NATO) முகாமும் ஆதரித்துள்ளன. இரசியா, சீனா, துருக்கி போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் உத்தரவின் பேரில் மோடி கும்பல் வாய்மூடிக் கிடக்கிறது; படுகொலைகள் குறித்து கண்டனம் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரிக்கின்றது. ஐ.நா.வோ கண்களை மூடிக்கொண்டது.

இப்படுகொலைகள் குறித்து ஈரானின் உயர்மட்டத் தலைவர் காமேனிய் (Khamenei) கூறுவதாவது: சுலைமானியை களத்தில் சந்திக்க முடியாததால் அவரை கோழைத் தனமாக அமெரிக்கா கொன்றுள்ளதுஎன்று கூறியுள்ளார்; மேலும் ஈரான் தக்க பதிலடி தரும்என்றும் கூறியுள்ளார். சுலைமானி கொல்லப்பட்ட இரண்டு நாட்களிலேயே ஈராக்கில் அமைந்துள்ள இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அவர் அமெரிக்கா ஒரு உலக வல்லரசுஎன்ற பிம்பத்திற்கு ஈரான் தந்துள்ள மிகப்பெரிய பதிலடி இதுஎன்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சுலைமானியின் கடந்த கால தீவிரவாத நடவடிக்கைகளுக்காகவே தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார்என்று அப்பட்டமாகப் போர் வெறியைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
சுலைமானி மற்றும் அல்முஹந்திஸ் இருவரின் இறுதி ஊர்வலத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் பங்கு பெற்றனர். ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என ஈராக் மக்கள் முழங்கினர். ஈரான் மக்களின் முழக்கமும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகவே இருந்தது. ஊர்வலத்தில் அமெரிக்க எதிர்ப்பு முழக்கங்கள் மட்டுமின்றி அந்நாடுகளில் 30 ஆண்டுகளாக தலைவிரித்தாடும் வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை எதிர்த்த முழக்கங்களும் இடம் பெற்றிருந்தன. அந்நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்து நெருக்கடியைத் தீவிரப்படுத்தியதே அமெரிக்கா தான். அவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் தள்ளிவிட்டு டிரம்ப் மக்கள் அந்த நாடுகளின் சிக்கன நடவடிக்கைகளால் தான் வீதியில் வந்து போராடுகின்றனர்என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். பேரழிவு தரக்கூடிய பொருளாதாரத் தடையை ஈரான் மீது  விதித்து விட்டு தற்போது அந்நாட்டு மக்களுக்காக கவலைப்படுவது போன்று நாடகமாடுகிறது பிணந்திண்ணிடிரம்ப் கும்பல்.
இது போன்ற முதலாளித்துவ நீதி பரிபாலணைகளுக்கு அப்பாற்பட்ட-சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளை அரங்கேற்றுவது அமெரிக்காவிற்கு புதியது ஒன்றுமல்ல; அதற்கு நீண்ட நெடியதொரு வரலாறு உண்டு. எனினும் இதை சட்ட பூர்வமாக்கியது ஒபாமாவே ஆகும். முந்தய ஒபாமா ஆட்சியில்தான் இதற்கான அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டது. அதனடிப்படையிலேயே தற்போது அதிபரின் உத்தரவின் பேரில்(Ordered by the president) இருவரும் சட்டரீதியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரானப் படுகொலை என்று ஐ.நா விற்கான சட்ட விரோதப் படுகொலைகளுக்கான சிறப்பு நல்லுறவு அதிகாரியான அக்னஸ் காலாமார்ட் (Agnes Callamard) கூறியுள்ளார்.

செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள் - பாகம் 6

செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள்

பாகம் 6

மனோகரன் கூறுகிறார்: டிராட்ஸ்கியின் கோஷ்டிவாதப் போக்கையும், எதிர்ப்புரட்சிகர போக்குகளையும் எதிர்த்துப் போராடுவது முதன்மையான கடமையே ஆகும். அத்தகையப் போராட்டமானது ஸ்டாலினுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகவும், சுய பரிசீலனை அடிப்படையிலும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாவோ கூறியது போல தோழர் ஸ்டாலின் 70 சதவீதம் புரட்சியாளராக இருந்தார். 30 சதவீதம் தவறிழைத்தார் என்ற நிலைபாட்டிலிருந்து படிப்பினைகளைத் தொகுத்து செயல்பட வேண்டும். அத்தகைய அணுகுமுறைதான் இன்று பல்வேறு சந்தர்ப்பவாதப் போக்குகளை முறியடித்து பாட்டாளிவர்க்க கட்சியைக் கட்டியமைக்க உதவும் என்பதே சரியான பாதையாகும். அதுவே எனது நிலைபாடாகும்.
டிராட்ஸ்கியை எதிர்த்துப் போராடுவதே ஸ்டாலினின் தவறுகளிலிருந்து பாடம் கற்பதாக இருக்க வேண்டும் என்கிறார் மனோகரன். அதாவது டிராட்ஸ்கியிசத்தை எதிர்ப்பதைவிட ஸ்டாலினின் தவறுகளிலிருந்து பாடம் கற்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு வழிவகுக்கும் என்கிறார். இது அப்பட்டமான டிராட்ஸ்கிய ஆதரவும் ஸ்டாலின் எதிர்ப்புமாகும். கலைப்புவாதத்தை முறியடிக்காமல் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டமுடியாது என்ற ஏ.எம்.கே நிலைபாட்டை மூடிமறைப்பதாகும்.
லெனினியத்தின் பெயரால் ஸ்டாலின் மீதும் மாவோ மீதும் ஏ.எம்.கே.வின் மீதும் மனோகரன் நடத்தும் தாக்குதல் மார்க்சிய லெனினியத்தின் மீதான தாக்குதலாகும்.
டிராட்ஸ்கியம் என்பது போலிப் புரட்சியின் சாரம்; தோல்வி மனப்பான்மையின் சாரம்; புரட்சிகர வாய்ச்சவடால்; திருத்தல்வாதம்; கலைப்புவாதம்; எதிர்ப்புரட்சிகரவாதம்; சிண்டிகலிச திரிபு; ஏகாதிபத்திய அடிமைத் தனம்; பாசிச ஆதரவு; கதம்பக் கோட்பாட்டு வாதம்; பாராளுமன்றவாதம்; சட்டவாதம்; இடது வலது சந்தர்ப்பவாதம்; எண்ணமுதல்வாதம்; தற்புகழ்ச்சி; கோழைத்தனம்; அராஜகவாதம்; துரோகத்தனம்; மார்க்சிய லெனினியத்தின் கொடிய விரோதி. இந்த மார்க்சிய விரோத குப்பைக்கூளங்களை சவக்குழிக்கு அனுப்ப வேண்டியது நமது முதன்மையான கடமையாகும்.
  ê ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுக்கும் டிராட்ஸ்கியத்தை சவக்குழிக்கு அனுப்புவோம்!
  ê மாபெரும் மார்க்சிய-லெனினிய ஆசான் ஸ்டாலின் சாதனைகளை உயர்த்திப் பிடிப்போம்!
  ê மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை ஏ.எம்.கே.போதனையை உயர்த்திப் பிடிப்போம்! அமைப்பை பாதுகாப்போம்!!
முற்றும்.
சமரன்,

மார்ச், 2020

செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள் - பாகம் 5

செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள்

பாகம் 5

 

மனோகரன் கூறுவது: ஸ்டாலினின் எதேச்சதிகாரப் போக்கும், பாசிசத்தை எதிர்த்த ஐக்கிய முன்னணி செயல்தந்திரத்தில் அவர் இழைத்த தவறுகளும் இடது வலது விலகலைக் கொண்டதேயாகும்.

அதன் விளைவாக போல்ஷ்விக் கட்சிக்குள்ளும், சோவியத் ஒன்றியத்திலும், உலக அளவிலும் கடும் பாதிப்புகளை கொண்டுவந்தது. வர்க்கப் போராட்டம் உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் நடத்துவதில் ஏற்பட்ட விலகல் போக்குகள் சோசலிசத்தை வெற்றிக்கு இட்டுச் செல்வதில் தடைகளை ஏற்படுத்தியது. இதைப் பயன்படுத்திக்கொண்டு முதலாளித்துவ சக்திகள் பலம்பெற்று முதலாளித்துவ மீட்சியை சோசலிச நாடுகளில் கொண்டுவந்தன.

இவை மாவோ மற்றும் ஏ.எம்.கே. நிலைபாட்டிற்கு எதிரானதாகும். மாபெரும் விவாதம் நூலில், ஸ்டாலினைப் பற்றிய பிரச்சினையின் மீது என்ற கட்டுரையில் பக்கம் 326-328இல் மாவோ கூறுவதாவது:

ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஸ்டாலினை முழுமையாக மறுதலித்ததின் மிகக் கடுமையான பின்விளைவுகளை ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசுக்குப் பிறகு நடந்த தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் முழுமையாகக் காட்டுகின்றன.

அது ஏகாதிபத்தியவாதிகளுக்கும், அனைத்து நாடுகளின் பிற்போக்காளர்களுக்கும் மிதமிஞ்சிய வரவேற்கத்தக்க ரசிய எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு தோட்டாக்களை வழங்கியுள்ளது. ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசுக்குப் பிறகு வெகு குறுகியகாலத்திலேயே குருச்சேவின், ஸ்டாலின்-எதிர்ப்பு ரகசிய அறிக்கையை ரசிய நாட்டிற்கும் கம்யூனிசத்திற்கும் எதிராக ஒரு உலகு தழுவிய பேரலையை உசுப்பிவிட ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். ஏகாதிபத்தியவாதிகளும் அனைத்து நாடுகளின் பிற்போக்காளர்களும், டிட்டோ கும்பலும், பல்வேறு ரகமான சந்தர்ப்பவாதிகளும் ரசிய நாட்டைத் தாக்குவதற்கும், சோசலிச முகாமைத் தாக்குவதற்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தாக்குவதற்கும் இந்த வாய்ப்பைத் தாவிப்பிடித்துக் கொண்டார்கள்; இவ்வாறு பல சகோதரக் கட்சிகளும். நாடுகளும் கடும் சங்கடங்களில் தள்ளப்பட்டன.

ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களால் ஸ்டாலினுக்கு எதிராகச் செய்யப்பட்ட வெறித்தனமான பிரச்சாரத்தினால் நீண்ட காலமாக அரசியல் சவங்களாகக் கிடந்த டிராட்ஸ்கியவாதிகள் மீண்டும் உயிர்பெற்று டிராட்ஸ்கிக்கு புனர்வாழ்வுகொடுக்கக் கூக்குரலிடுகின்றனர். 1961 நவம்பரில் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது பேராயத்தின் முடிவில் சொல்லிக் கொள்ளப்படும் நான்காவது அகிலத்தின் சர்வதேசச் செயலகம் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது பேராயத்திற்கும் அதன் புதிய மத்தியக் கமிட்டிக்கும் எழுதிய கடிதத்தில் ஸ்டாலினால் கொலை செய்யப்பட்டவர்களைக் கௌரவித்து ஒரு நினைவு சின்னம் எழுப்பப்படும் என்று 1937இல் டிராட்ஸ்கி சொன்னார் என்று குறிப்பிட்டிருந்தது. அது மேலும் தொடர்ந்து இன்று இந்தத் தீர்க்கத் தரிசனம் உண்மையாகியிருக்கிறது. உங்களது பேராயத்தின் முன்பு உங்கள் கட்சியின் முதல் செயலாளர் அந்த நினைவுச் சின்னத்தை நிறுவுவதாக உறுதியளித்துள்ளார்என்று குறிப்பிட்டது. இந்தக் கடிதத்தில், ஸ்டாலினால் பலி கொள்ளப் பட்டவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் நிறுவப்படும் நினைவுச் சின்னத்தின் மீது டிராட்ஸ்கியினுடைய பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்என்று குறிப்பாகவே கோரப்பட்டுள்ளது. டிராட்ஸ்கியவாதிகள் தங்கள் மகிழ்ச்சியை மறைக்கவில்லை. ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் துவங்கப்பட்டுள்ள ஸ்டாலின் எதிர்ப்புப் பிரச்சாரம் டிராட்ஸ்கியிசத்துக்கு கதவு திறந்து விட்டுள்ளதுஎன்றும் டிராட்ஸ்கியத்தையும் அதன் நிறுவனமான நான்காவது அகிலத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு மாபெரும் உதவியைச் செய்திருக்கிறதுஎன்று அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், ஸ்டாலினை முழுவதுமாக மறுத்ததற்கு வெளியில் சொல்ல முடியாத உள்நோக்கம் இருக்கிறது.

ஸ்டாலின் 1953இல் இறந்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு 20-வது பேராயத்தில் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அவரை மூர்க்கத்தனமாகத் தாக்கினார்கள். அவர் மறைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 22-வது பேராயத்தில் மீண்டும் அதே போல் செய்தனர். அவரது பூத உடலை எடுத்து எரித்தனர். ஸ்டாலின் மீதான மூர்க்கத்தனமான தாக்குதலைத் திரும்பவும் தொடங்குவதன் மூலம் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உலகெங்கிலுமுள்ள மக்கள் மத்தியிலும் ரசிய நாட்டிலுள்ள மக்கள் மத்தியிலும் அந்த மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளன் பெற்றுள்ள அழிக்கமுடியாத செல்வாக்கினைத் துடைத்தெறிய முனைகிறார்கள் இதன் மூலம் திருத்தல்வாதப் பாதையை நடைமுறைப்படுத்துவதற்காக, ஸ்டாலின் பாதுகாத்து வளர்த்த மார்க்சிய - லெனினியத்தை மறுத்துவிட முனைகிறார்கள். அவர்களுடைய திருத்தல்வாதப் பாதை குறிப்பாக 20-வது பேராயத்தில் தொடங்கி 22-வது பேராயத்தில் முழுமையாக முறைப்படுத்தப்பட்டு விட்டது. ஏகாதிபத்தியம், யுத்தம் மற்றும் சமாதானம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், காலனி, அரைக் காலனி நாடுகளில் புரட்சி, பாட்டாளிவர்க்கக் கட்சி இன்ன பிறவற்றின் மீதான மார்க்சிய-லெனினியக் கொள்கைகளை அவர்கள் திருத்தியது ஸ்டாலினை அவர்கள் முழுவதுமாக மறுதலித்ததுடன் பிரிக்க முடியாதபடி பிணைக்கப் பட்டிருப்பதை நிகழ்ச்சிகள் மேலும் தெளிவாகக் காட்டுகின்றன.

ஸ்டாலின் ஒரு எதேச்சதிகாரவாதி என்று கூறுவது மார்க்சியத்திற்கு எதிரானது, அவர் காலத்தில் நடந்த தவறுகளுக்கு அவரை மட்டும் பொறுப்பாக்குவது தனி நபர் தாக்குதல் என்றும் மார்க்சிய லெனினியத்திற்கு விரோதமானதுஎன்றும் தோழர் ஏ.எம்.கே. குணாளன் கலைப்புவாதம் குறித்த 07.02.2014 அமைப்பு தீர்மானம் தீர்மானத்தில் பின்வருமாறு கூறுகிறார்:

ரஷ்யாவில் ஸ்டாலின் மீதான தனிநபர் தாக்குதல் நடத்திதான் ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியை முதலாளித்துவ கட்சியாக குருச்சேவ் கும்பல் மற்றியமைத்தது.ஸ்டாலின் மரணத்திற்குப்பிறகு இருந்த சூழ் நிலைமைகளைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட குருச்சேவ் கும்பல், ஸ்டாலின் காலத்தின் களையெடுப்பு சம்பவத்தில் நடந்த சில தவறுகளை சாக்காக வைத்துக்கொண்டு தனி நபர்வழிபாடு மற்றும் ஸ்டாலின் வரட்டுவாதத்தை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்லி, குருச்சேவ் கும்பல் 1956இல் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் 20-வது காங்கிரசின் மூலம் முதலாளித்துவப் பாதையை சோவியத் யூனியனில் திறந்துவிட்டது”.

குருச்சேவ் கும்பலின் அத்தகைய தனி நபர் மீதானத் தாக்குதல் பற்றி தோழர் மாவோ பின்வருமாறு விமர்சனம் செய்தார்.

பாட்டாளி வர்க்கக் கட்சியின் விமர்சனம், சுயவிமர்சனம் என்ற அணுகு முறைகளுக்கு மாறாக ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அனுபவங்களை தொகுப்பதற்கு மாறாக, ஸ்டாலினை மட்டுமே குற்றம் சுமத்தி, ஸ்டாலினை எதிரியாக்கினார்என்று மாவோ விமர்சனம் செய்தார்.

அதாவது சோவியத் யூனியனில் தோழர் லெனினுக்குப்பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்பட்ட விலகல் போக்குகளை வரலாற்று ரீதியாக பரிசீலனை செய்து, விலகல்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதை போக்கும் வழி முறைகளுக்கு மாறாக ஸ்டாலின் என்ற தனி நபரின் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டு குருச்சேவ் கும்பல் முதலாளித்துவ பாதையை கட்டவிழ்த்துவிட்டது.

இவ்வாறு தனிநபர்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட விளைவுகள் பாட்டாளிவர்க்க இயக்கத்திற்கு மிகப்பெரும் கேடுகளைக் கொண்டுவந்தது.

குருச்சேவ் கும்பலின் எதிர்புரட்சிகர தத்துவங்களான சமாதான சகவாழ்வு”, “அமைதிவழி போட்டி”, “அமைதிவழி மாற்றம்போன்றவற்றின் மூலம் தங்களது திருத்தல்வாதத்தை வளர்த்தது மட்டுமல்லாது, “எல்லோருக்குமான அரசுமற்றும் எல்லோருக்குமான கட்சிபோன்றத் தத்துவங்களின் அடிப்படையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சோவியத் யூனியனுக்குத் தேவையில்லாத ஒன்று என்ற போலிக் கம்யூனிஸ்டுக் கொள்கை ஒன்றையும் குருச்சேவ் கும்பல் 22-வது மாநாட்டில் முன்வைத்தது.

முதலாளித்துவப் பாதையை மீண்டும் கொண்டுவந்து, சோவியத் யூனியன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலிருந்து முதலாளித்துவ சர்வாதிகாரத்துக்கு மாற்றப்பட்டது. 1964இல், கிட்டத்தட்ட அனைத்து வகையிலும் திருத்தல்வாதக் கட்சியாக கட்சி மாற்றப்பட்டுவிட்டது. சோவியத் யூனியன் சோசலிச நாடாக மாறுவது தடுக்கப்பட்டு சமூக -ஏகாதிபத்திய நாடாக மாற்றப்பட்டது.

ஸ்டாலினின் வரட்டுவாத மார்க்சியத்துக்கும் தனி நபர் வழிபாட்டுக்கும் எதிரான போராட்டம் என்ற பெயரிலும், ஸ்டாலினிசத்தை ஒழிப்பது என்ற பெயரிலும் மார்க்சிய - லெனினியத்தின் மீது நவீன திருத்தல்வாதமும் ஈரோ கம்யூனிசம் மற்றும் புதிய இடதுகள் தொடுத்தத் தாக்குதல் சர்வதேச கம்யூனிஸ்டு இயக்கத்தில் பிளவுக்கும், கலைப்பு வாதத்துக்கும் வழிவகுத்தது.

மேற்கூறப்பட்ட இரண்டு போக்குகளுமே -1) குருச்சேவ் திருத்தல்வாதம், 2) புதிய இடது கலைப்புவாதம்-முதலாளித்துவ சித்தாந்தங்களாக இருந்த போதிலும் முதலாவது போக்கு நவீன திருத்தல்வாதமாக துவங்கி கலைப்புவாதத்தில் முடிந்தது. இரண்டாவது போக்கு ஆரம்பத்திலிருந்தே கலைப்புவாதமாக தொடர்கிறது.

ஸ்டாலின் எதிர்ப்பின் பெயரால் குருச்சேவ் திரிபுவாதிகள் வர்க்கப்போராட்டம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் மீது நடத்திய தாக்குதல்களை முதலாளித்துவ அறிவுஜீவிகள் பெரிதும் வரவேற்றனர். இவர்கள் சித்தாந்தத் துறையில் வர்க்கப் போராட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் எதிராக சுதந்திரம்’, ‘மானுடத்துவம்மற்றும் அன்னியமாதல்ஆகியவற்றை முன்னுக்கு கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

குருச்சேவ் கும்பல் அனைத்து மக்களின் அரசுஎன்ற போர்வையில் இரசியாவின் கம்யூனிஸ்டுக் கட்சியின் பாட்டாளிவர்க்க குணாம்சத்தை மாற்றியது. பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிக்கட்சிக்கு பதிலாக அனைத்து மக்களின் கட்சிஎன்ற போர்வையில் பாட்டாளி வர்க்கக் கட்சியை முதலாளித்துவக் கட்சியாக மாற்றியமைத்தது.

முழுமையான கம்யூனிஸ்டுக் கட்டுமானம்என்ற போர்வையில் முதலாளித்துவத்தை மீட்டமைக்க வழிசெய்தது. பழைய திருத்தல்வாதிகளைப் போலவே புதிய திரிபுவாதிகளும் லெனின் வரையறைத்துச் சொன்னது போல்....

யதார்த்தத்தில் அவர்கள் முதலாளித்துவத்தின் ஒரு அரசியல்பிரிவு...தொழிலாளி வர்க்க இயக்கத்தில் அதன் செல்வாக்கை பரப்புகின்றவர்களும், அதன் ஏஜெண்டுகளுமாவர்”.

மாநாடு நடத்துவதற்கான காரணத்திற்கு தனிநபரை பொறுப்பாக்குவது எத்தகைய தீய விளைவுகளை உருவாக்கும் என்பதை சோவியத்தில் ஸ்டாலின் மீதான குருச்சேவ் கும்பலின் தனிநபர் தாக்குதல் நல்ல பாடமாக அமைந்துள்ளது. அத்தகைய போராட்டம் திருத்தல்வாதத்திற்கும் கலைப்புவாதத்திற்குமே வலுசேர்க்கும்”.

எனவே ஸ்டாலினின் எதேச்சதிகார எதிர்ப்பு என்ற பேரில்தான் ரஷ்யாவில் முதத்துவ மீட்சியை குருசேவ் கும்பல் கொண்டுவந்தது. ஆனால் மனோகரன், ஸ்டாலினின் எதேச்சதிகாரமும் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தில் அவர் இழைத்த தவறுகளும்தான் முதலாளித்துவ மீட்சிக்குக் காரணம் என்கிறார். இது ஏ.எம்.கே நிலைபாட்டிற்கு எதிரானதாகும். இது குறித்து கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைபாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும் என்ற கட்சி ஆவணத்தின் முன்னுரையிலும் எழுதியுள்ளார். (பக்கம் வீஜ்).

மனோகரன் ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சிக்கான ஆய்வை ஸ்டாலினிடமிருந்து துவங்குகிறார். ஆனால் மாவோவும், ஏ.எம்.கே.வும் டிராட்ஸ்கியிடமிருந்தும் குருசேவிடமிருந்தும் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டிலிருந்தும் துவங்குகிறார்கள். ஸ்டாலின் பற்றிய நினைவு நீடூழி வாழ்க! என்ற சமரன் கட்டுரையில் டிராட்ஸ்கியின் முதலாளித்துவ மீட்சிக்கான குழிபறிப்பு சதிகள் பற்றி ஏ.எம்.கே. கூறுவதாவது: எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்டாலின் திரிபுவாதத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் இடது சந்தர்ப்ப வாதத்தையும், எதிர்த்துப் போராடிய ஒரு மாபெரும் போராளியாவார். மார்க்சிய-லெனினியத்தின் தூய்மையையும், பட்டாளி வர்க்க சர்வதேசிய கோட்பாடுகளையும் பாதுகாப்பதற்காகப் போராடினார். அவர் எப்போதும் கொள்கைகளுக்காகப் போரிட்டார். எனவே தான் அவர் மார்க்சிய-லெனினிய வாதிகளின் நினைவில் நீங்கா நிலை பெற்றார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியையும், சோவியத் நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் பலவீனப்படுத்தி அழித்துவிட்டு முதலாளித்துவத்தை மீட்பதற்காக டிராட்ஸ்கி புகாரின் காமினோவ், ராடெக் போன்றோர் செய்த குழிபறிப்பு வேலைகளையும், சதிகளையும் அவர் தகர்த்தெறிந்தார். ஸ்டாலின் கட்சியைக் கட்டியமைப்பதற்கானக் கோட்பாடுகளைப் பாதுகாத்தார். ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டையும், பாட்டாளி வர்க்கத் தொகையின் அதிகரிப்பையும், கட்சியைப் போல்ஷ்விச மயமாக்குவதையும் அவர் ஆதரித்தார். உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைப்பதற்கும், வளர்ப்பதற்கும் கவனமாக உதவிபுரிந்தார். நவீன திரிபு வாதத்தை எதிர்த்து சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவர் தலைமை தாங்கினார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரௌடர் என்பவரின் திரிபு வாதத்தை நிராகரிப்பதற்கான தத்துவப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பிறகு டிட்டோவின் திரிபு வாதம் தலை தூக்கிய போது அதை எதிர்த்து சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தலைமைத் தாங்கினார்”. என்கிறார்.

மேலும் அதே கட்டுரையில் லெனினினுடைய சீடரும், உண்மையாகப் பின்பற்றி வரும், அவருடைய லட்சியப் பயணத்தை தொடர்ந்தவருமான ஸ்டாலின் 1924ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் நாள் லெனின் மறைந்த பிறகு ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவ்வாண்டிலேயே தோழர் ஸ்டாலின், லெனினியத்தின் அடிப்படைகள் (Foundation of Leninism) என்னும் ஒரு முக்கியமான தத்துவ நூலைப் படைத்து வெளியிட்டார். சோவியத் அதிகாரத்தை உருகுலையச் செய்து முதலாளித்துவத்தை மீட்டு, சோவியத் மக்களை அடிமைப்படுத்தும் முயற்சியில் டிராட்ஸ்கியம் தொடுத்த தாக்குதலிலிருந்து மார்க்சிய லெனினியத்தின் தூய்மையை பாதுகாக்க தோழர் ஸ்டாலினின் அந்நூல் பேராயுதமாக விளங்கியது.

1926-ம் ஆண்டில் தோழர் ஸ்டாலின், லெனினியத்தின் பிரச்சினைகளைப் பற்றி (On the Problems of Leninism) என்ற ஒரு தத்துவ நூலை வெளியிட்டார். அந்நூல் டிராட்ஸ்கியத்தையும் அதன் மிச்ச சொச்சங்களையும் தரமட்ட மாக்குவதற்காக தொடர்ந்து நடத்திய தத்துப் போருக்கு பேருதவியாய் அமைந்தது.

1938-ம் ஆண்டில், தோழர் ஸ்டாலின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) யின் வரலாறு என்னும் நூலை வெளியிட்டார். இப்புத்தகம் சர்வ தேசிய பாட்டாளி வர்க்கத்திற்கு கிடைக்கப் பெற்ற அரியதொரு போராட்டத்தின் அனுபவத் தொகுப்பான களஞ்சியமாகக் கிடைக்கப் பெற்றது. இப்புத்தகத்தின் வெளியீடு போல்ஷ்விக் கட்சியின் தத்துவ வாழ்விலும், சர்வ தேசிய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் கூட ஒரு மைல் கல்லாக அமைந்தது. புதிய சூழ்நிலைமைகளில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமாக மார்க்சியம் வளர்ந்ததையும், மகத்தான அக்டோபர் புரட்சியின் வெற்றியால் மார்க்சியம் பரவி வளர்ந்ததையும், ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்க புரட்சியின் சகாப்தத்தின் மார்க்சியத்தையும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு என்னும் புத்தகம் எடுத்துக் காட்டிற்று”.

மேலும், மாபெரும் விவாதம் நூலில், தோழர் மாவோ லெனினியமா? சமூக ஏகாதிபத்தியமா? என்ற கட்டுரையில் கூறுவதாவது:

உலகின் முதலாவது சோசலிச நாடான ரசியாவில்,முதலாளித்துவ மீட்சி எப்படி நடந்தேறியது? அது சமூக-ஏகாதிபத்தியமாக எப்படி மாற முடிந்தது? நாம் மார்க்சிய- லெனினியக் கருத்தை, குறிப்பாகப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்ந்து நடத்துவது பற்றிய தோழர் மாசேதுங் சிந்தனையைக் கொண்டு, இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து பார்த்தால், அது பிரதானமாக ரசியாவில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு விளைவாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ரசியாவில், கட்சியில் அதிகாரத்தில் இருந்து முதலாளித்துவப் பாதையை மேற்கொள்ளும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் கட்சி மற்றும் அரசு தலைமையை அபகரித்ததன் விளைவாகும். அதாவது, ரசியாவின் முதலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை அபகரித்ததன் விளைவாகும். அதே வேளையில், அது உலக ஏகாதிபத்தியம் அழிவிலிருந்து தன்னைக் காப்பாற்றுவதற்காக, ரசியத் திரிபுவாதத் துரோகக் கும்பலின் மூலம் ரசியாவில் சமாதானப் பரிணாமகொள்கையை முன் நடத்தியுள்ளதன் விளைவாகும் என்றும் புரிந்து கொள்ள முடியும்.

முதலாவது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார நாடாக ரசியா இருந்ததால், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தி, முதலாளித்துவ மீட்சியைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றிய அனுபவம் அதற்குக் குறைவாயிருந்தது. இத்தகைய நிலைமைகளில், ரசியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பதுங்கியிருந்து அதிகாரத்தில் இருந்த முதலாளித்துவப் பாதையாளரான குருசேவ், ஸ்டாலின் மறைவுக்குப்பின் விஷம் கக்கும் முறையில் ஸ்டாலினை அவதூறு செய்யும், ரகசிய அறிக்கை ஒன்றைத் திடீர்த்தாக்குதல் தொடுக்கும் முறையில் வெளியிட்டு, பல்வகை வஞ்சகத்தனமான சூழ்ச்சி நடவடிக்கைகளையும் கையாண்டு, ரசியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு அதிகாரத்தை அபகரித்தார். இது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முதலாளி வர்க்கச் சர்வாதிகாரமாக மாற்றிய எதிர்ப்புரட்சி ஆட்சிக் கவிழ்ப்பாகும்; சோசலிசத்தைத் தூக்கியெறிந்து, முதலாளித்துவத்துக்குப் புத்துயிர் அளித்த எதிர்ப்புரட்சி ஆட்சிக் கவிழ்ப்பாகும்”.

மாவோ முதலாளித்துவ மீட்சிக்கு ஸ்டாலின்தான் காரணம் என்று சொல்லவில்லை. ஸ்டாலினிச எதிர்ப்பு எனும் பேரால் குருசேவ் கும்பல் நவீன திருத்தல்வாதத்தை கொண்டுவந்து ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சிக்கு வழிவகுத்தார்கள் என்றே கூறுகிறார். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்தது என்று கூறுகிறார். ஆகவேதான் குருசேவ் கும்பலை புதியகாலனிய தாசர்கள் என்கிறார்.

தொடரும்...

சமரன், 

பிப்ரவரி, 2020