Thursday, 14 November 2019

சமரன் - நவம்பர் 2019 (மாத இதழ்)


நவம்பர் 25
ஏ.எம்.கே. நினைவு நீடூழி வாழ்க!      

தோழர் ஏ.எம்.கே.விற்கு முதலாம் ஆண்டு
சிவப்பஞ்சலியை செலுத்துகிறான் சமரன்!

மார்க்சிய லெனினிய புரட்சியாளர் ஏ.எம்.கே அவர்களின் நினைவு தினமான நவம்பர் 25 நாளானது, தன் வாழ்நாள் முழுதும் மார்க்சியத்தை பாதுகாத்து வளர்த்தெடுக்கவும், அமைப்பை புரட்சிகர ஸ்தாபனமாக நிலைநிறுத்தவும் அயராது பாடுபட்டார் ஏ.எம்.கே அவரது தியாகங்களையும், இலட்சியங்களையும் உயர்த்திப் பிடித்து புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க அவர் வழியில் சபதம் ஏற்க அணிதிரளும் நாளாகும்.
ஏகாதிபத்திய நிதி மூலதன நெருக்கடியால் அமெரிக்க, சீன-ரஷ்ய ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையில் முரண்பாடுகள் கூர்மையடைந்து, உலகை மறுபங்கீடு செய்வதற்கான பனிப்போர் நிலைமைகள் உருவாகியுள்ளன. இதனால் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியானது பாசிசத்தைத்  தீவிரப்படுத்துகிறது.

இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளில் மேற்கூறிய சர்வதேச நிலைமைகளிலிருந்து பாசிசம் தீவிரமாக கட்டியமைக்கப்படுகிறது. மோடி ஆட்சி அமெரிக்காவின் புதிய காலனிய நலன்களிலிருந்து சாதி, மத, தேசிய இன பாசிச ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு மக்கள் போராட்டங்களை திசைதிருப்பி வருகிறது.

எனவே, தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், தேசிய முதலாளிகள், பரந்துபட்ட ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு முன்னணியை கட்டியமைப்பதும் அதை ஏகாதிபத்திய எதிர்ப்பு தேச விடுதலை முன்னணியாக வளர்த்தெடுப்பதும் அவசியமாகும்.

இக்கடமைகளை நிறைவேற்ற ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டியமைப்பது இன்றியமையாததாகும். அதற்கு வலது திருத்தல்வாத, இடது சந்தர்ப்பவாத, டிராட்ஸ்கியவாதம், காவுத்ஸ்கியவாதம், புதிய இடது உள்ளிட்ட கலைப்புவாத போக்குகளை முறியடிக்க வேண்டும்.

ஆகவே உலகளாவிய உண்மையாகிய மார்க்சிய-லெனினியத்தை ஏ.எம்.கே. வழியில் உயர்த்திப் பிடித்து புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கவும் புரட்சிகர கட்சியை கட்டவும் ஒவ்வொருவரும் சபதமேற்க அணிதிரள்வதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். நவம்பர் புரட்சியின் இலட்சியங்களை உயர்த்திப் பிடிப்பதன் பொருளும் இதுவே ஆகும்.

-          சமரன், நவம்பர் 2019

No comments:

Post a Comment